Tag Archives: எண்ணம்
அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)
3. இஸ்லாமிய வரலாற்றை விமர்சிக்குமுன் அந்த வரலாற்று விற்பன்னர்கள் போரைப்பற்றியும், அமைதியைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன சொல்லுகின்றது என்பதை கூர்ந்து, நேர்மையான எண்ணத்தோடு படித்திடுவது நன்மை பல பயக்கும். இஸ்லாம் வெற்றிக்கொண்ட இடங்களிலெல்லாம் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதையும், முஸ்லிம்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பு அவர்கள் இருந்த நிலையையும், இஸ்லாத்தோடு தொடர்பு கொண்ட பின்னர் … Continue reading
அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (1)
முஸ்லிம்களால் மறக்கப்பட்டுவிட்ட – மற்றவர்களால் முற்றிலும் திரித்துக் கூறப்பட்டு வரும் இஸ்லாத்தின் சில பகுதிகள் குறித்து இங்கே விவாதிக்கப் போகின்றோம். இந்தப் பகுதிகள் பற்றிய உண்மையான விளக்கங்களைத் தந்திட எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளில் மன்னிப்புக் கேட்பதைப் போன்றதொரு மனநிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். ஏனெனில் இஸ்லாம் இதை முற்றாக வெறுக்கின்றது. இன்னும் இஸ்லாத்தில் இதற்குத் … Continue reading
அத்தியாயம்-4. A. தனிமனிதனின் தனிவாழ்வு.
இஸ்லாம் மனிதனின் தனிவாழ்க்கைத் தூய்மை நிறைந்த ஒன்றாக இருந்திட வேண்டும் என விழைகின்றது. இந்த விதத்திலேயே தனது போதனைகளை அமைத்துத் தருகின்றது. மனிதன் ஆரோக்கியம் நிறைந்தவனாக இருந்திட, அவனுக்கு மிகவும் ஆரோக்கியமானதொரு உணவு திட்டத்தை அமைத்துத் தந்துள்ளது. தனிமனிதனின் ஒழுக்கம் மாசுபடாமல் இருந்திட, அவன் எவ்வாறு ஆடை அணிந்திட வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லுகின்றது. அவன் … Continue reading
அத்தியாயம்-3 இறந்தோருக்கான தொழுகை (ஜனாஸா தொழுகை)
1. இறந்துபோன ஒரு முஸ்லிமுக்காக இறைவனைத் தொழுவது முஸ்லிம்களுடைய கூட்டுக் கடமையாகும். இந்தத் தொழுகையை இறப்பின்போது குழுமியிருக்கும் முஸ்லிம்கள் நிறைவேற்றினால் போதுமானது. குழுமியிருப்பவர்களில் சிலர் இந்தத் தொழுகையை நிறைவேற்றினாலும் போதுமானது. 2. இறந்தவரின் உடலை சோப்பு அல்லது அழுக்கு நீக்கும் பொருள்களால் சில தடவைகள் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். உடலை முற்றிலும் சுத்தப்படுத்திய பிறகு … Continue reading
அத்தியாயம்-3 தொழுகையின் விதிகள்
குறைத்து தொழுதல் 1. ஒருவர் தனது ஊரிலிருந்து நாற்பத்தெட்டு மைல்கள் அல்லது அதற்கு மேலே தொடர்ந்து செல்லும் எண்ணத்தோடு பயணம் செய்யும்போது அவர் நான்கு ரக்அத்துகள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாகக் குறைத்து தொழுது கொள்ள வேண்டும். இந்த சலுகை லுஹர், அஸர், இஷாத் தொழுகைகளுக்குப் பொருந்தும். பஜ்ரு, மஃரிப் ஆகிய தொழுகைகளை குறைத்துத் தொழ … Continue reading
அத்தியாயம்-3 கூட்டுத் தொழுகைகள் (ஜமாஅத்)
1. தொழுகைக்காக வந்திருப்பவர்களில் ஒருவரை முன் நிறுத்தி (இமாமாகக் கொண்டு) அவரைப் பின்பற்றித் தொழுவதே கூட்டுத் தொழுகை. இமாம் மார்க்க சட்டதிட்டங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இறையச்சம் மிக்கவராயிருக்க வேண்டும். 2. இமாம் அனைவருக்கும் முன்பாக கிப்லாவை நோக்கி நிற்பார். மற்றவர்கள் அவர்க்குப் பின்னால் அணியணியாக நிற்க வேண்டும். கூட்டுத் தொழுகையை இரண்டுப் பேரைக் … Continue reading
அத்தியாயம்-3 தொழுகையை நிறைவேற்றுதல்.
ஒளு, பாங்கு, இகாமத் ஆகியவை முடிந்தவுடன் தொழுகை பின்வருமாறு தொடங்குகின்றது. 1. பஜ்ருத் தொழுகை இந்தத் தொழுகையில் சுன்னத் தொழுகையாக இரண்டு ரக்அத்களும் பின்னர் பர்ளுத் தொழுகையாக (கட்டாயத் தொழுகையாக) இரண்டு ரக்அத்களும் தொழ வேண்டும். தொழும் முறைகள் இரண்டிற்குமே ஒன்றுதான். நிய்யத் வைப்பதில் மட்டுமே வேறுபாடு உள்ளது. தொழுகையின் முறைகள் பின்வருமாறு:
அத்தியாயம்-3 உடல் தூய்மை செய்தல். (ஒளு)
தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பு ஒருவர் தூய்மையான நிலையில் இருத்தல் வேண்டும். அழுக்கு தூசு படக்கூடிய அளவில் வெளியில் தெரியக்கூடிய பகுதிகளை கழுவி சுத்தப்படுத்துவது அவசியமாகும். இதனைத்தான் ஒளுச்செய்தல் என நாம் சொல்லுகிறோம். அதன் செயல்முறை பின்வருமாறு:
80. பிரார்த்தனைகள்
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6304 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6305 … Continue reading
கஃபாவைத் தாக்க வரும் படை.
1831. ”ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் … Continue reading