Tag Archives: பயணம்

அத்தியாயம்-3 தொழுகையின் நிபந்தனைகள்

தொழுகை முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்: 1. புத்தி சுவாதீனமுள்ளவர்கள் அனைவரும் தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். 2. ஓரளவுக்கு மனப்பக்குவம் அடைந்தவரும், வயதுக்கு வந்தவர்களும் (பொதுவாக பதினான்கு வயது) தொழுகையை நிறைவேற்றியாக வேண்டும். குழந்தைகள் ஏழு வயதை அடைந்தவுடன் தொழும்படி பெற்றோர்கள் அறிவுரை கூற வேண்டும். பத்து வயதை அடைந்தவுடன் அதனை … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-3 தொழுகையின் நிபந்தனைகள்

அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.

இந்த நூலின் முன்னுரையில், மேலை நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைமையையும், இஸ்லாத்தின் எதிர்காலத்தையும் சுருக்கமாக விவாதித்தோம். இந்தப் பகுதியில் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள மனிதர்களின் நிலைமையையும், சாதாரணமாக மனிதர்களின் நிலைமை எத்தன்மையதாக இருக்கின்றது என்பதையும், உலகைப்பற்றி இஸ்லாம் சொல்லும் நியதிகள் என்னவென்றும் பார்ப்போம்.

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.

அத்தியாயம்-2 உயிரும் வாழ்க்கையும்.

நாம் நமக்குள் கொண்டிருக்கும் ‘உயிர்’ இறைவனின் பூரண ஞானத்தின் புனிதமான எடுத்துக்காட்டாகும். இறைவனின் அதிகாரத்தின் – வல்லமையின் இணையற்ற உதாரணமாகும். அவனது படைக்கும் திறனின் பாங்கான மேற்கோளாகும். உயிரை தருபவனும், வாழ்க்கையை உருவாக்குபவனும் அவனே! அவனே படைத்தவன்! இந்த உலகில் நாம் காணும் எதுவும் எதேச்சையாகத் தோன்றியவையல்ல. எவரும் தன்னைத்தானே படைத்துக் கொள்வதில்லை. அல்லது வேறு … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-2 உயிரும் வாழ்க்கையும்.

73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

பாகம் 6, அத்தியாயம் 73, எண் 5545 பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார். (ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். … Continue reading →

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 73. குர்பானி (தியாக)ப் பிராணிகள்

70. உணவு வகைகள்

பாகம் 6, அத்தியாயம் 70, எண் 5373 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பசியாளருக்கு உணவளியுங்கள். நோயாளியை நலம் விசாரியுங்கள். (போர்க் கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறினார்: (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்அனீ’ எனும் சொல்லுக்குக் ‘கைதி’ என்று பொருள். … Continue reading →

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 70. உணவு வகைகள்

65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4701 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) … Continue reading →

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 65 (2). திருக்குர்ஆன் விளக்கவுரை

பனூ இஸ்ராயீல்கள் மூவரின் கதை.

1868. பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | 1 Comment

சுவன மரத்தின் சிறப்பு.

1799. சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதை கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால், (படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்” எனும் (திருக்குர்ஆன் 56:30 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on சுவன மரத்தின் சிறப்பு.

கொலைகள் செய்தவர் தவ்பா அங்கீகரிக்கப் படுதல்.

1760. பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, ‘(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?’ என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், ‘கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , , | Comments Off on கொலைகள் செய்தவர் தவ்பா அங்கீகரிக்கப் படுதல்.

பெர்ஸிய மக்களின் சிறப்பு. (பாரசீகம்)

1650. நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு ‘அல்ஜுமுஆ’ எனும் (62 வது) அத்தியாயத்தில் ‘இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (3 வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, ‘அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டேன். நான் மூன்று … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on பெர்ஸிய மக்களின் சிறப்பு. (பாரசீகம்)