Author Archives: Jafar

இரண்டு விதக் கூலிகள்!

94- மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடத்தில்) இரண்டு விதக் கூலிகள் உண்டு. ஒருவர் வேதத்தையுடையவர்களில் உள்ளவர். இவர் தமது (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும் முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும் தம் எஜமானனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஒரு அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப்பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இரண்டு விதக் கூலிகள்!

உலகம் ஒரு பரிட்சைக் கூடம் என்பது பற்றி..

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 21:35)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உலகம் ஒரு பரிட்சைக் கூடம் என்பது பற்றி..

நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமொத்த உலக சமுதாயத்தாருக்கு..

93- ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் அதனை நம்பித்தான் ஆக வேண்டிய நிலையிருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ) தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி-4981: அபூஹூரைரா(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமொத்த உலக சமுதாயத்தாருக்கு..

உலகை நாடுவோர்க்கு உலகிலேயே வழங்கப்படுவது பற்றி..

எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப் பட்டவராகவும் நுழைவார். (அல்குர்ஆன்: 17:18)

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on உலகை நாடுவோர்க்கு உலகிலேயே வழங்கப்படுவது பற்றி..

ஆணிலிருந்தே பெண்!

கேள்வி எண்: 1. ஒரு பெண் கருத்தரிக்கும் போது அது ஆண் குழந்தையாகவோ அல்லது பெண் குழந்தையாகவோ ஆகுவதற்கு அவளுடைய கணவனின் உயிரணுவே காரணம்; மனைவி காரணமல்ல என்ற தற்கால அறிவியல் ஆராய்ச்சியின் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய திருகுர்ஆன் வசனம் எது? பதில்: “இன்னும் நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் … Continue reading

Posted in கேள்வி பதில் | Comments Off on ஆணிலிருந்தே பெண்!

அறிவிப்பு!

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் திறம்படச் செயல்பட்டு வரும் ‘இஸ்லாமிய கல்வி மையம்’ (IEC) நடத்திய (2002-ஆம் ஆண்டு) மார்க்க அறிவு போட்டியின் கேள்வி பதில்கள் அவர்களின் முழுமையான அனுமதியுடன் இந்த தளத்தில் பதியப்படுகின்றது.

Posted in கேள்வி பதில் | Comments Off on அறிவிப்பு!

இறை அத்தாட்சிகளை கண்டு ஈமானிய உறுதி கொள்தல்..

92- (இறந்து விட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர் ஆவோம்.(ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி) இப்ராஹீம் (அலை) அவர்கள், என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகின்றாய் என்று எனக்குக் காட்டு என்று கேட்டபோது … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on இறை அத்தாட்சிகளை கண்டு ஈமானிய உறுதி கொள்தல்..

மூதாதையர்களின் மார்க்கம்?

ஆதி கால மதங்களில் ஊறிப் போய், தமது மூதாதையர்கள் பின்பற்றும் மார்க்கமே சரியென கூறுபவர்கள் பற்றி.. 34:43 நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்’ என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள், … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on மூதாதையர்களின் மார்க்கம்?

விசுவாசத்தில் பலவீனர்களுக்கு உதவிபுரிதல் பற்றி …

91- நபி (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் சிலருக்கு கொடுத்தார்கள். சிலரைவிட்டார்கள். (யாருக்கு கொடுக்கவில்லையோ) அவர் எனக்கு மிகவும் வேண்டியவராவார். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! ஏன் அவரை விட்டு விட்டீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நான் மூமின் என்றே கருதுகிறேன் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவரை … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on விசுவாசத்தில் பலவீனர்களுக்கு உதவிபுரிதல் பற்றி …

அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே……

(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான். இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும். அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; … Continue reading

Posted in தினம் ஒரு வசனம் | Comments Off on அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே……