Tag Archives: நியதிகள்
அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (1)
மனிதனின் சமுதாய வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றைப் போலவே மனிதனின் அரசியல் வாழ்வையும் இஸ்லாம் சில உயர்ந்த ஒழுக்க, ஆன்மீக அடிப்படைகளின் கீழ் அமைத்துத் தருகின்றது. வாழ்வின் ஏனையத் துறைகளைப்போலவே இதற்கும் தெளிவான இறைக்கட்டளைகள் இருக்கவே செய்கின்றன. இந்த இறைக்கட்டளைகளின் படியே ஒரு முஸ்லிமின் அரசியல் வாழ்க்கை அமைக்கப்பட வேண்டும்.
அத்தியாயம்-4. மனிதனின் பொருளாதார வாழ்க்கை. (1)
இஸ்லாத்தில் மனிதனின் பொருளாதார வாழ்வு, உறுதியான அடிப்படை, தெளிவான இறைவழி காட்டுதல் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானவற்றை நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது ஒருவனின் கடமை என்பது மட்டுமல்ல, மாட்சிமைமிக்க சிறந்த நற்குணமுமாகும். உழைத்திடும் திறன் இருந்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் அடுத்தவர்களை அண்டிப் பிழைத்திடுவது மார்க்கத்தின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகும். … Continue reading
அத்தியாயம்-4. பெற்றோர்களுக்கும் – குழந்தைகளுக்கும் இடையேயுள்ள உறவு.
குழந்தைகளின் உரிமைகளும் பெற்றோரின் கடமைகளும். குழந்தைகளைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் அணுகுமுறையை சில கொள்கைகளாகச் சுருக்கலாம். முதன் முதலாக எந்தப் பிள்ளையும் பெற்றோரின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்திடலாகாது. இரண்டாவதாக பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கையும் இழைத்திடக் கூடாது. சில நேரங்களில், பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பில் அளவுக்கதிகமாகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் குழந்தைகள் … Continue reading
அத்தியாயம்-4. B. மனிதனின் குடும்ப வாழ்க்கை (2)
மனைவியின் உரிமைகள் – கணவனின் கடமைகள் நாம் மேலே சொன்ன ஒழுக்க விதிகள் பெண்களுக்குச் சில உரிமைகளை ஏற்படுத்துகின்றன. அதுபோலவே அவர்களுக்கென சில கடமைகளையும் ஏற்படுத்துகின்றன. திருக்குர்ஆனும், பெருமானார் (ஸல்) அவர்களது வாழ்வின் அழகிய முன்மாதிரியும் கணவன் மனைவியிடம் நீதமுடனும், இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனப் பணித்திருப்பதால், மனைவியிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டியது … Continue reading
அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.
இந்த நூலின் முன்னுரையில், மேலை நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைமையையும், இஸ்லாத்தின் எதிர்காலத்தையும் சுருக்கமாக விவாதித்தோம். இந்தப் பகுதியில் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள மனிதர்களின் நிலைமையையும், சாதாரணமாக மனிதர்களின் நிலைமை எத்தன்மையதாக இருக்கின்றது என்பதையும், உலகைப்பற்றி இஸ்லாம் சொல்லும் நியதிகள் என்னவென்றும் பார்ப்போம்.