பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3326
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் மீது சாந்தி பொழியட்டும்” என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். ‘இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)’ என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3327
‘சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் தந்தை ஆதம்(அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3328
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். உம்மு சுலைம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவளின் மீது குளிப்பு கடமையாகும்)” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தேன். ‘பெண்ணுக்குக் கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘பின் குழந்தை (தோற்றத்தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3329
அனஸ்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள். பிறகு, ‘1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), ‘வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), ‘தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), ‘உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று கூறினார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள். உடனே யூதர்கள், ‘இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3330
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றம் அடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3331
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் . பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3332
உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாள்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறி விடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாள்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறி விடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால் தான், மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர் பாராத விதமாக) விதி அவளை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது, (எதிர் பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3333
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். திண்ணமாக, அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், ‘இறைவா! (இது ஒரு துளி) விந்து இறைவா! இது, பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு” என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது, ‘இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?’ என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3334
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘ஆம்” என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், ‘நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை” என்று கூறுவான். என அனஸ்(ரலி) அவர்கள அறிவித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3335
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம்(அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3336
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இது மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3337
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள். அப்போது, ‘நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத்தாரை எச்சரிக்காமலிருந்ததில்லை. நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு (அவனைக் குறித்து) எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், நான் அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தன் சமூகத்தாருக்குக் கூறாத ஓர் அடையாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3338
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3339
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ்) அலை அவர்களை நோக்கி), ‘(என்னுடைய செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டீர்களா?’ என்று கேட்பான். அதற்கு நூஹ் அவர்கள், ‘ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)” என்று பதிலளிப்பார்கள். பிறகு, அல்லாஹ் நூஹ் அவர்களின் சமுதாயத்தினரிடம், ‘இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?’ என்று கேட்பான். அதற்கு அவர்கள், ‘இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை” என்று பதில் கூறுவார்கள். உடனே, அல்லாஹ் நூஹ் அவர்களிடம் ‘உங்களுக்காக சாட்சியம் சொல்பவர் யார்?’ என்று கேட்பான். நூஹ் அவர்கள், ‘முஹம்மத்(ஸல்) அவர்களும், அவர்களின் சமுதாயத்தினரும் (எனக்காக சாட்சியம் சொல்வார்கள்)” என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம். ‘அவ்வாறே உங்களை மக்களுக்கு சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்” என்னும் புகழுயர்ந்த இறைவனின் (திருக்குர்ஆன் 02:143) வசனம் இதைத் தான் குறிக்கிறது.
‘நடுநிலையான’ என்னும் சொல்லின் கருத்து ‘நீதியான’ என்பதாகும். என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3340
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (வைக்கப்பட்ட) புஜம் (முன்னங்கால்) ஒன்று நபி(ஸல்) அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்கள் (அதைத் தம்) வாயாலேயே (பற்களில்) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு, ‘நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களை பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), ‘நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதையும் உங்களுக்கு உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்கமாட்டீர்களா?’ என்று கேட்பார்கள். மக்கள் சிலர், ‘உங்கள் தந்தை ஆதம்(அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள். எனவே, மக்கள் ஆதம்(அலை) அவர்களிடம் சென்று, ‘ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்திரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கி) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், ‘(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது (கடும்) கோபமுற்றான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபித்ததில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (எனவே!) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். உடனே, மக்கள் நூஹ்(அலை) அவர்களிடம் சென்று, ‘நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பட்ட) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ், ‘நன்றி செலுத்தும் அடியார்’ என்று குறிப்பிட்டுள்ளான். நாங்கள் (சிக்கி) இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள (இந்தத் துன்ப) நிலையை நீங்கள் காணவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள (இந்தத் துன்ப) நிலையை நீங்கள் காணவில்லையா? எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபமுற்றுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபித்ததில்லை. இதற்குப் பிறகும் இதைப்போல் கோபம் கொள்ள மாட்டான். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார். மக்கள் என்னிடம் வருவார்கள். நான் இறை சிம்மாசனத்திற்குக் கீழே சஜ்தா செய்வேன். அப்போது ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந்துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு உபைத்(ரஹ்), ‘இந்த ஹதீஸ் முழுமையாக எனக்கு நினைவில்லை” என்று கூறுகிறார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3341
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர் – அறிவுரை பெறுபவர் எவராவது இருக்கிறாரா?’ என்னும் (திருக்குர்ஆனின் 54வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறை வசனத்தைப் பொதுவாக மக்கள் ஓதும் பிரபலமான முறைப்படியே ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என்று ஓதினார்கள். (வெகு சிலர் ஓதுவதைப் போல் ‘முஸ்தகிர்’ என்று பிரித்தோ, வேறொரு முறைப்படி ‘முஸ்ஸக்கிர்’ என்றோ ஓதவில்லை)
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3342
அபூ தர்(ரலி) அறிவித்து வந்ததாக அனஸ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிளக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை, ‘ஸம்ஸம்’ தண்ணீரால் கழுவினார்கள். பிறகு, நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தட்டு ஒன்றைக்கொண்டு வந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு, என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறினார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்கு வந்தபோது வானத்தின் காவலரிடம், ‘திறங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘யார் அது?’ என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், ‘இதோ ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘உங்களுடன் வேறெவராது இருக்கிறரா?’ என்று கேட்டார். அவர்கள், ‘என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?’ என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், ‘ஆம், திறவுங்கள்” என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) ‘நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று கேட்டேன். அவர், ‘இவர் ஆதம்(அலை) அவர்கள்; அவர்களின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களின் சந்ததிகள். அவர்களில் வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள். எனவே, தான் அவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களை பார்க்கும்போது (மழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரக வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப்பட்டு) அழுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு, இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், ‘திறவுங்கள்” என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் வாயிலைத்) திறந்தார்.
அனஸ்(ரலி) தொடர்ந்து கூறினார்கள்: “நபி(ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ்(அலை), ஈசா(அலை) இப்ராஹீம்(அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர்களின் இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம்(அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம்(அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே கூறினார்கள்” என்று அபூ தர்(ரலி) கூறினார். அனஸ்(ரலி) மேலும் கூறினார்கள்: ஜிப்ரீல்(அலை) அவர்கள் இத்ரீஸ்(அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘நல்ல இறைத் தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘இவர் இத்ரீஸ் என்று கூறினார்கள். பிறகு மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், ‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக” என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், ‘இவர் மூஸா” என்று கூறினார்கள். பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், ‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். பிறகு நான் ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், ‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘(இவர்) ஈசா” என்று பதிலளித்தார்கள். பிறகு நான் இப்ராஹீம் அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், ‘நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘இவர் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அனஸ்(ரலி) மேலும் கூறினார்கள்: ஜிப்ரீல்(அலை) அவர்கள் இத்ரீஸ்(அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘நல்ல இறைத் தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘இவர் இத்ரீஸ் என்று கூறினார்கள். பிறகு மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், ‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக” என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், ‘இவர் மூஸா” என்று கூறினார்கள். அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், ‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று கூறினார்கள். பிறகு நான் ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், நான், ‘இவர் யார்?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘(இவர்) ஈசா” என்று பதிலளித்தார்கள். பிறகு நான் இப்ராஹீம் அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், ‘நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘இவர் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி), அபூ ஹய்யா(ரலி) ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்கி(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக் கொண்டிருக்கும் எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
இப்னு ஹஸ்கி(ரஹ்) அவர்களும் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாய்யத்தாருக்காக) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப்பெற்றுக் கொண்டு நான் திரும்பியபோது மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூஸா அவர்கள், ‘உங்கள் சமுதாயத்தவர் மீது என்ன கடமையாக்கப்பட்டது” என்று கேட்டார்கள். நான், ‘அவர்களின் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘அப்படியானால் உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது” என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூஸா அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி முன்பு போல் (“உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது”) என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா அவர்களிடம் மீண்டும் கூறியபோது, ‘உங்களுடைய இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்கு சக்தி பெறமாட்டார்கள்” என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன். அதற்கு அவன், ‘அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒரு முறை சொல்லப்பட்ட சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை” என்று கூறினான். உடனே, நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், ‘உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்” என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (வானுலகின் எல்லையான) ‘சித்ரத்துல முன்தஹா’வுக்குச் சென்றார்கள். அப்போது அவையென்னவென்று நான் அறிய முடியாத படி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3343
நபி(ஸல்) அவர்கள் கூறினார்நான் (அகழ்ப்போரின்போது) கீழைக் காற்றினால் (‘ஸபா’) வெற்றியளிக்கப்பட்டேன். ‘அத்’ சமுதாயத்தார் மேலைக் காற்றினால் (‘தபூர்’) அழிக்கப்பட்டனர். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3344
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) (யமனிலிருந்து) நபி(ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல் ஃபஸாரீ(ரலி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ(ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரி(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும கோபமடைந்து, ‘நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டுவிடுகிறாரே” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின் உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்” என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன் வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்களின் விஷயத்தில் அல்லாஹ் என் மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அப்போது வேறொருமனிதர் இப்படி (குறை சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் இப்னு வலீத்(ரலி) தாம் என்று நினைக்கிறேன் அவரை நபி(ஸல்) அவர்கள் (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து .. அல்லது இவரின் பின்னே ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் எத்தகையவர்களாக இருப்பார்கள் என்றால், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்தப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவணக்கம் புரிபவர்களை விட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ‘ஆத்’ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்” என்று கூறினார்கள்.அனஸ்(ரலி) மேலும் கூறினார்கள்: ஜிப்ரீல்(அலை) அவர்கள் இத்ரீஸ்(அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘நல்ல இறைத் தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘இவர் இத்ரீஸ் என்று கூறினார்கள். பிறகு மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், ‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக” என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், ‘இவர் மூஸா” என்று கூறினார்கள். பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், ‘நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!” என்று என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், ‘(இவர்) ஈசா” என்று பதிலளித்தார்கள். பிறகு நான் இப்ராஹீம் அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், ‘நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!” என்று கூறினார்கள். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு, ‘இவர் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3345
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘ஃப ஹல் மின்(ம்) முத்த(க்)கிர் அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?’ என்னும் (திருக்குர்ஆனின் 54-வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள) இறைவசனத்தை ஓதுவதை செவியுற்றேன்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3346
(நபி(ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது” என்று தம் கட்டை விரலையும் அதற்கடுததுள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்; தீமை பெருகிவிட்டால்..” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3347
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்துவிட்டான்” என்று கூறி தம் கையால் (அரபி எண் வடிவில்) என்று மடித்துக் காட்டினார்கள்.”
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3348
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி, ‘ஆதமே!” என்பான். அதற்கு அவர்கள், ‘இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், ‘நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம்(அலை) அவர்கள், ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு அவன், ‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)” என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்” (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) ‘அல்லாஹுஅக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)” என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) ‘அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)” என்று கூறினோம். உடனே அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) ‘அல்லாஹ் அக்பர்” என்று கூறினோம். அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), ‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அப்போது அவர்கள், ‘நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போன்றே (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்” என்று கூறினார்கள். என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3349
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித்தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, ‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகிவிட்ட நம்முடைய) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்” (திருக்குர்ஆன் 21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தின் பால்) கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்” என்று (அவர்களை விட்டு விடும்படி) கூறுவேன். அப்போது, ‘தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தைவிட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறுவார்கள். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈஸா-அலை அவர்கள்) கூறியதைப் போல், ‘நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே, நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கிறாய்” என்னும் (திருக்குர்ஆன் 05: 117-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3350
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம்(அலை) அவர்கள், ‘நான் உங்களிடம், எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, ‘இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்கள், ‘இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?’ என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், ‘நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)” என்று பதிலளிப்பான். பிறகு ‘இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள்” என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3351
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம்(அலை) அவர்களின் உருவப் படத்தையும். கண்டார்கள். உடனே, இந்தக் குறைஷிகளோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள். என்று அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். (இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3352
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் உருவப்படங்களைப் பார்த்தபோது அவற்றை அழிக்கும்படி உத்திரவிட்டு அவ்வாறே அவை அழிக்கப்பட்ட பின்புதான் அதனுள் நுழைந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்களையும் அவர்கள் தம் கையில் குறி சொல்லும் அம்புகளைப் பிடித்தபடி இருக்கும் நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். உடனே, ‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷிகளை) அப்புறப்படுத்தவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறி பார்த்ததில்லை” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3353
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர்(ஸல்) (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!” என்று பதிலளித்தார்கள் அதற்கு மக்கள், ‘நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அரபுகளின் (பரம்பரையான) கரங்கங்ளைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றார்” என்று பதிலளித்தார்கள்.
இது அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3354
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் இன்றிரவு (கனவில்) இரண்டு வானவர்கள் (ஜீப்ரீலும் மீக்காயிலும்) வந்தார்கள். பிறகு நாங்கள் உயரமான ஒரு மனிதரிடம் சென்றோம். நீளத்தின் காரணத்தால் அவரின் தலையை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள் தாம் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவர். என சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3355
முஜாஹித்(ரலி) கூ அறிவித்தார் இப்னு அப்பாஸ்(ரலி) இருக்கும்போது மக்கள், ‘தஜ்ஜாலின் இரண்டு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (நிராகரிப்பவன்) என்றோ ‘காஃப், ஃபே, ரே’ என்றோ எழுதப்பட்டிருக்கும். (என்பது உண்மையா?)” என்று பேசிக் கொண்டார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘நான் இப்படிச் செவியுறவில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள், ‘இப்ராஹீம்(அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்) என்றால் உங்கள் தோழரான என்னைப் பாருங்கள். மூஸா(அலை) அவர்களோ சுருள்முடி கொண்டவர்களாகவும், (கோதுமை போன்ற) பழுப்பு நிறம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஈச்ச மர நாரினாலான கடிவாளம் இடப்பட்ட சிகப்பு நிற ஒட்டகத்தின் மீது சவாரி செய்வார்கள். அவர்கள் (ஹஜ்ஜின்போது ‘அல் அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்று உள்ளது’ என்று கூறினார்கள்” எனச் சொல்ல கேட்டேன்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3356
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள், தம் எண்பதாவது வயதில் ‘கத்தூம்’ (எனும் வாய்ச்சி’யின்) மூலமாக விருத்த சேதனம் செய்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஸலமா(ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான்(ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்தார்கள். இன்னும் பலர் வழியாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3357
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3358
‘இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) ‘நான் நோயுற்றிருக்கிறேன்” என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், ‘இப்படிச் செய்தது யார்?’ என்று கேட்டபோது, ‘ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது” என்று கூறியதுமாகும். . (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம்(அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா(அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) ‘இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா(அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா(அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா(அலை) அவர்களிடம்), ‘அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். உடனே, சாரா(அலை) அவர்கள் அல்லாஹ் விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், ‘எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, ‘நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா(அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா(அலை) அவர்கள், இப்ராஹீம்(அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, ‘என்ன நடந்தது?’ என்று கேட்டார்கள். அவர், ‘அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்… சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3359
உம்மு ஷுரைக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், ‘அது இப்ராஹீம்(அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது” என்றும் கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3360
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். “நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்து விடாதவர்களுக்கு மட்டுமே அபயமுண்டு. மேலும், அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர்” என்றும் (திருக்குர்ஆன் 06:82ம்) இறைவசனம் அருளப்பட்டபோது, நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் தனக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்தான் இருக்கிறார்?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. ‘தங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும்’ என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13-வது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று பதிலளித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3361
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு நாள் (விருந்தின்போது) நபி(ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ் மறுமை நாளில் முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். அழைப்பவனின் குரலை அவர்கள் கேட்பார்கள்; அனைவரின் பார்வைக்கும் அவர்கள் தென்படுவார்கள்; சூரியன் அவர்களுக்கு அருகில் வரும்.” என்று கூறிவிட்டு ‘ஷஃபாஅத்’ எனும் பரிந்துரை தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள்… பிறகு அவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் வருவார்கள். ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரும் பூமியில் அவனுடைய நண்பருமாவீர்கள். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரையுங்கள்” என்று கூறுவார்கள். அவர்கள், தாம் சொன்ன பொய்களை நினைவு கூர்ந்து, (இன்று) என்னைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன். நீங்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று பதிலளிப்பார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3362
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இஸ்மாயீலின் தாயா(ஹாஜ)ருக்குக் கருணைபுரியட்டும். அவர்கள் மட்டும் (இறையருளால் பொங்கி வந்த ‘ஸம் ஸம்’ நீரை அள்ளி எடுத்துத் தம் தோல் பையில் வைக்க) அவசரப்பட்டிருக்காவிட்டால் ‘ஸம்ஸம்’ (கிணறு, பூமியின் மேற்பரப்பில்) ஓடிக் கொண்டிருக்கும் ஓர் ஊற்றாக ஆம்விட்டிருக்கும். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3363
உஸ்மான் இப்னு அபீ சுலைமான்(ரஹ்) அறிவித்தார்; நாங்கள் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (ஒருவர் அவர்களிடம் ‘மகாமு இப்ராஹீம்’ பற்றி, தான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொன்னபோது) அவர்கள், ‘எனக்கு இப்படி இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்க வில்லை. மாறாக அவர்கள், ‘இப்ராஹீம்(அலை) அவர்கள் (குழந்தை) இஸ்மாயீல்(அலை) அவர்களையும் அவர்களின் தாயாரையும், அவர்கள் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த நிலையில் அவர்களுடன் தோல் துருத்தி (தண்ணீர்ப் பை) ஒன்று இருக்க, அழைத்துக் கொண்டு முன்னால் சென்றார்கள். பிறகு அவரையும் அவரின் மகன் இஸ்மாயீலையும் இப்ராஹீம்(அலை) அவர்கள் அழைத்து வந்தார்கள்” என்று கூறினார்கள்.
”இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்” என்று இப்னு அப்பாஸ்(ரலி) சொல்லவில்லை.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3364
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்; பெண்கள் முதன்முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல்(அலை) அவர்களின் தாயார் ஹாஜர்(அலை) அவர்களின் தரப்பிலிருந்து தான் ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மீது ஏற்பட்ட தன்னுடைய பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்தார்கள்.
பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள், ஹாஜர்(தன்மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றுக்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூடக் கிடையாது. இருந்ததும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம் பழமுள்ள தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள் (அவர்களை அங்கேயேவிட்டுவிட்டு தம் ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர்(அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, ‘இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களைவிட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹிம்(அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். அதற்கு ஹாஜர்(அலை) அவர்கள், ‘அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்த சென்று மலைக் குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி, இச்சொற்களால் பிரார்த்தித்தார்கள்: ‘எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்தி விட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்.) எனவே, இவர்களின் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள்” என்று இறைஞ்சினார்கள். (திருக்குர்ஆன் 14:37) இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்குப் பாலுட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர்ப் பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டபோது அவரும் தாகத்திற்குள்ளானார். அவரின் மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை.. அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை அவர்கள் பார்க்க லானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) எவரேனும் கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்ட படி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. எனவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தபோது தன் மேலங்கியின் ஓரத்தை உயர்த்தி சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதரை போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றுக்கு னவந்து அதன் மீது (ஏறி) நின்று எவரேனும் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: ‘இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கிற ‘சஃயு (தொங்கோட்டம்) ஆகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்றபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, ‘சும்மாயிரு” என்று தமக்கே கூறினார்கள். பிறகு, காதைத் தீட்டி கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, ‘(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)” என்று கூறினார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். அந்த இப்ராஹீம்(அலை) அவர்கள், ‘இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள்வளம் தரும்படி இப்ராஹீம்(அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். எனவேதான், மக்காவைத் தவிர பிற இடங்களில் இவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக் கொள்வதேயில்லை” என்று கூறினார்கள்.
இப்ராஹீம்(அலை) அவர்கள், ‘உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் உரை அவரின் (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்” என்று கூறினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, ‘உங்களிடம் எவரேனும் வந்தார்களா?’ என்று கேட்க, அவரின் மனைவி, ‘ஆம், எங்களிடம் தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்” என்று (சொல்லிவிட்டு) அவரைப் புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) ‘என்னிடம் நம்முடைய பொருளாதார நிலை எப்படியுள்ளது என்று கேட்டார். நான், ‘நாங்கள் நலமுடன் இருக்கிறோம்’ என்ற தெரிவித்தேன்.” என்று பதில் கூறினார். ‘அவர், உனக்கு அறிவுரை ஏதும் சொன்னாரா?’ என்று இஸ்மாயீல்(அலை) கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஆம்; உங்களுக்கு ஸலாம் உரைக்கிறார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும் படி உங்களுக்குக் கட்டளையிடுகிறார்.” என்று கூறினார். இஸ்மாயீல்(அலை) அவர்கள், ‘அவர் என் தந்தை; நீ தான் அந்த நிலைப்படி உன்னை (மனைவியாக) வைத்துக் கொள்ளும் படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்.” என்று கூறினார்கள். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு, (ஒரு நாள்) இஸ்மாயீல்(அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்குக் கீழே தன்னுடைய அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம்(அலை) அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள், அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாள்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும்போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொண்டார்கள். (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்) பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள், ‘இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான்.” என்று கூறினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள், ‘உங்களுடைய இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள், ‘நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்ற உதவுவாயா?’ என்று கேட்க இஸ்மாயீல்(அலை) அவர்கள், ‘அப்படியென்றால், நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்துக்) கட்டளையிட்டுள்ளான்.” என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் கற்களைக் கொண்டு வந்து கொடுக்கலானார்கள். கட்டடம் உயர்ந்துவிட்டபோது இஸ்மாயீல்(அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டு வந்து இப்ராஹீம்(அலை) அவர்கள் கற்களைக் கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்துவிட்டபோது இஸ்மாயீல்(அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டு வந்து இப்ராஹீம்(அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் அதன்மீது ஏறி நின்று கஅபாவைக் கட்டலானார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தந்தார்கள். அப்போது இருவருமே, ‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள். நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்” (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி, ‘இறைவா! எங்களிடமிருந்து (இந்த புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்” (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவைப் புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3365
இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவாது: இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் மனைவி (ஸாரா அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது இப்ராஹீம்(அலை) அவர்கள் இஸ்மாயீல்(அலை) அவர்களையும் இஸ்மாயீல்(அலை) அவர்களின் தாயாரையும் அழைத்துக் கொண்டு (மக்காவை நோக்கிச்) சென்றார்கள். அப்போது அவர்களுடன் தண்ணீருள்ள தோல் பை ஒன்று இருந்தது. இஸ்மாயீலின் தாயார் இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்கா வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு பெரிய மரத்திற்குக் கீழே ஹாஜரைவிட்டுவிட்டு (ஷாமில் உள்ள) தம் குடும்பத்தாரிடம் (ஸாராவிடம்) இப்ராஹீம் திரும்பினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த இஸ்மாயீலின் அன்னை (ஹாஜர்), ‘கதாஉ’ என்னும் இடத்தை அடைந்தவுடன் ‘இப்ராஹீமே! எங்களை யாரிடம்விட்டுச் செல்கிறீர்கள்?’ என்று பின்னாலிருந்து இப்ராஹீமைக் கூப்பிட்டு கேட்டதற்கு அவர் ‘அல்லாஹ்விடம்…’ என்றார். ‘அப்படியானால், அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு’ என்றார் ஹாஜர். பின்னர் திரும்பி வந்து தோல் பையிலிருந்து நீர் அருந்தினார். அவரின் குழந்தைக்காக பால் சுரந்தது. பின்னர் தண்ணீர் தீர்ந்தவுடன் அவர் (தமக்குள்), ‘நான் போய் (மலை மீதேறி) நோட்டமிட்டால் எவராவது எனக்குத் தென்படலாம்” என்று கூறினார்கள்; பிறகு, ஸஃபா மலைக் குன்றுக்குச் சென்று ஏறினார். அவர் (அங்கிருந்து) நோட்டமிட்டார்; எவராவது தமக்குத் தென்படுகிறாரா என்று பார்த்தார். ஆனால் எவரும் அவருக்குத் தென்படவில்லை. எனவே, பள்ளத்தாக்கிற்குச் சென்றார். அங்கு சென்று சேர்ந்தததும் ஓடிச் சென்று மர்வாவை அடைந்தார். அப்படிப் பல சுற்றுகள் ஓடினார். பிறகு, ‘நான் போய் குழந்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் (நன்றாயிருக்குமே)” என்று தமக்குள் கூறினார். எனவே, (மலைக்குச்) சென்று நோட்டமிட்டார். ஆனாலும், குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில் தான் (அழுதபடி) இறப்பற்கு முன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக் கொண்டிருந்தார். அவரின் (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. எனவே, அவர் (தமக்குள்) ‘நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக் கூடும்” என்று கூறிச் சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்; பார்த்தார்; (பார்த்துக்கொண்டேயிருந்தார்.) எவரும் அவருக்குத் தென்படவில்லை. இவ்வாறே ஏழு சுற்றுகளை நிறைவுசெய்துவிட்டார். பிறகு, ‘குழந்தை என்ன செய்கிறது என்று நான் போய் பார்த்து வந்தால் (நன்றாயிருக்குமே)” என்று (தமக்குள்) கூறினார்கள். அந்த நேரத்தில் குரல் ஒன்று வந்தது. (அதைக் கேட்டு) அவர், ‘உங்களால் நன்மை செய்ய முடியுமாயின் நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கூறினார். அங்கே (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் நின்றிருந்தார்கள். தம் குதிகாலால் இப்படி சைகை செய்து பூமியில் தம் குதிகாலை (பள்ளம் விழும்படி) அழுத்தினார்கள். தண்ணீர் பீறிட்டு வந்தது. இஸ்மாயீலின் தாயார் பதறிப்போய் அதை அணைகட்டி வைக்கப் பள்ளம் தோண்டலானார்.
அபுல் காசிம்(ஸல்) அவர்கள், ‘அவர் அப்படியேவிட்டு விட்டிருந்தால் தண்ணீர் வெளியே ஓடக் கூடியதாக இருந்திருக்கும்” என்று கூறினார்கள்.
உடனே அவர் அந்தத் தண்ணீரைக் குடிக்கலானார். அவரின் பால் அவரின் குழந்தைக்காகச் சுரந்த வண்ணமிருந்தது. அப்போது ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தபோது பறவையொன்றைக் கண்டார்கள். அதை அவர்கள் (இதுவரை அப்பகுதியில் இல்லாத) புதுமையான ஒன்றாகக் கருதினார்கள். எனவே, ‘பறவை நீர் நிலையின் அருகில் தானே இருக்கும்” என்று பேசிக் கொண்டார்கள். தங்கள் தூதரை அவர்கள் அனுப்பி வைக்க, அவர் சென்று பார்த்தபோது அவர்கள் (இஸ்மாயீல், அவரின் தாயார்) இருவரும் நீர் நிலை அருகே இருக்கக் கண்டார். உடனே, தம் குலத்தாரிடம் வந்து அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்தார். அவர்கள் (அன்னை) ஹாஜர்(அலை) அவர்களிடம் சென்று, ‘இஸ்மாயீலின் அன்னையே! நாங்கள் உங்களுடன் இருக்க.. அல்லது உங்களுடன் வசிக்க எங்களக்கு அனுமதியளிப்பீர்களா? என்று கேட்டார்கள். (அவர்கள் அனுமதியளிக்கவே அங்கேயே வசிக்கலானார்கள்.) ஹாஜருடைய மகன் (இஸ்மாயீல்(அலை) அவர்கள்) பருவ வயதையடைந்தார். ஜுர்ஹும் குலத்தாரிலேயே ஒரு பெண்ணை மணந்தார். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு ஒரு நாள் தம் மனைவியையும் மகனையும் ‘அவர்கள் என்ன ஆனார்கள்’ என்று பார்த்துவிட்டு வரலாமென்று) தோன்றியது. எனவே, தம் வீட்டாரிடம் (முதல் மனைவி ஸாராவிடம்) நான் (மக்காவில்)விட்டுவந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்துவரப் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டு (மக்கா)ச் சென்று (இஸ்மாயீல்(அலை) அவர்களின் மனைவியிடம்) ஸலாம் சொல்லி,’இஸ்மாயீல் எங்கே?’ என்று கேட்டார்கள். அதற்கு இஸ்மாயீல்(அலை) அவர்களின் மனைவி, அவர் வேட்டையாடச் சென்றார்” என்று பதிலளித்தார். இப்ராஹீம்(அலை) அவர்கள்,’அவர் வந்தால், ‘உன் நிலைப்படியை மாற்றி விடு’ என்று (நான் கட்டளையிட்டதாக) சொல்லிவிடு” என்று கூறினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் வந்தபோது அவரின் மனைவி அதை அவருக்குத் தெரிவித்தார். இஸ்மாயீல்(அலை) அவர்கள்,’நீதான் நிலைப்படி. எனவே, நீ உன் வீட்டாரிடம் சென்று விடு” என்று கூறினார்கள். மீண்டும் (சிறிது காலத்திற்குப் பிறகு) இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு (மக்காவில் உள்ள மனைவி, மகனைப் பார்த்துவிட்டு வரலாமென்று,) தோன்றவே தம் வீட்டாரிடம்,’நான் (மக்காவில்)விட்டுவிட்டு வந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்து வரப்போகிறேன்” என்று கூறினார்கள். பிறகு மக்காவிற்குச் சென்று,’இஸ்மாயீல் எங்கே?’ என்று அவரின் மனைவியிடம் கேட்டார்கள். அதற்கு அவர்,’வேட்டையாடச் சென்றிருக்கிறா: என்று பதிலளித்தார். பிறகு,’நீங்கள் (எங்களிடம்) தங்கி உண்ணவும் பருகவும் மாட்டீர்களா?’ என்று கேட்டதற்கு இப்ராஹீம்(அலை) அவர்கள்,’உங்கள் உணவும் பானமும் எவை?’ என்று வினவ அவர்,’எங்கள் உணவு இறைச்சியாகும். எங்கள் பானம் தண்ணீராகும்” என்று கூறினார். இப்ராஹீம்(அலை) அவர்கள்,’இறைவா! இவர்களுக்கு இவர்களுடைய உணவிலும் பானத்திலும் வளத்தை அளிப்பாயாக! என்று கூறினார்கள்.
அபுல் காசிம்(ஸல்) அவர்கள்,’(மக்காவின் உணவிலும் பானத்திலும்) இப்ராஹீம்(அலை) அவர்களின் பிரார்த்தனையின் காரணத்தால் தான் வளம் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.
பிறகு, இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு (மீண்டும் ஒரு முறை இஸ்மாயீல்(அலை) அவர்களைப் பார்த்து வரவேண்டும் போல்) தோன்றியது. உடனே அவர்கள் (மக்கா) செல்ல, அங்கு இஸ்மாயீல்(அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குப் பின் பக்கத்தில் தம் அம்பைச் சீர் செய்து கொண்டிருக்கக் கண்டார்கள். ‘இஸ்மாயீலே! உன் இறைவன் தனக்கு ஓர் இல்லத்தை நான் (புதுப்பித்துக்) கட்டவேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறினார்கள். அதற்கு இஸ்மாயீல்(அலை) அவர்கள்,’அப்படியாயின் நான் (உதவி) செய்கிறேன்” என்று கூறினார்கள். உடனே இருவரும் தயாராகி, இப்ராஹீம்(அலை) அவர்கள் கட்டத் தொடங்க, இஸ்மாயீல்(அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து தந்தார்கள். இருவரும் (அப்போது),’இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய் (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் கட்டடம் எழும்பியது. பெரியவ(ர் இப்ராஹீம் அன்னா)ருக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே, ‘(மகாமு இப்ராஹீம்’ என்றழைக்கப்படும்) இந்தக் கல் மீது நின்றார்கள். அவர்களுக்கு இஸ்மாயீல்(அலை) கற்களை எடுத்துத் தந்தார்கள். இருவரும்’இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்பாயாக! நிச்சயமாக, நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்” (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3366
அபூ தர்(ரலி) அறிவித்தார். நான் (நபி(ஸல்) அவர்களிடம்), ’இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அவர்கள்,’அல் மஸ்ஜிதுல் ஹராம் மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான்,’பிறகு எது?’ என்று கேட்டேன். அவர்கள்,’ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான்,’அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது” என்று கேட்டேன். அவர்கள்,’நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,’நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3367
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஒரு போரிலிருந்து திரும்பி வரும்போது) உஹுது மலை தென்பட்டது. உடனே,’இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாம் இதை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம் அவர்கள் மக்கா நகரைப் புனிதமானது என்று அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே உள்ளவற்றைப் புனிதமானவை என்று அறிவிக்கிறேன்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3368
நபி(ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை (புதுப்பித்துக்) கட்டிய பொழுது இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களை விடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி) கட்டியிருப்பதை நீ பார்க்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதை தாங்கள் மீண்டும் கட்டக் கூடாதா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் சாலிம்(ரஹ்) கூறினார். (இதை அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு முஹம்மத்இப்னி அபூ பக்ர்(ரலி) அறிவிக்கக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ‘ஆயிஷா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும்) வளைந்த பகுதியை அடுத்துள்ள (கஅபாவின்) இரண்டு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம் இறையில்லமான கஅபா, இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (கொஞ்சம்விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும் என்றே கருதுகிறேன்” எனக் கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3369
அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். மக்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே!” உங்களின் மீது நாங்கள் எப்படி ‘ஸலவாத்து’ சொல்வது?’ என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹமமதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத் இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தாரின் மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் அவர்களின் மீதும், அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் அவர்களின் மீதும் அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் சந்ததிகளின் மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மதின் மீதும் அவர்களின் மனைவிமார்களின் மீதும் அவர்களின் சந்ததிகளின் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம், நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய்’ என்று சொல்லுங்கள்’ என பதிலளித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3370
அப்துர் ரஹ்மான்இப்னுஅபீ லைலா(ரஹ்) அறிவித்தார். என்னை கஅப் இப்னுஉஜ்ரா(ரலி) சந்தித்து, ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம், அதை எனக்கு வழங்குங்கள்” என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், ‘நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் சலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கிறான்” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘இறைவா! இப்ராஹீம் அவர்களின் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம அவர்களின் மீதும் இப்ராஹீம அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்தைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனும் ஆவாய்’ என்று சொல்லுங்கள்” என பதிலளித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3371
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். ‘அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் என்று கூறுவார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3372
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் நாமே இப்ராஹீம(அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதி யுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப் பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி,) இப்ராஹீம(ஆலை) அவர்கள, ‘என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகிறாய் என்று எனக்குக் காட்டு” என்று கேட்போது அல்லாஹ்? ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று கேட்டான். அவர்கள், ‘ஆம்; (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) ஆனாலும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காக இப்படிக் கேட்டேன்” என்று பதிலளித்தார்கள். லூத்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள்.. யூசுஃப்(அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவிற்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால் (விடுதலையளிக்க அழைத்தவரிடம் (அவரின் அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக் கொண்டிருப்பேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3373
ஸலமா இப்னுஅக்வஃ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அம்பெறியும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த, பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல்(அலை) அவர்களும்) அம் பெய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் நீங்கள் அம்பெறியுங்கள். நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள். உடனே, அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த இரண்டு சாரரில் ஒரு சாரார் தம் கைகளை (அம்பெய்யாமல்) தடுத்து நிறுத்தினார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அம்பெய்யாமல் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் அம்பெய்வோமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், (மீண்டும்) ‘நீங்கள் அம்பெய்யுங்கள். நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3374
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தாம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!” என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், ‘நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அரபுகளின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றார்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3375
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். லூத்(அலை) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அவர்கள் பலமான ஓர் ஆதரவாளினிடமே புகலிடம் தேடுபவர்களாயிருந்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3376
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?’ என்னும் (54-வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறைவசனத்தை ஓதினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3377
அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) கூறினார். (ஸாலிஹ் அலை- அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி(ஸல்) அவர்கள், ‘ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூ ஸமஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக் கொண்டு முன்வந்தான்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3378
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தபூக் போரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) ‘ஹிஜ்ர்’ என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும், தம் தோழர்களுக்கு உத்திரவிட்டார்கள். தோழர்கள், ‘நாங்கள் அதிலிருந்து (எடுத்த தண்ணீரால் ஏற்கனவே) மாவு பிசைந்து விட்டோமே! (என்ன செய்வது?)” என்று கேட்டனர். அதற்கு அவர்கள் அந்த மாவை (சாப்பிடாமல்) வீசியெறிந்து விடும்படியும் அந்தத் தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் உத்திரவிட்டார்கள்.
(ஸமூத் குலத்தாரின் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீரால் தயாரித்த) உணவை எறிந்து விடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள்” என்று சப்ரா இப்னு மஅபத்(ரஹ்) அவர்களும் அபுஷ்ஷமூஸ்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள். ‘அதன் தண்ணீரால் மாவு தயாரித்தவர் அதனை எறிந்து விடட்டும்” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3379
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மக்கள் (தபூக் போரின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான ‘ஹிஜ்ர்’ என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டு விடும்படியும் கட்டளையிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் அலை- அவர்களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) எந்தக் கிணற்றிற்கு வந்து கொண்டிருந்தோ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் உத்திரவிட்டார்கள்.
நாஃபிவு(ரஹ்) அவர்களிடமிருந்து உஸாமா(ரஹ்) அவர்களும் இதே போன்று அறிவித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3380
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற பொழுது, ‘அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்து விடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையதீர்கள்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3381
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தமக்குத்தாமே அநீதியிழைத்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்ததைப் போன்ற தண்டனை உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 338
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன் தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம்(அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வரான யஅகூப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3383
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘மனிதர்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘மனிதர்களில் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர் தாம்” என்று பதிலளித்தார்கள். மக்கள், ‘இதைப் பற்றி உங்களிடம் நாங்கள் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் மக்களிலேயே மிகவும் கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்” என்று கூறினார்கள். மக்கள், ‘நாங்கள் இதைப் பற்றியும் உங்களிடம் கேட்கவில்லை”என்று கூறினர். உடனே, நபி(ஸல்) அவர்கள், அப்படியென்றால், அரபுகளின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்களா? மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிவிடும் போதும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்” என்று பதிலளித்தார்கள். அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்தே வேறொர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3384
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் மரணப் படுக்கையில் இருந்தபோது) என்னிடம், ‘அபூ பக்ர், அவர்களை மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி சொல்” என்று கூறினார்கள். நான், ‘அவர்கள் (அதிகமாக துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள். நீங்கள் தொழுகைக்காக நிற்குமிடத்தில் அவர்கள் நிற்க நேரும்போது மனம் நெகிழ்ந்து போய் (அழுது) விடுவார்கள்” என்று சொன்னேன். அவர்கள் முன்பு சொன்னது போன்றே மீண்டும் கூறினார்கள். நானும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன்.
அறிவிப்பாளர் ஷுஉபா(ரஹ்) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் மூன்றாவது முறையில் அல்லது நான்காவது முறையில் ‘(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகிற)வர்கள், அபூ பக்கருக்கு சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3385
அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அப்போது, ‘அபூ பக்ரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), ‘அபூ பக்ர்(ரலி) இத்தகைய (இளகிய மனமுடைய)வராயிற்றே!” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்பு போன்றே (மீண்டும்) சொல்ல, ஆயிஷாவும் அதையே கூறினார்கள். பின்னர், நபி(ஸல்) அவர்கள் ‘அபூ பக்ருக்குச் சொல்லுங்கள். அவர் மக்களுக்குத் தெரிவிக்கட்டும். (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்ற)வர்கள்’ என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளிலேயே அபூ பக்ர்(ரலி) (மக்களுக்குத்) தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பாளர் ஹுஸைன்(ரஹ்) கூறினார்கள்: ஸாயிதா(ரஹ்) அவர்களிடமிருந்து, (‘அபூ பக்ர்(ரலி) இத்தகைய மனிதராயிற்றே’ என்னும் ஆயிஷா(ரலி) அவர்களின் சொல்லுக்குப் பதிலாக,) ‘இளகிய மனமுடைய மனிதராயிற்றே’ என்று சொன்னதாக அறிவித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3386
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று. இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு வலீதைப் காப்பாற்று. இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று. இறைவா! ‘முளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை (இறுக்கிக்) கடுமைப்படுத்துவாயாக! இறைவா! யூசுஃப் அவர்களின் சமுதாயத்தாருக்குக் கொடுத்த (கடும் பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போன்று முளருக்கும் (கடும் வறட்சி நிறைந்த) சில ஆண்டுகளைக் கொடு” என்று அக்குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3387
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ், லூத்(அலை) அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் பலம் வாய்ந்த ஓர் உதவியாளனிடம் தஞ்சம் புகுந்தவர்களாக இருந்தார்கள். யூசுஃப்(அலை) அவர்கள் (அடைபட்டுக்) கிடந்த காலம் நான் சிறையில் (அடைபட்டுக்) கிடக்க நேர்ந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போல்) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக் கொண்டிருப்பேன். (ஆனால், அவர் அவ்வளவு நெடுங்காலம் சிறையில் அடைபட்டுக் கிடந்தும், ‘தம் குற்றமற்ற தன்மையை ஏற்று அறிவிக்காதவரை சிறையிலிருந்து வெளியேற மாட்டேன்” என்று அவர் கூறுவிட்டார்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3388
மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்.
நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், ‘இன்னாரை (மிஸ்தஹ் இப்னு உஸாஸா ரலி அவர்களை) அல்லாஹ் நிந்திக்கட்டும்” என்று கூறியபடி வந்தாள். நான், ‘ஏன் (இப்படிச் சொல்கிறாய்?’) என்று கேட்டேன். அதற்கு அவள், ‘(அவதூறுச்) செய்தியை அவர் (அறியாமையால் பரப்பிவருகிறார்” என்று பதிலளித்தாள். ஆயிஷா(ரலி), ‘எந்த (அவதூறுச்) செய்தியை?’ என்று கேட்டார். அவள் அந்த அவதூறுச் செய்தியைத் தெரிவித்தாள். ஆயிஷா(ரலி), ‘இதை (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களும் (என் கணவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் செவியுற்றார்களா?’ என்று கேட்டார். நான், ‘ஆம் (செவியுற்றார்கள்)” என்று பதில் சொன்னேன். உடனே, ஆயிஷா(ரலி) மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குளிர் காய்யச்சலுடன் தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து, ‘இவளுக்கென்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். நான், ‘தன்னைப் பற்றி பேசப்பட்ட அவதூறுச் செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் காய்ச்சல் அவரைப் பீடித்துவிட்டது” என்று பதிலளித்தேன். உடனே ஆயிஷா(ரலி) (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் (நடந்ததை எடுத்துச் சொல்லி) சமாதானப்படுத்தினாலும் நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை யஅகூப் அலை அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப்(அலை) அவர்களிடம் அவர்கள் சொன்னது போன்றே) அல்லாஹ் தான் நீங்கள் (புனைந்து) கூறுபவற்றிறிகெதிராக உதவி கோரத் தகுதியானவன் ஆவான்” என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அதைத் தொடர்ந்து அல்லாஹ், தான் அருளிய (ஆயிஷா(ரலி) நிரபராதி என்று அறிவிக்கும்) வசனத்தை அருளிட நபி(ஸல்) அவர்கள் அதை ஆயிஷாவுக்கு தெரிவித்தார்கள். அதைச் செவியுற்றவுடன் ஆயிஷா(ரலி) ‘(இதற்காக) அல்லாஹ்வுக்கு (மட்டுமே) நான் நன்றி செலுத்துகிறேன். வேறெவருக்கும் நன்றி செலுத்த மாட்டேன்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3389
உர்வா(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘(நிராகரிக்கும்) மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறை உதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட)க் கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது” என்று அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 12:110) இவ்வசனத்தில் மூலத்தில் (‘பொய்யுரைக்கப்பட்டது’ என்பதைக் குறிப்பதற்குரிய சொல்லை) ‘குத்திபூ’ தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் (என இறைத் தூதர்கள் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது ‘குதிபூ’ மக்கள் தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது (எனக் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? என்று கேட்டேன்.
” ‘குத்திபூ’ (தாம் பொய்யிக்கப்பட்டு விட்டோமோ என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள் என்றே ஓத வேண்டும்)” என்று ஆயிஷா(ரலி) பதிலளித்தார்கள்.
உடனே, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களின் சமுதாயத்தினர் தங்களைப் பொய்ப்பிக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள்? (ஆனால் ‘ழன்னூ’ – நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்று தானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகிறவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி),
“அன்பு (மகனே) உர்வா! அதை அவர்கள் உறுதியாக நம்பத்தான் செய்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், ‘ழன்னூ’ என்பதற்கு நபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்’ என்றே பொருள் கொள்ளவேண்டும்; சந்தேகித்தார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது) என்று பதில் கூறினார்கள்.
உடனே, ‘கத் குதிபூ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டு விட்டது என்று நபிமார்கள் கருதலானார்கள்)’ என்று இருக்கலாமோ?’ என கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) கூறினார்:
அல்லாஹ் காப்பாற்றட்டும், நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை. அதற்கு ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இந்த வசனத்தின் பொருளாவது: இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தினர், தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்ற மார்க்க வழியில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்து கொண்டே போய், இறை உதவியும் வரத் தாமதமாகிக் கொண்டிருந்த அந்த நிலையில் தான் அந்த இறைத்தூதர்கள் தம் சமுதாயத்தினரில் தம் செய்தியைப் பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்து விட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள் கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும் கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும் துன்ப துயரங்கள் நீண்ட கொண்டே சென்ற காரணத்தாலும்) நம்முடைய செய்தியைப் பொய்யென்று கருதுகிறார்கள் என்றும் அவர்கள் எண்ணலானார்கள்”
மேலும், அல்லாஹ் கூறினான்: யூசுஃபிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் எல்லாரும் தனியாகச் சென்று ஆலோசனை செய்தார்கள். (திருக்குர்ஆன் 12:80) மேலும், காண்க: இறைவசனம் 12:87
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3390
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம்(அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வரான யஅகூஃப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3391
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அய்யூப்(அலை) அவர்கள் தங்களின் ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்றின் கால் வந்து விழுந்தது. உடனே, அவர்கள் அதைத் தம் துணியில் எடுக்கலானார்கள். அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, ‘அய்யூபே! நீங்கள் பார்க்கிற இச்செல்வம் உங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையில் நான் உங்களை (போதிய செல்வமுடையவராக) வைத்திருக்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘ஆம்; (உண்மை தான்.) என் இறைவா! ஆயினும், உன் அருள்வளம் எனக்குத் தேவைப்படுகிறதே!” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3392
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (முதன் முதலாக தமக்கு வேத வெளிப்பாடு அருளப்பட்ட பின்பு) நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியாரன) கதீஜா(ரலி) அவர்களிடம், தம் மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே, கதீஜா(ரலி) நபி(ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும், வேதம் கற்றவருமான) வரகா இப்னு நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறிஸ்துவராக மாறி விட்டிருந்த ஒரு மனிதராயிருந்தார். அவர், (நபி ஈசாவுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதி வந்தார். வரகா, நபி(ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்” என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘இவர்தாம் (இறைத்தூதர்) மூஸாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத வெளிப்பாட்டைக் கொண்டு வரும்) ‘நாமூஸ்’ எனும் வானவர். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப் போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்தால், உங்களுக்கு வலிமையுடன் கூடிய உதவுவேன்” என்று கூறினார்.
‘நாமூஸ்’ என்பவர் பிறருக்கு அறிவிக்காமல் மறைக்கிற விஷயங்களை (இறை கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவித்துத் தரும் வானவராவார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3393
மாலிக் இப்னு ஸஃஸஆ(ரலி) அறிவித்தார. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றிய (செய்திகளை) எங்களுக்கு அறிவித்தார்கள்: நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்றபோது, அங்கே ஹாரூன் அவர்கள் இருந்தார்கள். ஜிப்ரீல் அவர்கள், ‘இவர்கள் தாம் ஹாரூன் அவர்கள். இவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் என் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, ‘நல்ல சகோதரரே வருக! நல்ல நபியே வருக!” என்று கூறினார்கள். இதே நபிமொழி அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3394
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூஸா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலைமுடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள் நடுத்தர வயதுடைய சிகப்பான மனிதராகவும் (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்றும் இருந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்களின் சந்ததிகளிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நானே. பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது; மற்றொன்றில் மது இருந்தது. (வானவர்) ஜிப்ரீல் அவர்கள், ‘இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அதைக் குடியுங்கள்” என்று கூறினார்கள். நான் பாலை எடுத்துக் குடித்தேன். ‘நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக் கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப் போயிருக்கும்” என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3395
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘யூனுஸ் இப்னு மத்தா(அலை) அவர்களை விட நான் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த அடியானுக்கும் அழகல்ல” என்று கூறினார்கள். இவ்விதம், யூனுஸ்(அலை) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்து, ‘மத்தாவின் மகன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3396
மேலும், நபி(ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ‘மூஸா(அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களைப் போல் உயரமானவர்கள்” என்று கூறினார்கள். மேலும், ‘ஈசா(அலை) அவர்கள் சுருள் முடியுடையவர்கள்; நடுத்தர உயரமுடையவர்கள்” என்று கூறினார்கள். நரகத்தின் காவலர் (வானவர்) மாலிக் அவர்களையும் நினைவு கூர்ந்தார்கள்; தஜ்ஜாலையும் நினைவு கூர்ந்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3397
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அதாவது ஆபீ _ராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள் யூதர்கள், ‘இது மாபெரும் நாள். மூஸா(அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3398
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் மறுமை நாளில் மூர்ச்சை அடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நான்தான் முதல் நபராக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் அர்ஷின் கால்களில் ஒரு காலைப் பிடித்தபடி (நின்று) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா, அல்லது ‘தூர்’ சீனா மலையில் (இறைவனைச் சந்தித்தபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டு விடப்பட்டார்களா என்று எனக்குத் தெரியாது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3399
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல்களில் குலத்தார் மட்டும் இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமெடுக்காது. ஹவ்வா (ஏவாள்) அவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் பெண், தன் கணவனை எக்காலத்திலும் (ஆசையூட்டி) ஏமாற்ற மாட்டாள்)என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3400
உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்தார்: இப்னு அப்பாஸ்(ரலி) ஹுர்ரு இப்னு கைஸ் அல்ஃபஸாரீ(ரலி) அவர்களுடன் மூஸா(அலை) அவர்களின் தோழர் யார் என்னும் விஷயத்தில் தர்க்கித்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவர் கிள்ர்(அலை) அவர்கள் தாம்” என்று கூறினார்கள். அவர்கள் இருவரையும் உபை இப்னு கஅப்(ரலி) கடந்து சென்றார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), உபை இப்னு கஅப் அவர்களை அழைத்து, ‘நானும் என்னுடைய இந்தத் தோழரும், தாம் சந்திக்க இருப்பவரிடம் செல்ல வேண்டிய பாதையை விசாரித்த மூஸா(அலை) அவர்களின் (சந்திப்புக்குரிய) தோழரைக் குறித்து தர்க்கித்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?’ என்று வினவினார்கள். அதற்கு உபை இப்னு கஅப்(ரலி), ‘ஆம்; அல்லாஹ்வீன் தூதர்(ஸல்) அவர்கள் அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?’ என்று வினவினார்கள். அதற்கு உபை இப்னு கஅப்(ரலி), ‘ஆம்; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன்” என்றார்கள். பனூ இஸ்ராயீல் குலத்தாரின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒருவர் வந்து, மூஸா(அலை) அவர்களிடம், ‘உங்களை விட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார். மூஸா(அலை) அவர்கள், ‘(அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள். எனவே, அல்லாஹ் மூஸா(அலை) அவர்களுக்கு, ‘அப்படியல்ல நம் அடியார் ‘களிர்’ உங்களை விட அறிந்தவராயிருக்கிறார்” என்று கூறினான். எனவே, மூஸா(அலை) அவர்கள் அவரைச் சென்றடைவதற்கான பாதையை விசாரித்தார்கள். எனவே, (களிர் அலை அவர்களைச் சந்திக்கும் இடம் வந்துவிட்டது என்பதை) மூஸா(அலை) அவர்கள் புரிந்து கொள்ள மீன் அடையாளமாக ஆக்கப்பட்டது. மேலும், அவர்களிடம், ‘மீனை நீங்கள் தவறவிட்டுவிட்டால் உடனே (வந்த வழியே) திரும்பி வாருங்கள். அப்போது அவரை நீங்கள் சந்திப்பீர்கள்” என்று சொல்லப்பட்டது. அதன்படி, அவர்கள் கடலில் மீனைப் பின்தொடர்ந்து (சென்று) கொண்டிருந்தார்கள். அப்போது மூஸா(அலை) அவர்களிடம் அவர்களின் (உதவியாளரான) இளைஞன், ‘நான் அந்தப் பாறையின் பக்கம் ஒதுங்கி ஓய்வெடுத்தபோது மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதை நினைவில் வைத்திருக்க விடாமல் ஷைத்தான் தான் அதை எனக்கு மறக்கடித்துவிட்டான்” என்று கூறினார். உடனே, மூஸா(அலை) அவர்கள், ‘(அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்த சந்தர்ப்பத்தைத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று கூறினார்கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே நடந்து திரும்பிச் சென்றனர். (வழியில்) களிர்(அலை) அவர்களைச் சந்தித்தனர். பிறகு, அல்லாஹ் தன் வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3401
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்: நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘நவ்ஃப் அல் பிக்காலீ என்பவர், ‘களிர்’(அலை) அவர்களின் தோழரான மூஸா(அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களின் (இறைத் தூதரான) மூஸா(அலை) அவர்கள் அல்லர்; அவர் வேறொரு மூஸா தான் என்று கருதுகிறார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் பகைவன் பொய் சொல்லிவிட்டான். உபை இப்னு கஅப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து நமக்கு அறிவித்து உள்ளார்கள்: (ஒரு முறை) மூஸா(அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம், ‘மக்களிடையே மிகவும் அறிந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நானே” என்று பதிலளித்துவிட்டார்கள். எனவே, அல்லாஹ் அவர்களைக் கண்டித்தான். ஏனெனில், மூஸா(அலை) அவர்கள் ‘அல்லாஹ்வே அறிந்தவன்” என்று சொல்லாமல்விட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ், மூஸா(அலை) அவர்களிடம், ‘இல்லை. இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உங்களை விட அதிகமாக அறிந்தவர், ‘என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார் (வழி காட்டுவார்?)” என்று கேட்டார்.
– அறிவிப்பாளர் அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனி(ரஹ்) அறிவித்தார். சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?’ என்று மூஸா(அலை) அவர்கள் கேட்டதாகவும் சொல்லியிருக்கலாம்.
அதற்கு அல்லாஹ், ‘நீங்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். (அப்படியே கடற்கரையோரமாக நடந்து செல்லுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவற விடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார்” என்று சொன்னான். அதன்படியே மூஸா(அலை) அவர்களும் அவர்களின் உதவியாளர் யூஷவு இப்னு நூன் அவர்களும் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டு நடந்தார்கள். அவர்கள் ஒரு பாறையருகே சென்று சேர்ந்தபோது அங்கே படுத்து ஓய்வெடுத்தார்கள். உடனே, மூஸா(அலை) அவர்கள் தூங்கிவிட்டார்கள். மீன் குதித்து வெளியேறிக் கடலில் விழுந்தது. அது கடலில் (சுரங்கம் போல்) வழியமைத்துக் கொண்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட (மீனைச் சுற்றி) ஒரு வளையம் போல் தண்ணீர் ஆகிவிட்டது. மீதிமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். இறுதியில், அடுத்த நாள் வந்தபோது தம் உதவியாளரை நோக்கி, ‘நம்முடைய காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா! நாம் நம்முடைய இந்தப் பயணத்தால் மிகவும் களைப்படைந்து விடைந்தோம்” என்று மூஸா(அலை) கூறினார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தை மூஸா(அலை) தாண்டிச் செல்லும்வரை அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. அவர்களின் உதவியாளர் அவர்களிடம், ‘நாம் அந்தப் பாறையில் ஓய்வெடுக்க தங்கினோமே, பார்த்தீர்களா? அங்கே தான் நான் மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். (அதை நினைவில் வைத்திருக்காதபடி) ஷைத்தான் தான் எனக்கு அதை மறக்கடித்து விட்டான். அது வியப்பான முறையில் கடலில் வழியமைத்துக் கொண்டது” என்று கூறினார். மீனுக்கு அது (தப்பிக்க) வழியாகவும், அவ்விருவருக்கும் அது வியப்பாகவும் அமைந்தது. மூஸா(அலை) அவர்கள் அந்த உதவியாளரிடம், ‘அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த இடம்” என்று கூறினார்கள்.” உடனே, அவர்கள் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில், அந்தப் பாறையை அடைந்தார்கள். அங்கே ஒருவர் தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தி மூடியிருந்தார். மூஸா(அலை) அவர்கள் அவருக்கு ஸலாம் கூற, அம்மனிதர் அவர்களுக்கு பதில் ஸலாம் கூறினார். பிறகு, ‘உங்களுடைய (இந்தப்) பகுதியில் (அறியப்படாத) ஸலாம் (உங்களுக்கு மட்டும்) எப்படி (வந்தது? நீங்கள் யார்?)” என்று களிர் வினவினார். மூஸா(அலை) அவர்கள், ‘நானே மூஸா” என்று பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், ‘பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூஸாவா” என்று கேட்டார். மூஸா(அலை) அவர்கள், ‘ஆம், உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் உங்களிடம் வந்திருக்கிறேன்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘மூஸாவே! அல்லாஹ் எனக்குக் கற்றத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன்” என்று கூறினார். மூஸா(அலை) அவர்கள், ‘நான் உங்களைத் தொடர்ந்து வரட்டுமா?’ என்று கேட்டார்கள். அவர், ‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது. நீங்கள் அறியாத விஷயத்தை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பீர்கள்” என்று கேட்டதற்கு மூஸா(அலை) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ்.. இறைவனால் நாடினால் நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். பிறகு, இருவரும் கடற்கரையோரத்தில் நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அதன் உரிமையாளர்(களான ஏழைத் தொழிலாளர்)களிடம் தங்களை ஏற்றிச் செல்லும்படி பேசினார்கள். அவர்கள் களிர்(அலை) அவர்களை அடையாளம் புரிந்து கொண்டு அவர்களை வாடகை கேட்காமல் ஏற்றிச் சென்றார்கள். அவர்கள் இருவரும் மரக்கலம் ஏறியபோது சிட்டுக்குருவி ஒன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்தது. பிறகு, அது கடலில் (அலகால்) ஒரு முறை அல்லது இருமுறை கொத்தி (நீர் அருந்தி)யது. உடனே மூஸா(அலை) அவர்களிடம் களிர்(அலை), ‘மூஸாவே! இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் (கொத்தி நீரருந்தியதால்) இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவு தான் என் அறிவும் உங்கள் அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்கள். அப்போது கிள்ர் ஒரு கோடரியை எடுத்து மரக்கலத்தின் (அடித்தளப்) பலகை ஒன்றைக் கழற்றிவிட்டார்கள். களிர்(அலை) அவர்கள் வாய்ச்சியின் உதவியால் (மரக்கலத்தின்) பலகையைக் கழற்றிய பின்புதான் மூஸா(அலை) அவர்களுக்குத் தெரியவந்தது. உடனே மூஸா(அலை) அவர்கள், ‘என்ன காரியம் செய்து விட்டீர்கள்? வாடகை இல்லாமலே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டையாக்கி விட்டீர்களே! அதில் சவாரி செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மிகப்பெரும் (கொடுஞ்) செயலைச் செய்து விட்டீர்கள்” என்று கூறினார்கள். களிர்(அலை) அவர்கள், ‘உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்கமுடியாது என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?’ என்றார்கள். மூஸா(அலை) அவர்கள், ‘நான் மறந்துவிட்டதை வைத்து என்னை தண்டித்து (போகச் சொல்லி) விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள். ஆக, மூஸா(அலை) அவர்கள் முதல் முறையாகப் பொறுமையிழந்தது அவர்கள் மறந்து போனதால் தான். (பிறகு) கடலிலிருந்து அவர்கள் வெளியேறியபோது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கடந்து சென்றார்கள். களிர்(அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்து, தம் கையால் இப்படிப் பிடுங்கி (தனியே எடுத்து)விட்டார்கள்.
இந்த இடத்தில் அறிவிப்பாளர் கஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), தம் விரல் நுனிகளை எதையோ பறிப்பதைப் போல் காட்டி சைகை செய்தார்கள்.
அப்போது மூஸா(அலை) அவர்கள் களிர்(அலை) அவர்களிடம், ‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு களிர்(அலை) அவர்கள், ‘நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது” என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?’ என்று கூறினார்கள். மூஸா(அலை) அவர்கள், ‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் வைத்திருக்காதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது” என்றார்கள். மீண்டும் இருவரும் நடந்தார்கள். இறுதியில், ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழ இருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். (இதைக் கண்ட) உடனே, களிர்(அலை) அவர்கள் (இந்தச் சுவரை நிலை நிறுத்துவோம் என்பதற்கு அடையாளமாக) தம் கையால் இப்படிச் சைகை செய்தார்கள்.
அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) மேலே ஏதோ ஒரு பொருளைத் தடவுவது போல் சைகை காட்டினார்கள்.
மேலும், அறிவிப்பாளர் அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனீ(ரஹ்), ‘சுஃப்யான், இப்னு உயைனா(ரஹ்) ‘சாய்ந்தபடி’ என்னும் வார்த்தையை ஒரேயொரு முறைதான் சொல்லக் கேட்டேன்” என்று கூறுகிறார்.
மூஸா(அலை) அவர்கள், ‘இந்த சமுதாயத்தினரிடம் நாம் வந்து (உணவு கேட்டு)ம் அவர்கள் நமக்கு உணவளிக்கவும் இல்லை; விருந்துபசாரம் செய்யவுமில்லை (அவ்வாறிருந்தும்) வேண்டுமென்றே நீங்கள் அவர்களின் சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பியிருந்தால் அதற்குக் கூலி வாங்கிக் கொண்டிருக்கலாம்” என்றார்கள். களிர்(அலை) அவர்கள், ‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்து விடுகிறேன்” என்று கூறினார்கள்.
– நபி(ஸல்) அவர்கள், ‘மூஸா(அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம். அவ்வாறிருந்திருந்தால் அல்லாஹ் அவ்விருவரின் நிகழ்சசிகள் பற்றி (இன்னும் நிறை) எடுத்துரைத்திருப்பான்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்)
இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு பழுதில்லாத ஒழுங்கான மரக்கலத்தையும் நிர்பந்தமாக அபகரித்துக் கொண்டிருந்தான். மேலும், அந்தச் சிறுவனுடைய விஷயம் என்னவெனில் அவன் இறை மறுப்பாளனாக இருந்தான். அவனுடைய தாய் தந்தையார் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தனர்” என்று ஓதினார்கள். அறிவிப்பாளர் அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனீ(ரஹ்) கூறினார்: பிறகு சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) என்னிடம், ‘அம்ர் இப்னு தீனார்(ரஹ்) என்னிடம், ‘அம்ர் இப்னு தீனார்(ரஹ்) இப்படி ஓதுவதை இரண்டு முறை கேட்டு நான் அதை அவர்களிடமிருந்து மனனம் செய்திருக்கிறேன்.
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், ‘இதை அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் மனனம் செய்தீர்களா? அல்லது அம்ர் இப்னு தீனாரிடமிருந்து கேட்பதற்கு முன்பு வெறெந்த மனிதரிடமிருந்தாவது அதை மனனம் செய்தீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘வேறெவரிடமிருந்து இதை நான் மனனம் செய்வேன்? அம்ர் இப்னு தீனாரிடமிருந்து அதை என்னைத் தவிர வேறெவராவது அறிவித்திருக்கிறார்களா? அவரிடமிருந்து இரண்து அல்லது மூன்று முறை நான் செவியுற்று அதை மனனம் செய்திருக்கிறேன்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3402
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். களிர்(அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே, அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர்பெற்று) அசையலாயிற்று. எனவேதான் அவர்களுக்கு ‘களிர்’ (பசுமையானவர்) என்று பெயரிடப்பட்டது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இந்த நபிமொழி முழுவதுமாக சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3403
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள. பனூ இஸ்ராயீல்களுக்கு, ‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் ‘ஹித்தத்துன்’ (‘பாவ மன்னிப்புக்கோருகிறோம்’) என்று சொல்லிய படியும் நுழையுங்கள்” என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (ஹித்தத்துன்’ என்னும் சொல்லை ‘ஹின்தத்துன் கோதுமை என்று) மாற்றிவிட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்த படி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவிதை என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3404
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூஸா(அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்கவேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்” என்று கூறினார்கள். மூஸா(அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். எனவே, (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூஸா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடலாயிற்று. மூஸா(அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப்பிடிக்க முனைந்தார்கள். ‘கல்லே என் துணி! கல்லே என் துணி!’ என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்களிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர், மூஸா(அலை) அவர்கள் அல்லாய்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் தாம் சொன்ன குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்களாகவும் இருப்பதை, அவர்களை ஆடையில்லாத கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக் கொண்டார்கள். கல் (ஓடாமல்) நின்றது. உடனே, மூஸா(அலை) அவர்கள், தம் துணியை எடுத்துக் கொண்டு தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கலானார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தழும்புகள் (இன்னும்) உள்ளன. இந்த நிகழ்ச்சியைத் தான், ‘இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்” என்றும் (திருக்குர்ஆன் 33:69) இறைவசனம் குறிக்கிறது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3405
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட்டார்கள். அப்போது ஒருவர், ‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருமுகம் (திருப்தி) நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன் கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். (அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன். பிறகு, ‘மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார்; இருப்பினும் அவர் (பொறுமையுடன்) சகித்துக் கொண்டார்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3406
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது” என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?’ என்று பதிலளித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3407
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் ‘மலக்குல் மவ்த்’ (உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, ‘மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்” என்று கூறினார். இறைவன், ‘நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரின் கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரின் கரம் மூடுகிறதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.)’ எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூஸா(அலை) அவர்களிடம் கூறியபோது) அவர், ‘இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?’ என்று கேட்டார்கள். இறைவன், ‘மரணம் தான்” என்று பதிலளித்தான். மூஸா(அலை) அவர்கள், ‘அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள்” என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத் தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
(இதை எடுத்துரைத்த போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணல் குன்றின் கீழே அவரின் மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன்” என்று கூறினார்கள்.
ஹம்மாம்(ரஹ்), ‘அபூ ஹுரைரா(ரலி) இதே போன்று நபி(ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்து உள்ளார்கள்” என்று கூறுகிறார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3408
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் (ஒருவரோடொருவர்) சச்சரவிட்டார்கள். அந்த முஸ்லிம், ‘அகிலத்தார் அனைவரை விடவும் முஹம்மதை (சிறந்தவராக்கித்) தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!” என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘அகிலத்தார் அனைவரை விடவும் மூஸா(அலை) அவர்களை (சிறந்தவராகத்) தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். (யூதரின்) இச்சொல்லைக் கேட்டபோது அந்த முஸ்லிம் தம் கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே, அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்த, தன்னுடைய விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மூஸாவைவிடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள் . ஏனெனில், (மறுமை நாளில்) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்து விடுவார்கள். அப்போது, நானே மயக்கம் தெளி(ந்து எழு)பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூஸா இறை சிம்மாசனத்தின் ஓர் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். மூர்ச்சையுற்று விழுந்தவர்களில் அவரும் ஒருவராயிருந்தாரா, அவர் எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து எழுந்துவிட்டாரா? அல்லது மூர்ச்சையடைந்து விழுவதிலிருந்து அல்லாஹ் விதிவிலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3409
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட) ஆதமும் மூஸாவும் தர்க்கித்தார்கள். ஆதமிடம் மூஸா, ‘உங்கள் தவறு உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள் தானோ?’ என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் மூஸாவிடம், ‘நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்த மூஸா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என் மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் நீங்கள் பழியகிறீர்களே!” என்று கேட்டார்கள். ‘இதை கூறிய பின் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஆக, ஆதம் விவாதத்தில் மூஸாவை வென்றுவிட்டார்கள்’ என்று இருமுறை கூறினார்கள்” என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3410
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார. ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, ‘(மிஅராஜுடைய இரவில்) பல சமுதாயங்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. அடி வானத்தை அடைத்த படி ஏராளமான மக்களை கண்டேன். அப்போது, ‘தம் சமுதாயத்தினரிடையே மூஸா(அலை) அவர்கள் இருக்கும் காட்சி தான் இது” என்று (எனக்குக்) கூறப்பட்டது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3411
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லாவகை உணவுகளை விடவும் ‘ஸரீத்’ உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3412
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் யூனுஸ் (அலை) அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) உங்களில் எவரும் சொல்ல வேண்டாம். என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் முஸத்தத்(ரஹ்) தம் அறிவிப்பில், ‘யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விட” என்னும் வாசகத்தை அதிகமாகக் கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3413
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் யூனுஸ் இப்னு மத்தாவை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (‘யூனுஸ் இப்னு மத்தா- மத்தாவின் மகன் யூனுஸ்’ என்று) யூனுஸ்(அலை) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்து நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3414
அபூ ஹுரைரா(ரலி) கூறினார். யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், ‘(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூஸாவைக் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!” என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ‘நபி(ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்றா நீ கூறுகிறாய்?’ என்று கேட்டார். உடனே அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘அபுல் காசிம் அவர்களே! (என் உயிர்) உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, ‘நீ ஏன் இவரின் முகத்தில் அறைந்தாய்?’ என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகிற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, ‘அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே (‘ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூஸா(அலை) அவர்கள் இறை சிம்மாசனத்தைப் பிடித்துக் கெண்டிருப்பார்கள். ‘ அவர்கள் ‘தூர்சினாய்’ மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின்போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப்(பட்டு இங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டுவிட்டாரா?’ என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3415
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யூனுஸ் இப்னு மத்தா(அலை) அவர்களை விட ஒருவர் சிறந்தவர் என்று நான் கூற மாட்டேன். (அதே அறிவிப்புத் தொடர்)
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3416
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர், (என்னைப் பற்றி) நாள் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3417
நபி(ஸல்) அவர்கள் கூறினார். தாவூத்(அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது. தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார் செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச் சேணம் பூட்டப்படும் வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார். தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார். அத்தாஉ இப்னு யஸார்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3418
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்குவேன்” என்று நான் கூறுவதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீங்கள் தான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று கேட்டார்கள். ‘நான் அப்படிச் சொல்லத் தான் செய்தேன்” என்று நான் பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களால் அது முடியாது. எனவே, (சில சமயம்) நோன்பு வையுங்கள். (சில சமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வணங்குங்கள். தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்பு வைத்ததாகும்” என்று கூறினார்கள். நான், ‘இதை விட அதிக நாள் நோற்பதற்கு எனக்கு சக்தியுண்டு இறைத்தூதர் அவர்களே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘அப்படியென்றால் ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாள்கள் நோன்பைவிட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘அதை விட அதிகத்திற்கு எனக்கு சக்தியுண்டு, இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அப்படியென்றால், ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பைவிட்டு விடுங்கள். அதுதான் (நபி) தாவூதுதின் நோன்பாகும்; அதுதான் நடுநிலையானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘அதை விடச் சிறந்ததற்கு எனக்கு சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அதை விடச் சிறந்ததேயில்லை” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3419
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீங்கள் இரவில் நின்று வணங்குவதாகவும் பகலில் நோன்பு நோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே” என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (உண்மைதான்!)” என்றேன். அவர்கள், ‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும். எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்” என்று கூறினார்கள். நான், ‘எனக்கு (இதை விட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்” என்று சொன்னேன். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பை நீங்கள் நோற்பீராக! அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள்விட்டுவிடுவார்கள். (போர்க்காலத்தில் பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3420
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3421
முஜாஹித்(ரஹ்) அறிவித்தார். நான், ‘ஸாத்’ (என்னும் 38-வது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வீர்களா?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், ‘மேலும், இப்ராஹீமுடைய வழித் தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், மூஸா, ஹாரூன் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறு (நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே (நீங்களும்) பின்பற்றுங்கள்” என்னும் (திருக்குர்ஆன் 06:84-90) திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்கள். பிறகு, ‘உங்கள் நபி(ஸல்) அவர்களும் கூட முந்தைய நபிமார்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தாம்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3422
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.‘ஸாத்’ (என்னும் 38-வது) அத்தியாயத்தில் உள்ள இறை வசனத்திற்கு சுஜூது (சிரம் வணக்கம்) செய்வது, கட்டாயம் செய்யப்பட வேண்டிய(வை என்று கட்டளையிடப்பட்டுள்ள) சுஜூதுகளில் ஒன்றல்ல. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் (சூரத்து ஸாதின்) அந்த இடத்தில் (திருக்குர்ஆன் 38:24) சுஜூது செய்வதை பார்த்திருக்கிறேன்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3423
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான்(அலை) அவர்கள் செய்த, ‘என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!” (திருக்குர்ஆன் 38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3424
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். தாவூத்(அலை) அவர்களின் மகன் சுலைமான்(அலை) அவர்கள், ‘இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் இறைவழியில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவரின் தோழர் ஒருவர், ‘அல்லாஹ் நாடினால் என்று சொல்லுங்கள்” என்று கூறினார். சுலைமான்(அலை) அவர்கள், ‘அல்லாஹ் நாடினால்” என்று (மறந்து போய்) சொல்லாமலிருந்துவிட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும் கூட) தன் இரண்டு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்கவில்லை. ‘இன்ஷா அல்லாஹ்… (இறைவன் நாடினால்)’ என்று சுலைமான்(அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபது பேரும் பிறந்து) இறைவழியில் பேராடியிருப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள். ஷுஐப்(ரஹ்) அவர்களும் இப்னு அபிஸ் ஸினாத்(ரஹ்) அவர்களும் தங்கள் அறிவிப்பில் ‘தொண்ணூறு மனைவிமார்களிடம் செல்வேன்” என்று சுலைமான்(அலை) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். இவர்களுடைய அறிவிப்பு தான் மேற் கண்ட அறிவிப்பை விடச் சரியானது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425
அபூ தர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பிறகு ‘அல் மஸ்ஜிதுல் அக்ஸா’ (ஜெரூசலம் நகரிலுள்ள ‘அல் அக்ஸா’ பள்ளி வாசல்)” என்று பதிலளித்தார்கள். நான், ‘அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது” என்று கூறினார்கள். பிறகு, ‘உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3426
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய நிலையும் மக்களின் நிலையும் ஒருவர் தீயை மூட்டி விட, விட்டில் பூச்சிகளும் இதரப் பூச்சிகளும் அந்த நெருப்பில் விழுவதைப் போன்றதாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3427
மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் அலை அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களின் தீர்ப்பில் கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான்(அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், ‘என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது இளையவள், ‘அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்” என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் ‘அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்று தான் (கத்திக்கு) ‘சிக்கீன்’ என்னும் சொல்லைச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) ‘முத்யா என்னும் சொல்லைத் தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம்” என்று கூறுகிறார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3428
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘இறை நம்பிக்கைகொண்டு, தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலந்திடாதவர்’ என்னும் (திருக்குர்ஆன் 06:82) இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், ‘தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர் நம்மில் யார் ?’ என்று கேட்டார்கள். ‘அப்போது (என் அருமை மகனே!) அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. இணை வைப்பது மாபெரும் அநீதியாகும்’ (என்று லுக்மான் கூறினார்) என்னும் வசனம் அருளப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் வசனம் 31:13)
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3429
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்’ என்னும் (திருக்குர்ஆன் 06:82) வசனம் அருளப்பட்டபோது அது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமானதாகத் தென்பட்டது. எனவே, அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் தனக்குத்தானே அநீதியிழைத்துக் கொள்ளாதவர் யார்?’ என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(இந்த வசனம் குறிப்பிடுவது) அதுவல்ல. அது இணைவைப்பையே குறிக்கிறது. ‘என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. நிச்சயமாக, இணை வைப்பு மாபெரும் அநீதியாகும்’ என்று (அறிஞர்) லுக்மான், தம் மகனுக்கு அறிவுரை கூறுவதை (திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறதே, (திருக்குர்ஆன் 31:13) அதை) நீங்கள் கேட்க வில்லையா?’ என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3430
மாலிக் இப்னு ஸஅஸஆ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் அவர்கள் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது கூறினார்கள்:
பிறகு (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் ஏறிச் சென்று இரண்டாம் வானத்தை அடைந்தார். அதன் வாயிலைத் திறக்கக் கூறினார். ‘யார் அது?’ என்ற கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘உங்களுடன் இருப்பவர் யார்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆம்” என்று பதில் கூறினார். நான் அங்கு சென்று நேர்ந்தபொழுது அங்கு யஹ்யா(அலை) மற்றும் ஈசா(அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்) ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இது யஹ்யாவும் ஈசாவும் ஆவர். இருவருக்கும் சலாம் சொல்லுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, ‘நல்ல சகோதரரே! நல்ல நபியே! வருக!” என்று கூறி (வாழ்த்தி)னார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3431
ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) அறிவித்தார். ‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு பிறகு, ‘நான் இக் குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3432
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார். என அலீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3433
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்கான சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட ‘ஸரீது’க்குள்ள சிறப்பைப் போன்றதாகும். ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக்கின்றனர். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. என அபூ மூஸா அல் அஷ் அரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3434
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். குறைஷிப் பெண்கள் தாம் ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் (தம்) குழந்தைகளின் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு பின்பு, ‘இம்ரானின் மகள் மர்யம் ஒட்டகம் எதிலும் சவாரி செய்ததேயில்லை” என்று கூறினார்கள். ஸுஹ்ரீ(ரஹ்) வழியாக இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3436
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ‘இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!” என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு ‘இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ‘குழந்தையே! உன் தந்தை யார்?’ என்று கேட்டார். அக்குழந்தை, ‘(இன்ன) இடையன்” என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், ‘தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட்டார். (மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே, அவள், ‘இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு” என் மகனை இவனைப் போல் ஆக்கு” என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ‘இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே” என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது-பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ‘இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே” என்று கூறினாள். உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, ‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ‘ஏன் இப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டதற்கு அக்குழந்தை, ‘வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்துவிட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை” என்று பதிலளித்தது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3437
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (விண்) பயணத்திற்காக அவர்கள் கொண்டு செல்லப்பட்ட இரவில் நடந்தவற்றை விவரித்துக் கூறியபடி, ‘நான் மூஸா(அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள். (அப்போது கூறினார்கள்:)
மூஸா(அலை) அவர்கள் (யமன் நாட்டைச் சேர்ந்த) ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரைப் போன்று ஒல்லியான (சதை குறைந்த)வராக, தலைமுடி தொங்கலாக (வாரி) விட்டிருப்பவராக இருந்தார்கள்.
(தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள்) ‘நான் ஈசா(அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு, அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்: சிவப்பு நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் உடையவர்களாக, (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவர்களைப் போல் அவர்கள் இருந்தார்கள். மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர்களையும் பார்த்தேன். நானே அவர்களின் சந்ததிகளிலேயே (தோற்றத்தில்) அவர்களுக்கு மிகவும் ஒப்பானவனாக இருக்கிறேன். என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. ‘நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்து அதைப் பருகினேன். உடனே, ‘நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டு விட்டீர்கள். அல்லது நீங்கள் இயற்கையைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று என்னிடம் பெற்றுக் கொண்டீர்கள்” என்று என்னிடம் சொல்லப்பட்டது. ‘நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும்” என்றும் சொல்லப்பட்டது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3438
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(மிஅராஜ் இரவில்) நான் ஈசா(அலை), மூஸா(அலை), இப்ராஹீம்(அலை) ஆகியோரைப் பார்த்தேன். ஈசா(அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர்களாகவும் சுருள் முடியுடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ மாநிறம் உடையவர்களாகவும், உயரமானவர்களாகவும், படிந்த, நெருங்லான முடியுடையவர்களாகவும் சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர்களாகவு)ம் இருந்தார்கள்.என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3439
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களின் நடுவே அமர்ந்தபடி ‘தஜ்ஜால்’ என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, ‘அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், ‘தஜ்ஜால்’ என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனுடைய கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3440
‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மனிதர்களின் மா நிறத்திலேயே மிக அழகான மாநிறமான மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரின் தலைமுடி அவரின் தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது; படியவாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவரின் தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது தம் இரண்டு கைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘மர்யமின் மகன் ஈசா அவர்கள்” என்று பதிலளித்தார்கள். பிறகு, அவருக்குப் பின்னால் நிறைய சுருள் முடி கொண்ட, வலது கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு அதிக ஒப்பானவனாயிருந்தான். அவன் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் தோள்களின் மீது தன் இரண்டு கைகளையும் வைத்திருந்தான். நான், ‘யார் இது?’ என்று கேட்டேன். ‘இவன் தஜ்ஜால் என்னும் மஸீஹ்” என்று பதிலளித்தார்கள்.நாஃபிவூ(ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களும் இதை அறிவித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3441
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஈசா(அலை) அவர்களைக் குறித்து ‘அவர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக (இப்படித்தான்) கூறினார்கள்: நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒருவர் தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க… அல்லது வழிந்து கொண்டிருக்க… அங்கே இருந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘மர்யமின் குமாரர்” என்று பதிலளித்தார்கள். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனமான, சுருட்டைத் தலை முடியுள்ள, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், ‘யார் இது?’ என்று கேட்டேன், ‘தஜ்ஜால்” என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் ‘இப்னு கத்தன்’ தான். இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்:
இப்னு கத்தன் ‘குஸாஆ’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3442
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் இறைத் தூதர்கள். தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3443
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.நான் மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன். இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களின் மார்க்கம் ஒன்றே. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இதே நபிமொழி அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3444
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள், ஒருவர் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், ‘நீ திருடினாயா” என்று கேட்டார்கள். அதற்கு அவன், ‘இல்லை; எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக!” என்று பதிலளித்தான். உடனே ஈசா(அலை) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, என் கண்ணை நம்ப மறுத்தன்” என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3445
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3446
‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அளித்து அவளை (தானே) மணமும் முடித்தார் எனில் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும். ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என்னை நம்பினால் அவருக்கு இரண்டு நற்பலன்கள் கிடைக்கும், ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானார்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பானாயின் அவனுக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும். என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3447
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (மறுமை நாளில்) காலில் செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்” என்று கூறிவிட்டு, பிறகு, ‘எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்டுவோம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும. அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்” என்னும் (திருக்குர்ஆன் 21:104) இறைவசனத்தை ஓதினார்கள். முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவார்கள். பிறகு, என் தோழர்களில் சிலர் (சொர்க்கத்திற்காக) வலப்பக்கமும், (சிலர் நரகத்திற்காக) வலப்பக்கமும, (சிலர் நரகத்திற்காக) இடப்பக்கமும் கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘இவர்கள் என் தோழர்கள்” என்று கூறுவேன். ‘இவர்களைவிட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள், தம் கால் சுவடுகளின் வழியே (எங்கிருந்து) வந்தார்களோ அந்த மதத்திற்குத்) திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று சொல்லப்படும். அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே, ‘(இறைவா!) நான் இவர்களிடையே (உயிருடன்) வாழ்ந்து வந்த வரை நான் இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே இவர்களைக் கண்காணிப்பவனாம்விட்டாய். ஒவ்வொரு விஷயத்தையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ அவர்களைத் தண்டித்தாலும் அவர்கள் உன் அடிமைகள் தாம். (அதற்கும் உனக்கும் முழு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டால் (அது உன் கருணையாகும். ஏனெனில்,) நீ வல்லோனும் விவேகம் மிக்கோனும். ஆவாய்” (திருக்குர்ஆன் 05: 117, 118) என்று சொல்வேன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
கபீஸா இப்னு உக்பா(ரஹ்) கூறினார்: தம் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றவர்கள் யாரெனில், அபூ பக்ர்(ரலி) அவர்களின் காலத்தில் மதமாறியவர்கள் தாம்! அபூ பக்ர்(ரலி) (போராடி) அவர்களை வீழ்த்திவிட்டார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3448
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும்.
இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி), ‘வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பா அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்’ (திருக்குர்ஆன் 04:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3449
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு(த் தொழுகை நடத்தும்) இமாமாக இருக்க மர்யமின் மகன் உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்? என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். உகைல் இப்னு காலித்(ரஹ்) அவர்களும் அப்துர்ரஹ்மான் இப்னு அம்ர் அல் அவ்ஸாயீ(ரஹ்) அவர்களும் இதே போன்று அறிவித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3450
ரிப்யீ இப்னு ஹிராஷ்(ரஹ்) அறிவித்தார். உக்பா இப்னு ஆமிர்(ரலி) ஹுதைஃபா(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். ஹுதைஃபா(ரலி), ‘தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை ‘இது நெருப்பு’ என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை ‘இது குளிர்ந்த நீர்’ என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3451
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரிடம் (உயிரைக் கைப்பற்றும்) வானவர் அவரின் உயிரைக் கைப்பற்றிச் செல்ல வந்தார். அந்த மனிதரிடம், ‘(உன் வாழ்நாளில்) நீ ஏதாவது நன்மை செய்திருப்பதாக அறிந்திருக்கிறாயா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘(அப்படி எதுவும்) எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார். ‘(நன்மை ஏதாவது செய்திருக்கிறாயா என்று) சிந்தித்துப் பார்” என்று கூறப்பட்டது. அவர், ‘அப்படி எதுவும் (நன்மை) செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் உலக மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். அப்போது, அவர்களிடம் நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பேன். அப்போது, வசதியுள்ளவருக்கு (கடனை அடைக்க) அவகாசம் தருவேன். வசதியில்லாதவரை மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) விடுவேன்” என்று பதிலளித்தார். அதன் காரணத்தால் அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் புகுத்தினான். என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3452
மேலும் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற கேட்டிருக்கிறேன்: ஒரு மனிதருக்கு மரணம் வந்தது. அவருக்கு வாழ்வைப் பற்றிய நிராசை ஏற்பட்டவுடன் தம் குடும்பத்தாருக்கு இறுதி உபதேசம் செய்தார். ‘நான் இறந்துவிட்டால், எனக்காக நிறைய விறகுகளைச் சேகரித்து அதில் நெருப்பை மூட்டிவிடுங்கள். நெருப்பு என் இறைச்சியைத் தின்று என் எலும்பு வரை சென்று விடும்போது நான் கருகிப் போவேன். உடனே, என் கருகிய எலும்புகளை எடுத்துத் தூளாக்கி, பிறகு காற்று அதிகமாக வீசும் ஒரு நாளை எதிர்பார்த்திருந்து (அந்நாள் வந்தவுடன்) கடலில் அதை எறிந்து விடுங்கள்” என்று அவர் கூறினார். (அவர் இறந்தவுடன்) அவ்வாறே மக்கள் செய்தனர். அவரின் எலும்புத் துகள்களை அல்லாஹ் ஒன்று திரட்டி, ‘நீ ஏன் அப்படிச் செய்தாய்?’ என்று அவரிடம் கேட்டான். அவர், ‘உன் அச்சத்தின் காரணத்தினால் தான் (அப்படிச் செய்தேன்)” என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவரை மன்னித்து விட்டான்.இதை ஹுதைஃபா(ரலி) சொல்லி முடித்தவுடன் அவர்களிடம் உக்பா இப்னு உமர்(ரலி), ‘நானும் நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த மனிதர் மண்ணறை(களில் கஃபன் துணிகளைத் திருடும்) திருடனாக இருந்தார்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3453-3454
ஆயிஷா(ரலி) அவர்களும் கூறினார்கள்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, தம் முகத்தின் மீது சதுரமான கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும்போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, ‘யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கினார்கள்” என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3455
அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார் .நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்தி) அமர்ந்திருந்தேன். (ஒரு முறை) அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ‘பனூ இஸ்ராயீல்களை நிர்வம்ப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் உத்திரவிடுகிறீர்கள்?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ‘அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் கேட்க விருக்கிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3456
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் “உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வேறெவரை?’ என்று பதிலளித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3457
அனஸ்(ரலி) அறிவித்தார் (தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என்று மக்கள் கருதியபோது) அவர்கள் (நெருப்பு வணங்கிகளைப் போல்) தீ மூட்டலாம் என்றும், மணியடித்து கூப்பிடலாம் என்றும் கூறினார்கள். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) என்று (சிலர் மறுத்துக்) கூறினார்கள். அப்போது பிலால்(ரலி) அவர்களுக்கு ‘அதான்” எனும் தொழுகை அறிவிப்புக்குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (என்னும் தொழுகைக்காக நிற்கும்போது சொல்லும்) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்திரவிடப்பட்டது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3458
மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார் தொழுபவர் தன் கையைத் தன்னுடைய பக்கவாட்டில் (இடுப்புக்கு மேல்) வைத்திருப்பதை ஆயிஷா(ரலி) வெறுத்து வந்தார்கள். ‘யூதர்கள் தான் அப்படிச் செய்வார்கள்” என்று சொல்வார்கள். இதே போன்று அஃமஷ்(ரஹ்) வழியாக ஷுஅபா(ரஹ்) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3459
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கு முன் சென்ற சமுதாயங்களின் (ஆயுட்) காலத் தவணைகளிடையே உங்கள் ஆயுள், தவணை, அஸருக்கும் சூரியன் மறைவதற்கும் இடையேயுள்ள (குறைந்த) கால அளவாகும். உங்கள் நிலையும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் நிலையும் தொழிலாளர்கள் சிலரை வேலைக்கு அமர்த்திய ஒரு மனிதரைப் போன்றதாகும். அவர் (தொழிலாளர்களிடம்), ‘எனக்காக நடுப்பகல் நேரம் வரை ஒவ்வொரு கீராத் (ஊதியத்)திற்கு வேலை செய்பவர் யார்? என்று கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு கீராத்துக்காக நடுப்பகல் வரை வேலை செய்தார்கள். பிறகு அவர், ‘நடுப்பகல் நேரத்திலிருந்து அஸர் தொழுகை வரை ஒவ்வொரு கீராத் (ஊதியத்)திற்கு எனக்காக வேலை செய்பவர் யார்?’ என்று கேட்டார். கிறிஸ்தவர்கள் நடுப்பகல் நேரத்திலிருந்து அஸர் தொழுகை வரை ஒவ்வொரு கீராத்துக்காக வேலை செய்தார்கள். பிறகு அவர், ‘அஸர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டிரண்டு கீராத்துகளுக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?’ என்று கேட்டார்.
தெரிந்து கொள்ளுங்கள்: அஸர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டிரண்டு கீராத்துகளுக்காக வேலை செய்தவர்கள் (முஸ்லிம்களாகிய) நீங்கள் தாம். தெரிந்து கொள்ளுங்கள்: உங்களுக்குத் தான் இருமுறை ஊதியம் கிடைத்துள்ளது.
இதைக் கண்ட யூதர்களும் கிறிஸ்தவர்களும் கோபமடைந்து, ‘நாங்கள் அதிகமாக வேலை செய்திருக்க, கூலி (எங்களுக்குக் குறைவாகக் கிடைப்பதா?’ என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ், ‘நான் உங்கள் உரிமையிலிருந்து எதையாவது குறைத்(து அநீதியிழைத்திருக்கிறேனா?’ என்று கேட்டான். அவர்கள், ‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், ‘அ(ப்படி சிலருக்கு மட்டும் அதிகமாகக் கொடுப்ப)து என் அருளாகும். அதை நான் விரும்பியவர்களுக்குக் கொடுக்கிறேன்” என்று சொன்னான். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3460
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த போது) ‘அல்லாஹ் இன்னாரை அழிப்பானாக’ நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் சாபம் யூதர்களின் மீது உண்டாகட்டும்! அவர்களுக்குக் கொழுப்பு தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் அதை உருக்கி விற்றார்கள்” என்று கூறினார்கள் என்பதை அவர் அறியமாட்டாரா?’ என்று உமர்(ரலி) கூற கேட்டேன். இதையே நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஜாபிர்(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3461
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3462
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3463
ஹஸன் பஸரீ(ரஹ்) அறிவித்தார். ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) (இந்த நபிமொழியை பஸராவிலுள்ள) இந்தப் பள்ளி வாசலில் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்ததிலிருந்து நாம் மறக்கவில்லை. ஜுன்தப்(ரலி) இறைத்தூதர் மீது (அவர்கள் சொல்லாதைச் சொன்னதாக) பொய்யுரைத்திருப்பார்கள் என்று நாம் அஞ்சவில்லை. (ஜுன்தப்(ரலி) அறிவித்தாவது: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே ஒருவர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால் வலி பொறுக்கமுடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்தார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், ‘என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்தினான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி (அதை அவன் நுழையத் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்கி) விட்டேன்” என்று கூறினான்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3464
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்” என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டுது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், ‘எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஒட்டகம் தான் (என்றோ) அல்லது மாடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)” என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், ‘இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்” என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்” என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், ‘எச்செல்வம் உனக்கு விருப்பமானது?’ என்று கேட்டார். அவர், ‘மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, ‘இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்” என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்டார். அவர், ‘அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், ‘உனக்கு எச்செல்வம் விருப்பமானது?’ என்று கேட்க அவர், ‘ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன. பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, ‘நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், ‘(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார். உடனே அவ்வானவர், ‘உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?’ என்று கேட்டதற்கு அவன், ‘(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், ‘நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், ‘நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, ‘நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்” என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், ‘நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்” என்று கூறினார். உடனே அவ்வானவர், ‘உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் (வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்” என்று கூறினார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3465
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது. அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) வாய்மையான செயல் தான் காப்பாற்ற முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், தான் வாய்மையுடன் நடந்ததாக நம்புகிற விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்” என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.
எனவே, அவர்களில் ஒருவர் பின் வருமாறு பிரார்த்தித்தார்: “இறைவா! என்னிடம் ஒரு கூலியாள் எனக்காக ஒரு ஃபரக் (அளவு) நெல்(லை) கூலிக்கு(ப் பேசி) வேலை செய்தார். பிறகு கூலியை (வாங்கிக் கொள்ளாமல்)விட்டுவிட்டுச் சென்றார். நான் அந்த ஃபரக் அளவு நெல்லை எடுத்து வேளாண்மை செய்தேன். அதன் வருவாயிலிருந்து பல மாடுகளை வாங்கினேன். பிறகு (ஒரு நாள்) அவர் என்னிடம் தன் கூலியைக் கேட்டு வந்தார். நான் அவரிடம் ‘அங்கு சென்றது, அந்த மாடுகளை ஓட்டிச்செல்” என்றேன். அதற்கவர், ‘உங்களிடம் எனக்குரியது ஒரு ஃபரக் அளவு நெல்தானே!” என்று கேட்டார். நான் அவரிடம், ‘அந்த மாடுகளை எடுத்துக் கொள். ஏனெனில் அவை (நீவிட்டுச் சென்ற) அந்த ஒரு ஃபரக் நெல்லிலிருந்து கிடைத்தவை தாம்” என்று சொன்னேன். அவர் அவற்றை ஓட்டிச் சென்றார். (அதை நீ அறிவாய்) நான் அதை உன் அச்சத்தின் காரணமாகவே செய்ததாக நீ அறிந்திருந்தால் எங்களைவிட்டு (இந்தப் பாறையை) நீக்குவாயாக!” அந்தப் பாறை அவர்களைவிட்டு சற்றே விலகியது.
மற்றொருவர் பின்வருமாறு பிரார்த்தித்தார்: “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாய் தந்தையர் இருந்தனர். நான் ஒவ்வோர் இரவிலும் அவர்களுக்கு என் ஆடு ஒன்றின் பாலைக் கொண்டு செல்வேன். ஓர் இரவு அவர்களிடம் செல்லத் தாமதமாம்விட்டது. அவர்கள் தூங்கிவிட்ட பின்பு சென்றேன். என் மனைவியும் என் குழந்தைகளும் பசியால் கூக்குரலெழுப்பி அரற்றிக் கொண்டிருந்தனர். என் தாய்தந்தையர் பருகுகிற வரை அவர்களுக்குப் புகட்ட மனமில்லாதவனாக நான் இருந்தேன். அதே வேளையில், அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிடவும் நான் விரும்பவில்லை. நான் அவர்களை (பால் தராமல்)விட்டுவிட, அவர்கள் அதைக் குடிப்பதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பதை நான் விரும்பவுமில்லை. எனவே, அதிகாலை நேரம் உதயமாகும் வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். (இதை நீ அறிவாய்.) இதை நான் உன் அச்சத்தின் காரணத்தால் தான் செய்தேன் என்று நீ கருதினால் எங்களைவிட்டு (இந்த அடைப்பை இன்னும் சற்று) நீக்குவாயாக!” அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவிற்கு (இன்னும் சற்று) விலகியது. மற்றொருவர் இப்படிப் பிரார்த்தித்தார்: ‘இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் ஒருத்தி எனக்கு இருந்தாள். அவள் மக்களிலேயே எனக்கு அதிகப் பிரியமானவளாக இருந்தாள். நான் அவளை எனக்கு ‘இணங்குமாறு’ அழைத்தேன். நான் அவளிடம் நூறு தீனார்களைக் கொண்டு வந்தாலே தவிர எனக்கு இணங்க முடியாதென்று மறுத்துவிட்டாள். நான் அதனைத் தேடி அடைந்தபின் அவளிடம் எடுத்துக்கொண்டு சென்று அதைக் கொடுத்தேன். அவள் தன்னை என் வசனம் ஒப்படைத்தாள். நான் அவளிடம் உடலுறவிற்காக அமர்ந்த பொழுது அவள், ‘அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை அதற்குரிய (சட்டப்பூர்வமான) உரிமையின்றி (திருமணம் முடிக்காமல்) திறக்காதே” என்று சொன்னாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். நூறு தீனார்களை (அவளிடமே)விட்டுவிட்டேன். நான் இதை உன் அச்சத்தின் காரணத்தால் செய்ததாக நீ கருதினால் (மீதிமிருக்கும் அடைப்பையும்) எங்களைவிட்டு நீக்குவாயாக!” எனவே, அல்லாஹ் அவர்களைவிட்டு (முழுமையாக) நீக்கிவிட்டான். அவர்களும் அதிலிருந்து வெளியேறினார்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3466
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முற்காலத்தில்) பெண்ணொருத்தி தன் மகனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். அவள் அவனுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் சென்ற ஒருவன் அவளைக் கடந்து சென்றான். அப்பெண், ‘இறைவா! இவனைப் போல் என் மகன் ஆகும் வரை அவனுக்கு நீ மரணத்தைத் தராதே” என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை, ‘இறைவா! என்னை இவனைப் போல் ஆக்கி விடாதே” என்று பிரார்த்தித்தது. பிறகு திரும்பச் சென்று (அவளுடைய) மார்பில் பால் குடிக்கலானது. பிறகு (தரையில்) இழுபட்டுக் கொண்டே வந்த ஒரு பெண் அவளைக் கடந்து சென்றாள். அவளைப் பிறர் கேலி செய்து விளையாட்டுப் பொருளாக நடத்திக் கொண்டிருந்தனர். (தன் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண், ‘இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே” என்று பிரார்த்தித்தாள். உடனே அக்குழந்தை, ‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று பிரார்த்தித்து. பிறகு அது, ‘வாகனத்தில் சென்றவன் இறைமறுப்பாளன் ஆவான். இந்தப் பெண்ணோ, இவளைப் பற்றி மக்கள் ‘இவள் விபசாரம் செய்கிறாள்’ என்று (அபாண்டமாகக்) கூறுகிறார்கள். ஆனால், இவள், ‘எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்” என்று கூறுகிறாள். அவர்கள், ‘இவள் திருடுகிறாள்’ என்று (அவதூறாகக்) கூறுகிறார்கள். இவள், ‘எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறுகிறாள்” என்று (அக்குழந்தை) கூறுகிறாள்” என்று சொல்லிற்று. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3467
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3468
ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். முஆவியா(ரலி) ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), ‘மதீனா வாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?’ என்று கேட்டுவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் இது போன்றதிலிருந்து (மக்களைத்) தடுப்பதையும், ‘பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களின் பெண்கள் பயன்படுத்தியபோது தான்’ என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்” என்று சொல்லக் கேட்டேன்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3469
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது என்னுடைய இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் இப்னு கத்தாப் அவர்கள் தாம். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3470
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, ‘(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?’ என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், ‘கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒருவர், ‘(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குக் கூறினார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.
அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) தர்கித்தனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, ‘நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, ‘நீ தூரப்போ!” என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, ‘அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3471
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். பிறகு மக்களை நோக்கி, ‘(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, ‘நாங்கள் இதற்காக (மனிதர்களாகிய உங்களைச் சுமந்து செல்வதற்காகப்) படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்” என்று கூறியது. எனக் கூறினார்கள். மக்கள் ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா?’ என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்” என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் இருக்கவில்லை. தொடர்ந்து, நபி(ஸல்) அவர்கள், ‘ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக் கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, ‘இவனே! இதை என்னிடமிருந்து இன்று நி காப்பாற்றிவிட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே’ என்று கூறியது’ எனக் கூறினார்கள். இதைக் கேட்ட மக்கள், ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நானும் அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம்” என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை. இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்புத் தொடரிலும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3472
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘நிலத்தை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)” என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், ‘உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?’ என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்” என்று கூறினார். மற்றொருவர், ‘எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது” என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், ‘அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3473
ஆமிர் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது. அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது. (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்” என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். அபு நஸ்ர்(ரஹ்) கூறினார்:
அதிலிருந்து தப்பியோடும் நோக்கம் மட்டுமே கொண்டு நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது. (வேறு ஏதாவது காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் அதற்கு அனுமதியுண்டு.)
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3474
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்” என்று தெரிவித்தார்கள். மேலும், ‘கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்புவ)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3475
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், ‘அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’ என்று கூறினர். (உஸாமா(ரலி) அவர்களிடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்” என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), ‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3476
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை ஓத கேட்டேன். அவர் ஓதிய முறைக்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அவரை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தேன். அப்போது அவர்களின் முகத்தில் அதிப்தி(யின் சாயல்) படிந்திருப்பதை உணர்ந்தேன். அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள். (எல்லா விஷயங்களிலும்) கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (ஒவ்வொரு விஷயத்திலும்) கருத்து வேறுபட்டு எனவேதான் அழிந்து போனார்கள்” என்று கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3477
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. ‘அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, ‘இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3478
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒருவர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்டபோது தன் மகன்களிடம், ‘உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்” என்று கேட்டார். அவர்கள், ‘சிறந்த தந்தையாக இருந்தீர்கள்” என்று பதில் கூறினர். அதற்கு அவர், ‘நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. எனவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரின் உடல் அணுக்களை) அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) ‘இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?’ என்று கேட்டான். அவர், ‘உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் (இப்படி உத்ரவிட என்னைத் தூண்டியது)” என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அவன் அரவணைத்தான். இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். இதே நபிமொழி அபூ ஸயீத்(ரலி) அவர்களிடமிருந்தே வேறொரு அறிவிப்பாளர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3479
ரிப்யீ இப்னு ஹிராஷ்(ரஹ்) கூறினார். உக்பா(ரலி) ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதை எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். ஹுதைஃபா(ரலி) பின் வருமாறு சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘(மண்ணறையைத் தோண்டி கஃபன் துணியைத் திருடி விற்று வந்த) ஒரு மனிதருக்கு மரண (நேர)ம் வந்தது. அவர் இனி வாழ்வோம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டபோது தம் குடும்பத்தினரிடம் தன் இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார். ‘நான் இறந்துவிட்டால் எனக்கு நிறைய விறகுகளைச் சேகரித்து (சிதைக்குத்) தீமூட்டி விடுங்கள். அந்த நெருப்பு என் இறைச்சியைத் தின்று முடித்து என் எலும்பைச் சென்றடைந்துவிட்டால், எரிந்து கருகிய எலும்புகளை எடுத்து அவற்றைப் பொடியாக்கி ஒரு வெப்பமான நாளில் அல்லது காற்று அதிகம் வீசும் ஒரு நாளில் என்னைக் கடலில் தூவி விடுங்கள்” என்று கூறினார். (அவ்வாறே அவர்கள் செய்ய) அல்லாஹ் அவரை (அவரின் அணுக்களை) ஒன்று திரட்டி, (முழு உருவையளித்து), ‘ஏன் (இவ்வாறு) செய்தாய்?’ என்று கேட்டான். அவர், ‘உன் அச்சத்தால் தான்” என்று கூறினார். எனவே, அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளித்தான்.
வேறொரு அறிவிப்பில், உக்பா(ரலி), ‘ஹுதைஃபா(ரலி) கூற கேட்டேன்.” என்று கூறினார்கள். அதில் ‘வெப்பமான ஒரு நாளில்” என்பதற்கு பதிலாக, ‘காற்று அதிகமாக வீசும் ஒரு நாளில்” என்னும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3480
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முன் காலத்தில்) ஒருவர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தன்னுடைய (அலுவலரான) வாலிபரிடம், ‘(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக் கூடும்” என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவரின் பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்துவிட்டான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3481
நபி(ஸல்) அவர்கள் கூறினார். (முன் காலத்தில்) ஒருவர், வரம்பு மீறி (தீய செயல் புரிந்து) வந்தார். அவருக்கு மரணம் வந்தபோது தன் மகன்களை அழைத்து, ‘நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு, என்னைப் பொடிப் பொடியாக்கி பின்னர் காற்றில் தூவி விடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வளவும் செய்த பிறகும்) அல்லாஹ் என்னை உயிராக்க முடிந்தால் எவரையும் வேதனைப்படுத்தாத அளவிற்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் அளிப்பான்” என்று கூறினார். அவர் இறந்துவிட்டபோது அவ்வாறே அவரைச் செய்துவிட்டார்கள். உடனே அல்லாஹ், பூமியை நோக்கி, ‘அவரி(ன் உடல் அணுக்களி)லிருந்து உன்னில் இருப்பவற்றை ஒன்று சேர்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே பூமி செய்தது. அவர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு உருப்பெற்று) நின்றபோது அல்லாஹ், நீ இப்படிச் செய்யும் படி உன்னைத் தூண்டியது எது?’ என்று கேட்டான். அவர், ‘என் இறைவா! உன் அச்சம் தான் இப்படிச் செய்யும்படி என்னைத் தூண்டியது” என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளித்தான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3482
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3483
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், ‘நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்” என்பதும். என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3484
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்த (அறிவுரைகளில்) ஒன்று தான், ‘நீ வெட்கப்படவில்லை யென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்” என்பதும் .என அபூ மஸ்வூத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3485
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முன் காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற் பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3486
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3487
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு ஏழு நாளிலும் தன் தலையையும் உடலையும் கழுவுகிற ஒருநாள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும்.
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3488
ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றிய படி முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘இதை (போலி முடி வைத்துக் கொள்ளும் செயலை) யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. மேலும், நபி(ஸல்) அவர்கள் இதைப் ‘பொய்யானது’ என்று கூறினார்கள். தலைமுடியில் (சவுரி முடியை) ஒட்டவைப்பதைத் தான் நபி(ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள். இந்த நபிமொழி வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.