Author Archives: Jafar
ரமலானுக்கு முந்திய ஓரிரு நாட்கள் நோன்பிருப்பது பற்றி.
657. ”ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முன்புள்ள நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக்கூடாது. அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1914 அபூஹுரைரா (ரலி).
பிறை பார்த்து நோன்பு நோற்றல் விடுதல்.
653. ”ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி). 654. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது … Continue reading
மவுளூஆன ஹதீஸ்களில் அடிப்படையானவற்றிற் சில……
1. அல்லாஹ் தனது நூரி(ஒளியி)லிருந்து ஒரு பிடியை எடுத்து அதனை நோக்கி நீ முஹம்மதாக ஆகிவிடு! என்று சொன்னான். 2. ஜாபிரே! அல்லாஹ் முதலாவதாகப் படைத்தது உனது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒளியையாகும். 3. எனது அந்தஸ்தைக் கொண்டு நீங்கள் வஸீலாத் தேடுங்கள். (இதற்கு எந்தவித அடிப்படையுமில்லை) 4. எவனொருவன் ஹஜ் செய்து விட்டு … Continue reading
ரமலான் மாதத்தின் சிறப்பு.
652. ”ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1899 அபூஹுரைரா (ரலி)
தானம் வழங்கியவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்.
651. யாரேனும் ஒரு கூட்டத்தினர் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! இன்னாரின் குடும்பத்திற்கு நீ கிருபை செய்வாயாக!” என்று பிரார்த்திப்பவராக இருந்தார்கள். என்னுடைய தந்தை (அபூ அவ்ஃபா) தம் ஸகாத்தைக் கொண்டு வந்தார். ‘இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தினர்க்கு கிருபை செய்வாயாக” என்று நபி(ஸல்) பிரார்த்தித்தார்கள்.
நபி குடும்பத்தாருக்கு அன்பளிப்பு தர்மப்பொருட்கள்…
648. பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்” என்றார்கள். புஹாரி : 1495 அனஸ் (ரலி) 649. நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று ‘(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா … Continue reading
ஜக்காத் பொருள் நபி குடும்பத்தாருக்கு ஹராம் என்பது பற்றி..
645. மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தம் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹஸன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஒருநாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து தம் வாயில் … Continue reading
அல்லாஹ்விடம் எனக்காக இன்னொருவர் பரிந்து பேசுவது பலனளிக்குமா?
2:48. “நீங்கள் மறுமை நாளை அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்! அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்குப் பலனளிக்காது. எந்தவொரு ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்காகப் பரிந்து பேசுவதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாக) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்”. 2:123. “எந்த நாளில் … Continue reading
காரிஜிய்யாக் கூட்டத்தார்
644. நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், ‘காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி (ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், … Continue reading
கவாரிஜ்களை கொல்ல அனுமதி.
643. இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி அவர்களின் மீது புனைந்து சொல்வதை விட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை … Continue reading