Tag Archives: சிலைகள்
அத்தியாயம்-3 ’ஹஜ்’
இஸ்லாத்தின் தூண்கள் என்று வருணிக்கப்பட்டுள்ள கடமைகளுள் இறுதியானது ‘ஹஜ்’ எனும் கடமையாகும்.மக்காவிலிருக்கும் ஆதி இறை இல்லமாம் கஃபாவை நோக்கி மேற்கொள்ளப்படும் புனிதப் பயணமே ஹஜ். இந்தப் புனிதப் பயணத்தை வாழ்வில் ஒரு முறையாவது மேற்கொண்டிடுவது, உடல்பலம், மனபலம், பணபலம் இவற்றையுடைய முஸ்லிம்களின் கடமையாகும்.
இணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்!
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், “ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே” என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால், ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்களோ எந்த சிலைகளையும் வணங்கவில்லை. இறைநேச செல்வர்களின் … Continue reading
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. ‘என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து. … Continue reading
நாய் உள்ள வீட்டில் அருள் மலக்குகள் நுழைய மாட்டார்கள்.
1363. நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3225 அபூ தல்ஹா (ரலி). 1364. ”(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்’ என்று … Continue reading
கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுதல்.
1166. நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். ‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது” (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள். புஹாரி :2478 இப்னு மஸ்ஊத் (ரலி).
பிரார்த்தனையின் படித்தரங்கள் (2)
முந்தைய நபிமார்களின் ஷரீஅத்துக்களிலும் ஷிர்க் அனுமதிக்கப் படவில்லை. இறைவனுக்கு இணைவைத்தல் என்பது நபி (ஸல்) அவர்கள் மட்டும் விலக்கிய ஒரு பாவமல்ல. மாறாக அனைத்து நபிமார்களும் தம் ஷரீஅத்துகளில் இத்தகைய ஷிர்க்குகள் பரவுவதைத் தடுத்தார்கள். இறந்துப் போனவர்களைக் கூப்பிட்டு பிரார்த்திக்காதீர்கள் என்றும், ஷிர்க்கான அனுஷ்டானங்களைச் செய்யாதீர்கள் என்றும் நபி மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களைத் … Continue reading
பிரார்த்தனையின் படித்தரங்கள் (1)
இஸ்லாமிய அறிஞர்களும், இமாம்களும் ஷரீஅத்தில் ஆகுமானதும், ஆகாதவையுமான பிரார்த்தனைகளை வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கூடாத, பித்அத்தான பிரார்த்தனைகளை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். ஒன்று: அல்லாஹ் அல்லாத இதர சிருஷ்டிகளை அழைத்துப் பிரார்த்தித்தல். மய்யித்திடம் கேட்டுப் பிரார்த்தித்தல். கண் பார்வைக்கு அப்பாற்பட்டோர், இறந்து போன நபிமார்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரையெல்லாம் கூப்பிட்டு ‘யாஸய்யிதீ! எனக்கு உதவி செய்தருள்வீர்! உங்களைக் கொண்டு காவல் … Continue reading
கப்றுகளில் பள்ளி கட்டலாமா?
கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் … Continue reading
நாத்திகர்களிடத்தில் ஸியாரத்தின் தாத்பரியம்.
தத்துவ ஞானிகளிலுள்ள சில தஹ்ரிய்யாக்கள் (நாத்திகர்கள்) ஸியாரத்தின் போது புதுமாதிரியான ஒரு ஷிர்க்கையும் மக்களுக்கு விளக்கி காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய சித்தாந்தம் வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்தான் என்பதெல்லாம் உவமிப்புகள்தாம் உன்மையல்ல என்பதாகும்.
விக்ரஹங்களால் சிபாரிசு செய்ய முடியாது
இறைவனுக்கு இணையுண்டு என நினைக்கின்ற முஷ்ரிக்குகள் கூறுகின்றனர்: மலக்குகளும், நபிமார்களும் எங்களுக்காக சிபாரிசு செய்ய வேண்டுமென்றே நாம் அவர்களை வேண்டுகிறோம்.வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை. நபிமார்கள்,மலக்குகள், நன்மக்கள் இவர்கள் சமாதியில் வந்து நாம் கேட்பதெல்லாம் சிபாரிசு ஒன்றைத்தான். உதாரணமாகக் கூறுவதாயின்: இரக்கமுள்ள நாச்சியார் மர்யம் அவர்களே! மேன்மைக்குரிய பீட்டர் அவர்களே! ஜுர்ஜீஸ் அவர்களே! நபி மூஸாவே! … Continue reading