Author Archives: Jafar
பறவைகளும், பிராணிகளும் மனிதர்களைப் போன்ற சமுதாயமா?
கேள்வி எண்: 22. “பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை” என்று தொடங்கும் வசனம் எது? இவ்வசனத்தில் பொதிந்துள்ள அறிவியல் அதிசயத்தை விளக்குக:-
இஷா தொழுகையின் நேரம்..
372– இஸ்லாம் (நன்கு) பரவுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். பெண்களும், சிறுவர்களும் உறங்கி விட்டனர் என உமர் (ரலி) தெரிவிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் (தொழுவிக்க) வரவில்லை. அதன் பின் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி இப்பூமியில் உள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை … Continue reading
மக்ரிப் தொழுகையின் நேரம்..
370– சூரியன் அடிவானத்தில் மறைந்ததும் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுபவர்களாக இருந்தோம். புகாரி-561: ஸலமா (ரலி) 371– நபி (ஸல்) அவர்களுடன் மஃரிபைத் தொழுது விட்டு எங்களில் ஒருவர் திரும்பி அம்பு எய்தால் அவர் அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அதாவது அந்த அளவு வெளிச்சம் இருக்கும்) புகாரி-559: ராபிவு பின் … Continue reading
பூமியைப் படைத்த அல்லாஹ்வின் கூற்று!
அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக … Continue reading
ஸுப்ஹூ, அஸர் தொழுகையின் மகத்துவம்.
367– இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்ற அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே … Continue reading
பெரிய ‘நிபாக்’ (நயவஞ்சகத்தனம்)
பெரிய நிபாக் (நயவஞ்சகத்தனம்) என்றால் நாவினால் இஸ்லாமிய நம்பிக்கையை வெளியாக்குவதும், உள்ளத்தினாலும் உறுப்புகளினாலும் ‘குஃப்ரை’ நம்புவதுமாகும். இது பலவகைப்படும். 1. நபி (ஸல்) அவர்களைப் பொய்யாக்குதல் அல்லது அவர்கள் கொண்டுவந்தவற்றில் சிலவற்றைப் பொய்யாக்குதல். 2. நபி (ஸல்) அவர்கள் மீது கோபம் கொள்ளுதல் அல்லது அவர்கள் கொண்டுவந்ததில் சிலவற்றின் மீது வெறுப்படைதல். 3. இஸ்லாம் வீழ்ச்சியடைவதால் … Continue reading
நடுத்தொழுகை என்பது எது?
364- யாருக்கு அஸர் தொழகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப்பட்டவனைப் போன்று இருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-552: இப்னு உமர் (ரலி) 365- அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! … Continue reading
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்
2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன். 2: 262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், … Continue reading
உலக மக்கள் யாவருக்கும் நேர்வழி காட்டும் இடம்!
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன்: 3:96)
கப்ரின் மீது அமர்தல், மிதித்தல், அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழித்தல்.
‘உங்களில் ஒருவர் நெருப்பின் மீது அமர்ந்து அது அவருடைய ஆடையை எரித்து தோலையும் பதம் பார்ப்பது கப்ரின் மீது அமர்வதை விட சிறந்தது’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.