Author Archives: Jafar
அத்தியாயம்-3 தொழுகையின் விதிகள்
குறைத்து தொழுதல் 1. ஒருவர் தனது ஊரிலிருந்து நாற்பத்தெட்டு மைல்கள் அல்லது அதற்கு மேலே தொடர்ந்து செல்லும் எண்ணத்தோடு பயணம் செய்யும்போது அவர் நான்கு ரக்அத்துகள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாகக் குறைத்து தொழுது கொள்ள வேண்டும். இந்த சலுகை லுஹர், அஸர், இஷாத் தொழுகைகளுக்குப் பொருந்தும். பஜ்ரு, மஃரிப் ஆகிய தொழுகைகளை குறைத்துத் தொழ … Continue reading
அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் முறை.
1. வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குச் செல்வது போலவே தன்னிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். இறைவனின் இல்லமாம் பள்ளிவாசலிலோ அல்லது தொழுகைக்காக கூடியுள்ள இடத்திலோ தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன், இறைவனைப் புகழ்ந்து கூறும் ‘தக்பீர்’ஐ சொல்ல வேண்டும். 2. பெருநாள் தொழுகையை சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடையிலுள்ள நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு … Continue reading
அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகள்.
ஈத் என்றால் விழா அல்லது மீண்டும் மீண்டும் வரும் மகிழ்ச்சி என்று பொருள். முஸ்லிம்கள் அனைவருக்கும் பெருநாள் தொழுகை மிக முக்கியமானதாகும். இது அன்றாடத் தொழுகையின் சிறப்புக்களையும், ஜும்ஆத் தொழுகையின் பலன்களையும் கொண்டது. இது முஸ்லிம்களின் பிணைப்புகளை வலுப்படுத்தும் தன்மையைக் கொண்டது. பெருநாள்கள் இரண்டு முதலாவது ‘ஈதுல் பித்ர்’ என்று சொல்லப்படும் நோன்புப் பெருநாளாகும். அது … Continue reading
அத்தியாயம்-3 வெள்ளிக்கிழமைத் தொழுகை (ஜும்ஆத் தொழுகை)
இதுவரை நாம் தினமும் நிறைவேற்றிட வேண்டிய தொழுகைகளைப் பார்த்தோம். இப்போது வாரம் ஒருமுறை நிறைவேற்ற வேண்டிய வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகையைப் பார்ப்போம். ஐங்காலத் தொழுகையை நிறைவேற்றி வரும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தத் தொழுகையையும் கண்டிப்பாக நிறைவேற்றிட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இதைத் தவறவிடக் கூடாது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று இந்தத் தொழுகை நடைபெறும். இது … Continue reading
அத்தியாயம்-3 கூட்டுத் தொழுகைகள் (ஜமாஅத்)
1. தொழுகைக்காக வந்திருப்பவர்களில் ஒருவரை முன் நிறுத்தி (இமாமாகக் கொண்டு) அவரைப் பின்பற்றித் தொழுவதே கூட்டுத் தொழுகை. இமாம் மார்க்க சட்டதிட்டங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இறையச்சம் மிக்கவராயிருக்க வேண்டும். 2. இமாம் அனைவருக்கும் முன்பாக கிப்லாவை நோக்கி நிற்பார். மற்றவர்கள் அவர்க்குப் பின்னால் அணியணியாக நிற்க வேண்டும். கூட்டுத் தொழுகையை இரண்டுப் பேரைக் … Continue reading
அத்தியாயம்-3 தொழுகையை நிறைவேற்றுதல்.
ஒளு, பாங்கு, இகாமத் ஆகியவை முடிந்தவுடன் தொழுகை பின்வருமாறு தொடங்குகின்றது. 1. பஜ்ருத் தொழுகை இந்தத் தொழுகையில் சுன்னத் தொழுகையாக இரண்டு ரக்அத்களும் பின்னர் பர்ளுத் தொழுகையாக (கட்டாயத் தொழுகையாக) இரண்டு ரக்அத்களும் தொழ வேண்டும். தொழும் முறைகள் இரண்டிற்குமே ஒன்றுதான். நிய்யத் வைப்பதில் மட்டுமே வேறுபாடு உள்ளது. தொழுகையின் முறைகள் பின்வருமாறு:
அத்தியாயம்-3 தொழுகை அழைப்பு (அதான்)-பாங்கு
பெருமானார் (ஸல்) அவர்களின் போதனைகளின்படி தொழுகை நேரம் வந்தவுடன் தொழுகைக்கான அழைப்பு விடுப்பது சிறந்ததாகும். தொழுகைக்கான அழைப்பை விடுப்பவர், கிப்லாவை (மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி) நின்று கொண்டு தனது இரு கரங்களையும் தம் செவிகள் வரை உயர்த்தி உரத்த குரலில் பின்வருமாறு முழங்குதல் வேண்டும்.
அத்தியாயம்-3 உடல் தூய்மை செய்தல். (ஒளு)
தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பு ஒருவர் தூய்மையான நிலையில் இருத்தல் வேண்டும். அழுக்கு தூசு படக்கூடிய அளவில் வெளியில் தெரியக்கூடிய பகுதிகளை கழுவி சுத்தப்படுத்துவது அவசியமாகும். இதனைத்தான் ஒளுச்செய்தல் என நாம் சொல்லுகிறோம். அதன் செயல்முறை பின்வருமாறு:
அத்தியாயம்-3 தொழுகையின் நிபந்தனைகள்
தொழுகை முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்: 1. புத்தி சுவாதீனமுள்ளவர்கள் அனைவரும் தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். 2. ஓரளவுக்கு மனப்பக்குவம் அடைந்தவரும், வயதுக்கு வந்தவர்களும் (பொதுவாக பதினான்கு வயது) தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். குழந்தைகள் ஏழு வயதை அடைந்தவுடன் தொழும்படி பெற்றோர்கள் அறிவுரை கூற வேண்டும். பத்து வயதை அடைந்தவுடன் அதனை … Continue reading
அத்தியாயம்-3 நம்பிக்கையின் செயல் முறைகள்
இந்த அத்தியாயத்தில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதைப் பார்ப்போம். நாம் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க இஸ்லாம் சில கடமைகளை விதித்திருக்கின்றது. அவை தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் முதலியவையாகும். இந்தக் கடமைகளை நிறைவேற்றிட வேண்டும் என இறைவன் கட்டளை இட்டிருப்பதற்கான காரணம், மனிதனின் ஆன்மீகத் … Continue reading