Author Archives: Jafar

கடனுக்காக பொருளை அடமானம் வைத்தல்.

1033. ”நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தம் இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்!” புஹாரி :2068 ஆயிஷா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on கடனுக்காக பொருளை அடமானம் வைத்தல்.

அல்லாஹ்வின் பகைவர்களுடைய சாட்சிகள்!

மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். (41:19)இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். (41:20)அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் பகைவர்களுடைய சாட்சிகள்!

வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிக் கொடுத்தல்.

1032. ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது’ என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், ‘அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிக் கொடுத்தல்.

விற்ற ஒட்டகத்தில் சவாரி செய்யலாமா?

1029. (ஒரு போரிலிருந்து திரும்புகையில்) நான் களைப்படைந்து விட்ட என்னுடைய ஒட்டகம் ஒன்றில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சென்று அதை அடித்தார்கள். மேலும், அதற்காக பிரார்த்தித்தார்கள். உடனே, அது இதற்கு முன் இதுபோல் எப்போதும் நடந்ததில்லை என்னும் அளவிற்கு வேகமாக நடக்கத் தொடங்கியது. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘இதை எனக்கு … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on விற்ற ஒட்டகத்தில் சவாரி செய்யலாமா?

‘ஜகாத்துல் பித்ர்’ எதற்காக?

கேள்வி எண்: 56. எதற்காக ‘ஜகாத்துல் பித்ர்’-ஐ நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்?

Posted in கேள்வி பதில் | Comments Off on ‘ஜகாத்துல் பித்ர்’ எதற்காக?

சந்தேகமளிப்பதை விடுக.

1028. அனுமதிக்கப் பட்டவையும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலலோர் அறிய மாட்டார்கள். எனவே, சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திற்கும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார். சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார். அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on சந்தேகமளிப்பதை விடுக.

மனைவியும், மக்களும்…!

இறைவன் எல்லா வகையான தேவைகளிலிருந்தும் விடுபட்டவன்; தூய்மையானவன் என்பதை யாரும் மறுப்பது இல்லை. என்றாலும் அறிந்தோ அறியாமலும் இந்த இறைவனின் தூய்மைக்கு மாசு கற்பிக்கும் வேலை சில மதங்களிலும் நடைபெற்றுள்ளது. அதாவது, ‘இறைவனுக்கு மனைவி உண்டு; மக்கள் இருக்கிறார்கள்’ என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக:

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on மனைவியும், மக்களும்…!

உணவு தானியங்களை விற்றல்.

1024. நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! ‘இல்லை இறைத்தூதர் அவர்களே! மட்டமான பேரீச்சம் பழத்தில் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on உணவு தானியங்களை விற்றல்.

தங்கத்துக்கு பகரம் வெள்ளியை விற்றல் பற்றி..

1022. பராஉ இப்னு ஆஸிப் (ரலி), ஸைத் இப்னு அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார்கள் என அவ்விருவரும் பதில் கூறினார். பிறகு இருவரும் மற்றவரைச் சுட்டிக் காட்டி, ‘இவர் என்னைவிடச் சிறந்தவர்’ என்றனர். புஹாரி :2180 அபூ அல் மின்ஹால் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தங்கத்துக்கு பகரம் வெள்ளியை விற்றல் பற்றி..

வட்டிக்கு வழிவகுக்கும் சில காரியங்கள்.

1021. ”சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்கச் சரியாகவே தவிர வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 2177 அபூ ஸயீத் (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on வட்டிக்கு வழிவகுக்கும் சில காரியங்கள்.