Tag Archives: வெற்றி
அத்தியாயம்-3 பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் முறை.
1. வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குச் செல்வது போலவே தன்னிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். இறைவனின் இல்லமாம் பள்ளிவாசலிலோ அல்லது தொழுகைக்காக கூடியுள்ள இடத்திலோ தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன், இறைவனைப் புகழ்ந்து கூறும் ‘தக்பீர்’ஐ சொல்ல வேண்டும். 2. பெருநாள் தொழுகையை சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடையிலுள்ள நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு … Continue reading
அத்தியாயம்-3 தொழுகை அழைப்பு (அதான்)-பாங்கு
பெருமானார் (ஸல்) அவர்களின் போதனைகளின்படி தொழுகை நேரம் வந்தவுடன் தொழுகைக்கான அழைப்பு விடுப்பது சிறந்ததாகும். தொழுகைக்கான அழைப்பை விடுப்பவர், கிப்லாவை (மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி) நின்று கொண்டு தனது இரு கரங்களையும் தம் செவிகள் வரை உயர்த்தி உரத்த குரலில் பின்வருமாறு முழங்குதல் வேண்டும்.
அத்தியாயம்-2 நல்ல ஒழுக்கம் – இஸ்லாத்தின் விளக்கம்.
இஸ்லாம் தரும் ஒழுக்கக் கொள்கைகள் சில அடிப்படை நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளில் சில: 1). இறைவன் படைத்தவன், அவனே நன்மைகளின் பிறப்பிடம். அவனே உண்மையின் இருப்பிடம். அழகும் அழகிய கலையும் அவனே! 2). மனிதன், இறைவனின் பொறுப்பு மிகுந்த பிரதிநிதி ஆவான்.
அத்தியாயம்-2 இறைத்தூது.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிடுவான் வேண்டி எண்ணற்ற நபிமார்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி – இறைத்தூதர் அனுப்பப்பட்டுள்ளார். இறைவனின் தூதர்கள் அத்தனை பேரும் சீரிய ஒழுக்கங்களின் சிகரங்களாய் திகழ்ந்தனர். அவர்களை இறைவன், தனது வழிகாட்டுதலை மனிதர்களுக்கு வழங்குவதற்காக பயிற்றுவித்தான். அவர்களது நேர்மை, நாணயம், அறிவின் ஆழம் … Continue reading
இஸ்லாம் உங்கள் பார்வைக்கு (ஆசிரிய முன்னுரை)
வெளியீடு: International Islamic Federation Of Student Organizations நூல்: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு மூல நூல் ஆசிரியர்: ஹமுத அப்த் அல் அத்தி தமிழில்: மு. குலாம் முஹம்மத் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம். முன்னுரை. இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளை ஒரு சாதாரண வாசகர் புரிந்திட உதவுவதே இந்த நூலின் … Continue reading
91. கனவுக்கு விளக்கமளித்தல்
பாகம் 7, அத்தியாயம் 91, எண் 6982 ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாள்கள் … Continue reading
67. திருமணம்
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5063 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே … Continue reading
66. குர்ஆனின் சிறப்புகள்
பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4978 – 4979 ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் மீது குர்ஆன் அருளப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். பாகம் 5, அத்தியாயம் 66, எண் 4980 அபூ … Continue reading
[பாகம்-9] முஸ்லிமின் வழிமுறை.
மனதுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை. ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: மனதைத் தூய்மைப்படுத்தியவர் திண்ணமாக வெற்றியடைந்து விட்டார். அதனை நசுக்கியவர் திண்ணமாகத் தோற்றுவிட்டார். (91:9-10) காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் … Continue reading
அலீ பின் அபுதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
1556. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும்வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி), ‘குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் … Continue reading