Author Archives: Jafar
63.அன்சாரிகளின் சிறப்புகள்
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3776 ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) ‘அன்சார் உதவியாளர்கள்’ என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?’ என்று கேட்டேன். … Continue reading
62.நபித்தோழர்களின் சிறப்புகள்
பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3649 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”. மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், ‘உங்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா?’ என்று கேட்பார்கள். ‘ஆம், இருக்கிறார்கள்” என்று (போரிடச் சென்ற) … Continue reading
61.நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்
பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3489 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். “மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாமகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்’ (திருக்குர்ஆன் 49:13) என்னும் இறைவசனத்தில் இடம் பெற்றுள்ள ‘ஷுவூப் சமூகங்கள்’ என்னும் சொல் பெரிய … Continue reading
60.நபிமார்களின் செய்திகள்
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3326 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் … Continue reading
59.படைப்பின் ஆரம்பம்
பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3190 இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘பனூ தமீம் குலத்தாரே! நற்செய்தி பெற்று மகிழுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி கூறினீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தருமமும்) கொடுங்கள்” என்று கேட்டார்கள். உடனே, … Continue reading
இந்நிலையில் தர்மம் செய்வதே சிறந்தது
ஆரோக்கியமாகவும் தேவையுடையவராகவும் இருந்து தானம் செய்தல். 611.ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை … Continue reading
ஈமானின் நிலைகள்-விதியை நம்புதல்
குர்ஆன் ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை அப்படியே நம்பவேண்டும். விதி நம்பிக்கைகளில் ஒன்றாகும். மார்க்கத்தின் சட்டதிட்டங்களை விரிவாக நம் சிந்தனையை செலுத்தி அலசி ஆய்வது போல் விதியைப் பற்றி ஆராயக்கூடாது. விதியைக் கீழ்கண்டவாறு நம்புதல் வேண்டும் 1. நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற, நடக்கவிருக்கின்ற அனைத்து விஷயங்களும் அதன் அறிவும் அல்லாஹ் நன்கறிந்தவன் என நம்புவது. … Continue reading
ரகசியமாக தானம் செய்வதின் சிறப்பு.
610.”அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள … Continue reading
தானப்பொருளை இழிவாகக் கருதாதே.
609.முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி. மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகத்) கொடுத்தாலும் அதைக் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள் இழிவாகக் கருத வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2566 அபூஹுரைரா (ரலி).
எழுந்து நிற்பதற்கு அவசியமானதும், அங்கீகரிக்கப்பட்டதும்…
சமூகமளிப்பவருக்காக எழுந்து நிற்பதை ஆகுமாக்கக்கூடிய ஸஹீஹான ஹதீஸ்களும், ஸஹாபாக்களுடைய நடைமுறையுமுண்டு. அந்த ஹதீஸ்களை விளங்குவதற்காக எங்களுடன் வாருங்கள். நபி (ஸல்) அவர்கள் தன்னிடத்தில் பாத்திமா (ரலி) அவர்கள் வந்தால் எழுந்து நிற்பார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களிடம் சென்றாலும், அவர்கள் எழுந்து நிற்பார்கள். இது அனுமதியுடையதும், தேவையானதுமாகும். ஏனென்றால் தன்னிடத்தில் வந்த … Continue reading