Tag Archives: புனைதல்
சமாதானம் நாடி.
1674. (பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2692 உம்மு குல்தூம் பின்த்து உக்பா (ரலி).
பிரார்த்தனையின் படித்தரங்கள் (1)
இஸ்லாமிய அறிஞர்களும், இமாம்களும் ஷரீஅத்தில் ஆகுமானதும், ஆகாதவையுமான பிரார்த்தனைகளை வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கூடாத, பித்அத்தான பிரார்த்தனைகளை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று: அல்லாஹ் அல்லாத இதர சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்தித்தல். மய்யித்திடம் கேட்டுப் பிரார்த்தித்தல். கண் பார்வைக்கு அப்பாற்பட்டோர், இறந்து போன நபிமார்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரையெல்லாம் கூப்பிட்டு ‘யாஸய்யிதீ! எனக்கு உதவி செய்தருள்வீர்! உங்களைக் கொண்டு காவல் … Continue reading
ஆதம் நபியவர்கள் பெருமானாரின் பொருட்டால் வஸீலாத் தேடினார்கள் என்று கூறப்படும் ஹதீஸைப் பற்றி…
ஆதம் (அலை) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள் என்று சொல்லப்படும் இந்த ஹதீஸ் நபிகளைப் பற்றி உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. சுவர்க்கத்தில் பிசகிய ஆதம் (அலை) அவர்கள் ‘இறைவா! முஹம்மதின் பொருட்டால் அவரின் உரிமையைக் கொண்டு ஆணையிட்டுக் கேட்கிறேன். நீ என் குற்றங்களை மன்னித்தருள்’ என்றார்களாம். இதற்கு இறைவன் … Continue reading
வஸீலா ஷபாஅத் என்னும் வார்த்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்கள்
வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் … Continue reading
குறிப்பு (2)
அல்லாஹ்விடம் அவன் படைப்பினங்களைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தல் தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம் சென்று அவற்றைக் காரணம் காட்டியும், அவற்றைப் பொருட்டாகக் கொண்டும் கேட்பது விலக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சிலர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும் தம் தஃவாவுக்குச் சான்றாகக் கூறினார்கள். எனவே மக்களில் பலர் இம்மாதிரி துஆச் செய்வதைக் காணலாம். ஆனால் இது … Continue reading