Author Archives: Jafar
பல்வேறு வளர்ச்சி நிலைகளில் வளரும் மனித சிசு!
கேள்வி எண்: 28. டொரண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கருவியல் நிபுணர் டாக்டர் கீத் மூர் (Dr. Keith Moore) கூறுகிறார்:- ‘மனிதக்கரு வளர்ச்சியானது (Development of Embryo) பல்வேறு வளர் நிலைகளைக் (Stages) கொண்டது என்ற அறிவியல் உண்மையை கி.பி. 1940 வரை கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், உலகம் முழுவதும் நாம் பெற்றிருக்கும் கருவளர்ச்சி பற்றிய தற்கால … Continue reading
ஜூம்ஆவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்..
495. நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை” … Continue reading
ஜூம்ஆ குத்பாவை அமைதியாக கேட்டல்..
494. ”இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 934 அபூஹுரைரா (ரலி)
ஒப்பாரி வைத்தல்.
மிகப்பெரும் தீமைகளில் இதுவும் ஒன்றாகும். சில பெண்கள் இறந்தவருக்காக ஓலமிடுகின்றனர். இறந்தவரின் நல்லியல்புகளை எடுத்துக் கூறி ஒப்பாரி வைக்கின்றனர். முகத்திலும், கன்னங்களிலும் அடித்துக் கொள்கின்றனர். அதுபோல ஆடையைக் கிழித்துக் கொள்கின்றனர். தலையை மழித்துக் கொள்கின்றனர், அல்லது தலை விரித்துப் போட்டு அதைப் பிய்த்துக் கொள்கின்றனர். இவையாவும் விதியைப் பொருந்திக் கொள்ளாததையும், துன்பத்தை சகித்துக் கொள்ளாததையுமே காட்டுகிறது. … Continue reading
ஜூம்ஆ தினத்தில் நறுமணம் பூசுவதும் மிஸ்வாக் செய்வதும்
490.”ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 880 அபூ ஸயீத் (ரலி) 491. ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியபோது நறுமணப் பொருளோ … Continue reading
ஜூம்ஆவில் குளிப்பது கடமை..
485. ”உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :877 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) 486. ஜும்ஆ நாளில் உமர் (ரலி) சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஆரம்ப காலத்திலேயே ஹிஜ்ரத் செய்த நபித்தோழர் ஒருவர் வந்தார். அவரை உமர் (ரலி) அழைத்து ‘ஏனிந்தத் தாமதம்?’ என்று … Continue reading
பூமி வாழத்தகுந்த இடமா?
கேள்வி எண்: 27. இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடங்களும், உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடங்களும் இருக்கின்றன. உதாரணமாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலை இருக்கிறது. பிற கோள்களில் மிக அதிக வெப்பம் அல்லது குளிர் மற்றும் காற்று இல்லாமையின் காரணமாக உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக … Continue reading
அச்சநேரத் தொழுகை..
481. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு அணிகளில் ஓரணியினருக்கு (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுகை நடத்தினார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்று கொண்டு) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் (இரண்டாம் அணியினர்) நின்றிருந்த இடத்தில் (எதிரிகளுக்கு முன்னால்) நின்று கொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். … Continue reading
ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-1)
(இறை)தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ”நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; … Continue reading
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை..
480. ”ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை ‘விரும்பியவர்கள் தொழலாம்” என்றார்கள். புஹாரி : 627 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)