கேள்வி எண்: 56. எதற்காக ‘ஜகாத்துல் பித்ர்’-ஐ நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்?
பதில்: ‘நோன்பாளியின் வீண் செயல்கள் மற்றும் தவறுகளிலிருந்து தூய்மைப் படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தருமத்தைக் கடமையாக்கினார்கள். எவர் அதனைத் தொழுகைக்கு முன்பு கொடுத்து விடுவாரோ அது பெருநாள் தருமமாக ஏற்றுக் கொள்ளப்படும். எவர் அதனை பெருநாள் தொழுகைக்குப் பின் கொடுப்பாரோ, அது தர்மங்களில் ஒரு தர்மமாக ஆகிவிடும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அபூதாவூத், இப்னுமாஜா.