Author Archives: Jafar
முஹம்மத் (ஸல்) அவர்கள் மொழிந்தவை எவை?
சில உதாரணங்கள் மற்றவரிடம் கருணை காட்டாதவர்கள் மீது இறைவனும் தன் கருணையைப் பொழிவதில்லை! தான் விரும்புவதையே தன்னுடைய சகோதரருக்கும் விரும்பாதவரை ஒருவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது! அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தான் மட்டும் வயிறார உண்பவன் இறைநம்பிக்கையாளன் அல்ல! பிறரை(த் தாக்கி) கீழே வீழ்த்தி விடுபவன் வலிமையாளன் அல்லன். (மாறாக) கோபம் வரும்போது … Continue reading
ஓதிப் பார்க்க கூலி வாங்க அனுமதி.
1420. நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் … Continue reading
கண் திருஷ்டிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.
1418. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி ‘கட்டளையிட்டார்கள். புஹாரி : 5738 ஆயிஷா(ரலி). 1419. நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது” என்று கூறினார்கள். … Continue reading
யூனூஸ் நபியவர்கள் மீன் வயிற்றில் இருக்கும் போது செய்த பிரார்த்தனையைக் கூறுக!
கேள்வி எண்: 88. யூனூஸ் நபி (அலை) அவர்கள் மீன் வயிற்றினுள் இருக்கும்போது இறைவனிடம் செய்த பிரார்த்தனையைக் கூறுக.
விஷக்கடிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.
1416. ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறினார்கள். புஹாரி : 5741 அல் அஸ்வத் (ரலி). 1417. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்கும்போது ‘பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா வரீகத்து பஅளினா யுஷ்ஃபா … Continue reading
பாதுகாப்பு தேடும் குர்ஆனிய வசனங்கள்.
1415. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால், ‘அல்முஅவ்விஃதாத்’ (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக் கொள்வார்கள். அவர்களின் (இறப்பிற்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல் மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள் சுபிட்சத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு … Continue reading
“சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்! أُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ
இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் – அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். (21:51) அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் “நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது (21:52) அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். … Continue reading
நோயாளியைக் காணச் சென்றால்….
1414. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்’ அல்லது ‘நோயாளி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்’ அவர்கள், ‘அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஃபாஅ இல்லா ஃபாஉக்க, ஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்” என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: மனிதர்களைப் படைத்துப் … Continue reading
விஷமூட்டுதல்.
1413. யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை … Continue reading
இறைவேதத்தை விடுத்து வேறு புனித நூல்கள் உண்டா?
ஆம், உண்டு! அதுவே, முன்மாதிரியாக அமைந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை! அரபிமொழி வழக்கில் இது ஸுன்னாஹ் எனப்படுகின்றது. அதாவது, முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்தவை, கூறியவை, அங்கீகரித்தவை, அவரது குணநலன்கள் அனைத்தும் இதனுள் அடங்கும். திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக, முஸ்லிம்களுக்கு பின்பற்றத்தக்க சிறந்த வழிமுறையாக அமைந்தது இதுவே! ஸுன்னாஹ் எனப்படுகின்ற முஹம்மத் … Continue reading