Author Archives: Jafar

அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.

இந்த நூலின் முன்னுரையில், மேலை நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைமையையும், இஸ்லாத்தின் எதிர்காலத்தையும் சுருக்கமாக விவாதித்தோம். இந்தப் பகுதியில் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள மனிதர்களின் நிலைமையையும், சாதாரணமாக மனிதர்களின் நிலைமை எத்தன்மையதாக இருக்கின்றது என்பதையும், உலகைப்பற்றி இஸ்லாம் சொல்லும் நியதிகள் என்னவென்றும் பார்ப்போம்.

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.

அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.

இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில: 1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே! 2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான்.

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.

அத்தியாயம்-2 இஸ்லாம் அமைத்துத்தரும் சமுதாயம்.

சமுதாயம் என்ற சொல்லுக்கு மிக விரிந்த விளக்கங்கள் உண்டு. நாம் சமுதாய அமைப்பின் அடிப்படைகளையே இங்கே எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம். ஆகவே சமுதாய அமைப்பின் அடிப்படைகளை மட்டும் எடுத்துச் சொல்லும் சில இலக்கணங்களை மட்டுமே இங்கே தருகின்றோம் சமுதாயம் என்பது எல்லாவகையான உறவுகளையும் உள்ளடக்கியதாகும். அது தனி மனிதர்களுக்கிடையே ஏற்படும் அந்தரங்கமான உறவுகள், உணர்வுகள், ஒழுக்கக் … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 இஸ்லாம் அமைத்துத்தரும் சமுதாயம்.

அத்தியாயம்-2 சாந்தி (அமைதி) இஸ்லாத்தின் பார்வையில்

இஸ்லாம், சாந்தி அல்லது அமைதி என்பதை எப்படி அணுகுகின்றது என்பதை அறிந்துகொள்ள ஒருவர் இஸ்லாத்தின் சில அடிப்படைகளை மட்டும் கவனித்தால் போதுமானது. சாந்தி – சமாதானம் (மன அமைதி) இஸ்லாம் இவை அனைத்தும் ஒரே வேரிலிருந்து பிறந்தவைகளே! ஆதலால், இவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று பிணைந்தவைகளே! இறைவனின் அழகிய பெயர்களில் ஒன்று சாந்தி – அமைதி. முஸ்லிம்கள் … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 சாந்தி (அமைதி) இஸ்லாத்தின் பார்வையில்

அத்தியாயம்-2 ’சகோதரத்துவம்’ இஸ்லாத்தின் தனித்தன்மை.

மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே என்பது இஸ்லாத்தின் பிரிதொரு பிரிக்க முடியாத அடிப்படையாகும். ‘சுதந்திரம்’ ‘சமத்துவம்’ இவைகள் எந்த அடிப்படையில் அமைந்துள்ளனவோ அதே அடிப்படையில் தான், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அமைந்துள்ளது. சுதந்திரம், சமத்துவம் என்ற கொள்கைகள் அமைந்துள்ள அடிப்படைகளைத் தவிர இன்னும் சில அடிப்படைகள் இதற்குண்டு. அவை, இறைவன் ஒருவனே, அவன் எங்கும் நிறைந்து நிற்பவன். அவன் … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 ’சகோதரத்துவம்’ இஸ்லாத்தின் தனித்தன்மை.

அத்தியாயம்-2 இஸ்லாம் தரும் சமத்துவம்.

சமத்துவம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்றாகும். இஸ்லாம் தரும் சமத்துவத்தைக் குறிப்பிட சமத்துவம் என்ற வார்த்தையைவிட ‘நியாயம், நேர்மை’ என்ற வார்த்தைகளே பொருத்தமானதாக அமையும். It is Not Equality But Equit. இங்கே சமத்துவம் என்பதை ஒரே மாதிரியானது அல்லது ஒன்றைப்போல் மற்றொன்று என்று பொருள் கொண்டுவிடக் கூடாது. இஸ்லாம், இறைவனின் முன் அனைவரும் … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 இஸ்லாம் தரும் சமத்துவம்.

அத்தியாயம்-2 சுதந்திரம்.

சுதந்திரம் என்பது எப்போதுமே தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. பல நேரங்களில் அது தவறாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது எந்த மனித சமுதாயத்திற்கும் பூரணமானதொரு சுதந்திரத்தை இந்த வார்த்தைக்கு இருக்கின்ற அதே பொருளில் தந்திட முடியாது. சமுதாயம் ஒழுங்காக செயல்பட வேண்டுமேயானால் அங்கே சில … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 சுதந்திரம்.

அத்தியாயம்-2 ’பாபம்’ – இஸ்லாத்தின் பார்வையில்.

’பாபம்’ என்ன என்பதை புரிந்து கொள்வதில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன. பாபம் முதன்முதலில் ஆதம், ஹவ்வா என்ற ஆதிப் பெற்றோர்கள் சுவர்க்கத்தில் இருக்கும் போதுதான் ஆரம்பமானது எனக் கருதப்பட்டு வருகின்றது. அங்கே நடந்த பாப சம்பவம்தான் அவர்களை அங்கே இருந்து கீழே (பூமிக்கு)) தள்ளியது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மனிதர்கள் அனைவரும் பாவிகள் … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 ’பாபம்’ – இஸ்லாத்தின் பார்வையில்.

அத்தியாயம் – 2 மதம் அல்லது மார்க்கம்.

மனித வரலாற்றை சற்று உற்று நோக்குவோமானால், வரலாறு முழுவதும் மதம் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. அடுத்தவர்களை சுரண்டுவதற்காகவும், பலரை ஏய்திடவுமே மதத்தை சிலர் பயன்படுத்தினர். சிலர் தாங்கள் கொண்டிருந்த மாச்சரியங்களை மறைத்திடவும், தாங்கள் இழைத்த கொடுமைகளை நியாயப்படுத்திடவுமே மதத்தை பயன்படுத்தினர். சிலர் அதிகாரத்தை கைப்பற்றிடவும், பிறர் மீது ஆதிக்கம் செலுத்திடவும், … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம் – 2 மதம் அல்லது மார்க்கம்.

அத்தியாயம்-2 உயிரும் வாழ்க்கையும்.

நாம் நமக்குள் கொண்டிருக்கும் ‘உயிர்’ இறைவனின் பூரண ஞானத்தின் புனிதமான எடுத்துக்காட்டாகும். இறைவனின் அதிகாரத்தின் – வல்லமையின் இணையற்ற உதாரணமாகும். அவனது படைக்கும் திறனின் பாங்கான மேற்கோளாகும். உயிரை தருபவனும், வாழ்க்கையை உருவாக்குபவனும் அவனே! அவனே படைத்தவன்! இந்த உலகில் நாம் காணும் எதுவும் எதேச்சையாகத் தோன்றியவையல்ல. எவரும் தன்னைத்தானே படைத்துக் கொள்வதில்லை. அல்லது வேறு … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 உயிரும் வாழ்க்கையும்.