Tag Archives: நிறம்
அத்தியாயம்-3 ’ஹஜ்’
இஸ்லாத்தின் தூண்கள் என்று வருணிக்கப்பட்டுள்ள கடமைகளுள் இறுதியானது ‘ஹஜ்’ எனும் கடமையாகும்.மக்காவிலிருக்கும் ஆதி இறை இல்லமாம் கஃபாவை நோக்கி மேற்கொள்ளப்படும் புனிதப் பயணமே ஹஜ். இந்தப் புனிதப் பயணத்தை வாழ்வில் ஒரு முறையாவது மேற்கொண்டிடுவது, உடல்பலம், மனபலம், பணபலம் இவற்றையுடைய முஸ்லிம்களின் கடமையாகும்.
அத்தியாயம்-2 ’சகோதரத்துவம்’ இஸ்லாத்தின் தனித்தன்மை.
மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே என்பது இஸ்லாத்தின் பிரிதொரு பிரிக்க முடியாத அடிப்படையாகும். ‘சுதந்திரம்’ ‘சமத்துவம்’ இவைகள் எந்த அடிப்படையில் அமைந்துள்ளனவோ அதே அடிப்படையில் தான், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அமைந்துள்ளது. சுதந்திரம், சமத்துவம் என்ற கொள்கைகள் அமைந்துள்ள அடிப்படைகளைத் தவிர இன்னும் சில அடிப்படைகள் இதற்குண்டு. அவை, இறைவன் ஒருவனே, அவன் எங்கும் நிறைந்து நிற்பவன். அவன் … Continue reading
15.மழை வேண்டுதல்
பாகம் 1,அத்தியாயம் 15, எண் 1005 அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பாகம் 1,அத்தியாயம் 15, எண் 1006 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கடைசி ரக்அத்தின் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் ‘இறைவா! அய்யாஷ் இப்னு … Continue reading
குறிப்பு (2)
அல்லாஹ்விடம் அவன் படைப்பினங்களைக் கொண்டு ஆணையிட்டுப் பிரார்த்தித்தல் தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம் சென்று அவற்றைக் காரணம் காட்டியும், அவற்றைப் பொருட்டாகக் கொண்டும் கேட்பது விலக்கப் பட்டிருக்கிறது. ஆனால் சிலர் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும் தம் தஃவாவுக்குச் சான்றாகக் கூறினார்கள். எனவே மக்களில் பலர் இம்மாதிரி துஆச் செய்வதைக் காணலாம். ஆனால் இது … Continue reading