Author Archives: Jafar

வியாபாரத்தில் உண்மை பேசுவதின் சிறப்பு.

980. ”விற்பவரும், வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசி(க் குறைகளைத்) தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2082 ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on வியாபாரத்தில் உண்மை பேசுவதின் சிறப்பு.

வாங்குபவர் விற்பவருக்கு முறித்துக் கொள்ளலாம் என்ற உரிமை.

978. ”(எப்போது வேண்டுமானாலும் முறித்துக் கொள்ளலாம் என்று) உரிமை வழங்கப்பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியாபாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை ஒவ்வொருவரும் முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2111 இப்னு உமர் (ரலி). 979. ”இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் வியாபாரம் செய்தால் அவ்விருவரும் பிரியாமல் சேர்ந்து இருக்கும்வரை … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on வாங்குபவர் விற்பவருக்கு முறித்துக் கொள்ளலாம் என்ற உரிமை.

உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் காயமடைந்தபோது…

கேள்வி எண்: 50. உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் காயமடைந்தபோது நிராகரிப்பாளர்களைப் பற்றிப் பின்வருமாறு தம்முடைய வேதனையை வெளிப்படுத்தினார்கள் ‘தம்முடைய நபியைக் காயப்படுத்திய சமூகம் எப்படி வெற்றியடையும்?’ இதைக் குறித்து இறங்கிய திருமறை வசனம் எது?

Posted in கேள்வி பதில் | Comments Off on உஹது போரில் நபி (ஸல்) அவர்கள் காயமடைந்தபோது…

கைக்கு வந்து சேரும் முன்பு விற்காதே.

975. ”கைக்கு வந்து சேருவதற்கு முன் விற்கக் கூடாது!” என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தது, உணவுப் பொருட்களுக்குத் தான்! (ஆயினும்) எல்லாப் பொருட்களுக்கும் இவ்வாறுதான் என்று கருதுகிறேன்!” புஹாரி :2135 இப்னு அப்பாஸ் (ரலி) 976. ”ஒருவர் உணவுப் பொருளை வாங்கினால் அது (முழுமையாக) அவரின் கைக்கு வந்து சேராமல் அதை அவர் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on கைக்கு வந்து சேரும் முன்பு விற்காதே.

சந்தைக்கு வரும் பொருளை இடைமறித்து வாங்காதே.

973. ”(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2158 இப்னு அப்பாஸ் (ரலி). கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!” என்பதன் பொருள் என்ன?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் ‘இடைத் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on சந்தைக்கு வரும் பொருளை இடைமறித்து வாங்காதே.

சந்தைக்கு வரும் வியாபாரிகளை வழியில் சந்தித்து சரக்கு வாங்காதே.

972. ”மடி கனக்கச் செய்யப்பட்ட ஓர் ஆட்டை யாரேனும் வாங்கி, அதைக் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் அத்துடன் ஒரு ஸாவு பேரீச்சம் பழம் சேர்த்துக் கொடுக்கட்டும்! மேலும், நபி (ஸல்) அவர்கள் (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதைத் தடுத்தார்கள்!” புஹாரி :2149 இப்னு மஸ்ஊத் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on சந்தைக்கு வரும் வியாபாரிகளை வழியில் சந்தித்து சரக்கு வாங்காதே.

பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு நிகரானவனை நீர் அறிவீரா?

2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு நிகரானவனை நீர் அறிவீரா?

பிறர் வியாபாரப் பேச்சில் திருமணப் பேச்சில் குறுக்கிடாதே.

969. ”ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது!”என நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். புஹாரி : 2139 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) . 970. ”(சரக்குகளை ஏற்றிக் கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்காதீர்கள்! ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on பிறர் வியாபாரப் பேச்சில் திருமணப் பேச்சில் குறுக்கிடாதே.

கருப்பையிலிருக்கும் கால்நடையை விற்கத் தடை.

968. ”நபி (ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! ‘இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)’ என்று செய்யப்படும் (ஹபல் இல் ஹபாலா) வியாபாரமே இது!” புஹாரி :2143 இப்னு உமர் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on கருப்பையிலிருக்கும் கால்நடையை விற்கத் தடை.

முலாமஸா முனாபதா முறை விற்பனைக்குத் தடை.

965. ”நபி (ஸல்) அவர்கள் ‘முனாபதா, முலாமஸா’ ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்!” புஹாரி: 2146 அபூஹூரைரா (ரலி). 966. ”ஈதுல் ஃபித்ரிலும் (நோன்புப் பெருநாளிலும்) ஈதுல் அல்ஹாவிலும் (ஹஜ்ஜுப் பெருநாளிலும்) நோன்பு நோற்பதும் முலாமஸா, முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன!”என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். புஹாரி :1993 அபூஹூரைரா (ரலி). … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on முலாமஸா முனாபதா முறை விற்பனைக்குத் தடை.