Author Archives: Jafar
கூத்தாநல்லூரில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தலுக்கு ஒரு மாநாடு
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. பாரம்பரியம் என்றும், முன்னோர்களின் வழிமுறையில் நிலைத்திருத்தல் என்றும் கூறிக் கொண்டு இஸ்லாமிய வழிமுறையை விட்டும் மக்களை திசைதிருப்பி விடும் மௌலானாக்களின், மௌலவிகளின் இஸ்லாமிய விரோதப் போக்கை கவனியுங்கள். அல்லாஹ் உலக கல்வி மூலம் சிலருக்கு இல்மைக் (அறிவைக்) கொடுத்து, அவர்களுடைய பாவச்செயல்களின் காரணத்தால் உண்மையை மறைத்து விடுகிறான். … Continue reading
அல்லாஹ்வின் அழைப்பு!
ِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ அளவற்ற அருளாளன், (55:1) இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். (55:2) அவனே மனிதனைப் படைத்தான். (55:3) அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். (55:4) சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:5) (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் – … Continue reading
நம்பிக்கை கொண்டோருக்கு அது உறுதியான உண்மை – நிராகரிப்போருக்கு அது கைசேதமே!
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன். நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.). நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும். இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள். (இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள். … Continue reading
மறுமை நாள் (அத்தியாயம்-10) இறுதிப் பகுதி
ஷபாஅத் பரிந்துரை செய்வது என்பது ஷபாஅத் என்பதன் பொருளாகும். அதாவது மறுமை நாளில் மனிதர்களைத் தண்டனையிலிருந்து காக்கவும், தண்டனையைக் குறைக்கவும் பிரதானமாக அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்தலை இது குறிக்கிறது. அல்லாஹ் கருணை நிறைந்தவன். எனவே முடிந்தளவு அதிகமான மனிதர்கள் சுவர்க்கத்துக்குச் செல்வதையே அவன் விரும்புகிறான். அதற்கு அவன் பல்வேறு வழிகளை வைத்துள்ளான். அவற்றில் ஒன்றாகவே ஷபாஅத் … Continue reading
இறைநம்பிக்கைக் கொண்ட ஆணும், பெண்ணும்…..
ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் முஸ்லிம்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும், வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும், தானதர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும், இன்னும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களாகவும் இருக்கின்றார்களோ திண்ணமாக அவர்களுக்காக அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான். (அல்குர்ஆன்: 33:35) இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் … Continue reading
விவாக விலக்கு, கணவரை இழந்த பெண்களுக்கு அல்லாஹ்வின் அனுமதிகள்!
நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்களின் (இத்தா) தவணை முடியும் தருவாயை அடைந்து விட்டால், நல்லமுறையில் அவர்களை உங்களுடன் வாழச்செய்யுங்கள் அல்லது நல்ல முறையில் அவர்களை அனுப்பி விடுங்கள். ஆனால் வரம்பு மீறும் எண்ணத்துடனும் தொல்லை கொடுக்கும் எண்ணத்துடனும் அவர்களை நீங்கள் தடுத்து நிறுத்தாதீர்கள். அப்படி எவரேனம் செய்தால், உண்மையில் அவர் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் … Continue reading
நேர்வழி கெட்டு, சத்திய மார்க்கத்தை தவற விட்டோர் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்ட அத்தாட்சிகள்!
25:4. இன்னும் இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களுக்கு ஓர் அநியாயத்தையும் பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். 25:5. இன்னும் அவர்கள் கூறுகிறார்கள் இன்னும் அவை முன்னோர்களின் … Continue reading
மறுமை நாள் (அத்தியாயம்-9)
விசாரணை மஹ்ஷர் வெளியில் மிக முக்கிய அம்சம் அங்கு நடக்கும் விசாரணையாகும். மனிதர்கள் அனைவரும் தமது இறுதியான உலகுக்குப் போகும் முன்னால் அவர்கள் அங்கு செல்வதற்கான நியாயத்தை முன்வைப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும். இந்த விசாரணை குறித்து அல்குர்ஆன் பல இடங்களில் மிகத் தெளிவாக விளக்குகிறது : “நிச்சயமாக அவர்கள் எம்மிடமே மீண்டு வர வேண்டும். … Continue reading
எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். 36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?”” … Continue reading
மறுமை நாள் (அத்தியாயம்-8)
மஹ்ஷர் வெளியும், அதன் நிகழ்வுகளும் பிரபஞ்ச அழிவின் பிறகு மனிதன் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு வெட்டவெளியில் திரட்டப்பட்டு அந்த விசாரணை நடைபெறும். அவ்வாறு மனிதர்கள் ஒன்று திரட்டப்படும் வெட்டவெளியை ‘மஹ்ஷர்’ என அல்குர்ஆனும் சுன்னாவும் அழைக்கின்றன. இவ்வாறு மனிதர்கள் மீண்டும் எழுப்பப்பட ஒரு ஸூர் ஊதப்படும் என அல்குர்ஆன் கூறுகிறது. … Continue reading