Tag Archives: தாத்பரியம்
முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்
ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் … Continue reading
‘நபியைக் கொண்டு வஸீலா தேடுவது’ ஸஹாபாக்களின் கருத்து
நபித்தோழர்களான ஸஹாபிகளின் சொற்களில் காணப்படுகின்ற, மேலும் அவர்களின் பேச்சுகளில் பரிமாறப்பட்ட வஸீலா என்ற வார்த்தையின் தாத்பரியத்திற்கு வருவோம். ஸஹாபிகள் பற்பல சம்பவங்களைக் கூறும்போது நாயகத்தைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கியதாகவும், அவர்களைக் கொண்டு அவனிடம் வஸீலா தேடியதாகவும் (உதவி கோரியதாகவும்) அல்லாஹ்வின்பால் முன்னோக்கியதாகவும் கூறுவார்கள். பற்பல இடங்களில் இப்படிக் காணப்படுகின்றன.
தவஸ்ஸுல் வஸீலாவில் ஏற்பட்ட பிசகுதல்கள்
மேற்கூறிய விளக்கங்களெல்லாம் சரிவர நாம் புரிந்து கொண்டோம். அவ்விளக்கங்களிலிருந்து ‘தவஸ்ஸுல் வஸீலா’ என்ற வார்த்தைகளைப் பற்றி ஓரளவுக்கு விளங்க முடிந்தது. இவ்விரு வார்த்தைகளும் அடக்கியிருக்கும் சரியான கருத்துகள் யாவை என்பதுப் பற்றி மேலும் நாம் தெரிய வேண்டியிருக்கிறது. ஏனெனில் பற்பல மாறுபட்ட பிசகுதலான கருத்துகளை மக்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். ‘வஸீலா, தவஸ்ஸுல்’ என்பதின் உண்மையான … Continue reading
சிருஷ்டிகளிடம் கேட்பதால் விளையும் தீமைகள்
எதையும் சிருஷ்டிகளிடம் கேட்பதற்கு மூமின் முஸ்லிம்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறிப்பாக நபிமார்கள் யாரிடமும் கேட்க கூடாது. அவர்களிலும் குறிப்பாக பெருமானார் (ஸல்) அவர்கள் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாது. நபிமார்கள் மதிப்பாலும், கண்ணியத்தாலும் பொதுவாக மேலானவர்கள். எதையும் அல்லாஹ்விடம் கேட்பார்கள். அவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் அல்லாஹ் போதுமானவன்.