இறைவேதத்தை விடுத்து வேறு புனித நூல்கள் உண்டா?

ஆம், உண்டு!

அதுவே, முன்மாதிரியாக அமைந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை! அரபிமொழி வழக்கில் இது ஸுன்னாஹ் எனப்படுகின்றது. அதாவது, முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்தவை, கூறியவை, அங்கீகரித்தவை, அவரது குணநலன்கள் அனைத்தும் இதனுள் அடங்கும்.

திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக, முஸ்லிம்களுக்கு பின்பற்றத்தக்க சிறந்த வழிமுறையாக அமைந்தது இதுவே!

ஸுன்னாஹ் எனப்படுகின்ற முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை நம்புவதும், அதனைப் பின்பற்றுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே!

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.

3 Responses to இறைவேதத்தை விடுத்து வேறு புனித நூல்கள் உண்டா?

  1. abdul azeez says:

    இறைவேதத்தை விடுத்து வேறு புனித நூல்கள் உண்டா ?

    இப்படி விடுத்து அல்லது அடுத்து என்று எழுதினால் எந்த முஸ்லிம்களுக்கும் சகிக்காது. ஏன் ? என்றால் குர்ஆன் மற்றும் ரசூல் ( ஸல் ) அவர்கள் ஹதீத் இவ்விரண்டும் இரண்டு கண்கள் மாதிரி நமக்கு. நான் உங்களிடம் இரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றை பற்றிப்பிடித்திருக்கும் நாளெல்லாம் நீங்கள் நேர்வழியில் இருக்கிறீர் என்றோ வெற்றியடைவீர்கள் என்றோ ஒரு ஹதீத் உள்ளது. அதனால் குர்ஆனை தவிர்த்து ஹதீதை மட்டும் பிடித்தால் வெற்றியோ ! அல்லது ஹதீதை தவிர்த்து குர்ஆனை மட்டும் பின்பற்றினால் வெற்றியோ ! நமக்கு ஒருபோதும் இல்லை. இது நிச்சயம் அதனால் இரண்டையுமே போதியுங்கள்.

    நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னை பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். இன்னும் அவன் மிகவும் மன்னிப்பவனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான். ௩:௩௧ குர்ஆன்

    மா சலாம்.
    அப்துல் அசீஸ்.

  2. Jafar Ali says:

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    அன்பின் சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்களுக்கு….
    தாங்கள் தலைப்பை மட்டும் வாசித்து விட்டு பின்னூட்டம் இட்டுச் சென்றிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எது ஒன்றையும் முழுமையாக வாசித்து விட்டு பிறகு அதைப்பற்றி விவாதம் செய்வதே நேர்மையான முறையாக இருக்கும். அந்த நூலின் ஆரம்பத்தில் இருந்து பொறுமையாக வாசித்து விட்டு பிறகு தங்களுடைய சந்தேகங்களை பின்னூட்டமிடுங்கள். உங்களுடைய புரிதலிலும் மிகப்பெரிய தவறு இருக்கிறது தலைப்பை மட்டும் படித்ததால்….

    என்றும் அன்புடன்
    jafarsafamarva

  3. abdul azeez says:

    வ அலைக்கும் சலாம் என் அன்பான ஜாபர்அலிக்கு நான் தலைப்பை மட்டும் பார்க்கவில்லை. மேலும் மூன்று பாரகிராப் வாக்கியங்கள் அதையும் தான் பார்த்திருந்தேன். இருந்தாலும் அந்த தலைப்பும் அதன் பிறகு ஆம் உண்டு என்ற அந்த சொல்லும் என் மனதில் நெருடலாகவே இருக்கின்றது உங்களை குற்றம் பிடிப்பதாக தயவு செய்து நினைத்துவிடாதீர்கள். என்றைக்கும் உங்கள் அன்பை எதிர்ப்பார்க்கும் அன்பான
    சகோதரன். மேலும் ஒரு வேண்டுகோள் நீங்கள் சத்யமார்க்கம் இணையத்தளத்தில் பார்க்கலாம் மேற்படிப்பிற்காக உதவியை எதிர்ப்பார்க்கும் மாணவி ஷாஜிதா. அவர் வீட்டுக்கு என் நண்பர் சிராஜுதீன் அவர்களை அனுப்பி அந்த சகோதரி உதவி பெற தகுதியானவர்தான்.

    // சகோதரி சாஜிதா அவர்களுக்கு உதவி செய்யும் படி அனைத்து சகோதரர்களிடமும் குறிப்பிட்டு இருந்தீர்கள். இன்னும் கும்பகோணம் ஹாளிமா எடுகேசினல் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தெரியபடுத்தினதை ஜூனியர் விகடன் பத்திரிக்கை எழுதினது என்றெல்லாம் அதை பற்றி எழுதி விபரமாக பார்த்தோம் இருந்தாலும் எனக்கு மனதில் குழப்பமாக இருந்த காரணத்தால் கும்பகோணம் ஹாளிமா எடுகேசினல் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு போன் செய்து விபரத்தை கேட்டேன். அவர் பெயர் ஜாகிர் அவர் சொன்னது ஜூனியர் விகடன் பத்திரிக்கை நிருபர்கள் எங்களிடம் பேட்டி எடுத்தது உண்மை தான் ஆனால் அது அந்த சகோதரிக்கு தெரியாது என்றார். தற்போது அந்த பெண் எங்கள் பொறுப்பில் இல்லை அதிராம்பட்டினம் பைத்துல் மால் மூலம் அந்த ஜமாஅத் ஏற்றுகொண்டது என்று என்னிடம் சொன்னார். நான் கேட்டேன் அப்படி என்றால் நீங்கள் உதவி செய்வது இல்லை என்றேன். அப்படி கிடையாது எப்ப வேண்டும் என்றாலும் நாங்கள் செய்ய தயார். என்றார். இருந்தும் என்னுடைய நண்பர் சிராஜுதீன் அவர்களை வேலையை போட்டுவிட்டு அந்த ஊருக்கு போய் நன்றாக விசாரித்து விட்டு வா என்றேன். அவர் சனிக்கிழமை அன்று புறப்பட்டு போய் ஒத்தயடி பாதையாம் பஸ் மரத்தில் மோதி விபத்து ஆகி பாதி வழியில் திரும்பி வந்துவிட்டார். மறு நாள் ஞாயிறு போனார்.

    சரியான குக்கிராமம் கீற்று வீடு அதுவும் சொந்தவீடு அல்ல பேராவூரநியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தெரு விளக்கு கிடையாது.

    ஆட்டோ வசதியோ கார் வசதியோ எதுவும் இல்லை. கொலை பன்னி போட்டால் கூட யாருக்கும் தெரியாது.

    அந்த சகோதரியின் டீச்சர்கள் தான் விண்ணப்பம் அனுப்பி இருந்தார்களாம். அண்ணா யுனிவர்சிடிக்கு இதுவரை எந்தவொரு ரிப்ளையும் இல்லை கவுசளின் வந்தால் தான் தெரியும் என்கிறார்.

    அந்த அக்கௌன்ட் நம்பர் எல்லாம் சரிதான் என்கிறார்.

    உங்களுக்கு உதவி செய்பவர்கள் யார் ? பைத்துல் மால் மூலம் வந்தார்களாமே ! என்று என் நண்பர் கேட்டார். அதற்க்கு நாலு அல்லது ஐந்து பேர் வந்தார்கள் அதில் ஒருவர் அஜ்ரத் பார்த்தார்களாம் பிறகு அப்துல் ரஹ்மான் ஜகாத் புன்ட் பௌண்டேசின் தெரியபடுதிவிட்டு போய்விட்டார்கள். அந்த இடத்திலிருந்து இதுவரை உதவி விண்ணப்பம் வரவில்லை என்கிறார் ஷாஜிதாவின் தாயார்.

    அந்த சகோதரிக்கு அபுதாஹிர் என்று பதினோரு வயதில், ஒரு தம்பியும் அப்சல் ஹசீனா என்று ஆறு வயதில் ஒரு தங்கையும் உள்ளார்கள்.

    அவரின் தாயார் அதே வேலையை தான் தொடர்ந்து செய்துகொண்டுவருகிறார். அவருக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பியாம். திருமணம் ஆகி வெளியூரில் இருக்கிறார்களாம்.

    சகோதரி சாஜிதாவுக்கு டெலிபோன் வசதி மற்றும் மொபைல் வசதி இல்லை. எதிர் வீட்டுக்கு போன் செய்து சாஜிதாவை வரவழைத்து அனுப்பும் தொகை கிடைத்த விபரம் கேட்கலாம். எதிர் வீட்டு சகோதரியின் பெயர் பௌசியா பேகம்.

    இதை எல்லாம் எதற்கு எழுதுகிறேன் என்றால். கும்பகோணம் நிர்வாகம் ஏற்றதை பைத்துல் மால் சகோதர்கள் பெருமனதோடு ஏற்று பிறகு கை கழுவி விட்ட மாதிரி இருக்கு தானும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்கமாட்டேன் என்கிற கதையா இருக்கு
    அதனால் அந்த சகோதரிக்கு இந்த தளத்தில் உள்ள அனைத்து சகோதரர்களும் உதவி செய்யுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும்.
    powjiyaa begum mobile no: +919750298306
    மா சலாம்.
    அப்துல் அசீஸ்.//

    நீங்களும் இந்த சகோதரிக்காக அங்குள்ள நம் சகோதரர்களிடம் பணம் சேகரித்து அனுப்ப வேண்டும் என்று என் சிறிய கோரிக்கையை விடுகின்றேன்.அதன் மூலம் அல்லாஹ் உங்களுக்கு மறுமையிலும் இம்மையிலும் மிகப்பெரிய வெற்றியை தருவானாக. ஆமீன்.
    மா சலாம்.
    அப்துல் அசீஸ்.

Comments are closed.