Author Archives: Jafar
தொழுகையில் பிஸ்மில்லாஹ் சப்தமின்றி கூறுவது..
225- நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) உமர் ரலி) ஆகியோரும் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர். புஹாரி-743: அனஸ் (ரலி)
தொழுகையில் ஸூரா ஃபாத்திஹா ஓதுவது…
222.திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து ஸுராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-756: உபாதா பின் ஸாமித் (ரலி) 223- எல்லாத் தொழுகைகளிலும் ஒதப்படவேண்டும் என நபி ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஒதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக ஒதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் சப்தம் இன்றி ஒதியதை நாங்களும் … Continue reading
ருகூஉ ஸஜ்தாவில் என்ன கூறுவது…
219- குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறி அபூஹுரைரா (ரலி) தொழுவித்துவிட்டு நான் உங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தொழுகை போலவே தொழுது காட்டினேன் என்றும் கூறினார்கள். புஹாரி-785: அபூ ஸலமா 220- நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை … Continue reading
கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிதல்
மக்கள் சாதாரணமாகக் கருதக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.ஆனால் அது அல்லாஹ்விடம் மிகப் பெரிய விஷயமாகும். சிலர் தரையைத் தொடுமளவுக்கு ஆடை அணிகின்றனர். இன்னும் சிலர் தமது ஆடையைத் தரையோடும் இழுத்துச் செல்கின்றனர்.
தொழுகையில் கைகளை தோள் வரை உயர்த்துதல்..
217- நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவங்கும் போதும் ருகூவுக்காகத் தக்பீர் கூறும் பொதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது தோள்களுக்கு நேராகவும் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல்ஹம்து என்று கூறுவார்கள். ஸஜதாவுக்குச் செல்லும் போது இவ்வாறு செய்ய மாட்டார்கள். புஹாரி-735: அப்துல்லாஹ் பின் … Continue reading
பாங்கொலியில் ஷைத்தான் ஓட்டமெடுப்பது
216- தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும் போது, பாங்கு சப்தத்தை கேட்ககூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் வருகிறான் தொழுகைக்கு இகாமத் கூறும்போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்துக்கொண்டு தொழுகையாளி அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் … Continue reading
தமக்குத் தாமே தீங்கிழைத்துக்…..
அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டி இருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்). (அல்குர்ஆன்: 14:45)
பாங்குக்கு பதில் எப்படி கூறுவது?
215- பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-611: அபூஸயீதுல் குத்ரீ (ரலி)
ஒவ்வோர் ஆத்மாவுக்கான முழுமையான கூலி!
ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்த (தீர்ப்பு) நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் – அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 16:111)
பாங்கு எப்படி வந்தது?
213- முஸ்லீம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்த போது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிருத்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கின்ற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர் … Continue reading