648. பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்” என்றார்கள்.
649. நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று ‘(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), ‘நீங்கள் நுஸைபாவுக்கு தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘அப்படியெனில் அது தன்னுடைய இடத்தை (அன்பளிப்பின் அந்தஸ்தை) அடைந்துவிட்டது” என்றார்கள்.
650. அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் உணவுப்பொருள் கொண்டு வரப்படும் போது இது அன்பளிப்பா? தருமமா? என அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம் நீங்கள் உண்ணுங்கள் என்று கூறி விடுவார்கள் தாம் உண்ண மாட்டார்கள். அன்பளிப்பு என்று கூறப்பட்டால் தம் கையைத் தட்டிக் கொண்டு (விரைந்து) தோழர்களுடன் சேர்ந்து உண்பார்கள்.