Tag Archives: ஆராய்ச்சி
அத்தியாயம்-11.முஹம்மத் (ஸல்) இறுதி இறைத்தூதர்
முஸ்லிம்கள், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் என நம்புகின்றார்கள். இதைப்பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அது குறித்து சில விளக்கங்களைத் தந்தாக வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என நம்புவது, இறைவன் தனது கருணக் கதவுகளை அடைந்து விட்டான் என்றோ, தனது கருணையை குறைத்துக் கொண்டான் என்றோ பொருளாகாது. … Continue reading
அத்தியாயம்-4 நித்திய வாழ்க்கையில் இஸ்லாத்தை செயல்படுத்தும் முறை.
இஸ்லாம் ஒரு வெற்றுத் தத்துவமல்ல. தேவைபடும்போது புகழாரங்களைச் சூட்டி அழகு பார்த்துவிட்டுப் புறக்கணித்திடக்கூடிய ஓட்டைச் சித்தாந்தமுமில்லை. ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை இந்த கண்ணோட்டத்தில் அணுகிடுவதுமில்லை. நமது வாழ்க்கையில் நாளும் நடைமுறைப்படுத்தி நன்மையடைந்திட வேண்டிய நிறைவான வாழ்க்கை வழிகாட்டியே இஸ்லாம்.
அத்தியாயம்-2 உலகம் (பிரபஞ்சம்) இஸ்லாத்தின் கண்ணோட்டம்.
இந்த நூலின் முன்னுரையில், மேலை நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலைமையையும், இஸ்லாத்தின் எதிர்காலத்தையும் சுருக்கமாக விவாதித்தோம். இந்தப் பகுதியில் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள மனிதர்களின் நிலைமையையும், சாதாரணமாக மனிதர்களின் நிலைமை எத்தன்மையதாக இருக்கின்றது என்பதையும், உலகைப்பற்றி இஸ்லாம் சொல்லும் நியதிகள் என்னவென்றும் பார்ப்போம்.
அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-2)
11. இறைவன் தந்திருக்கின்ற வழிகாட்டுதல்களைக் கொண்டு, மனிதன் தன்னுடைய ஈடேற்றத்திற்கு தானே முயற்சிகளை மேற்கொண்டு வழிதேடிக் கொள்ள வேண்டும் என்று ஒரு உண்மையான முஸ்லிம் நம்புகின்றார். ஒருவர் தான் ஈருலக வாழ்விலும் வெற்றி பெறவேண்டும் என்றால் அவர் தனது நம்பிக்கை, செயல், நடைமுறை இவைகள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டு முயற்சிக்க வேண்டும். செயலில் இல்லாத நம்பிக்கை, … Continue reading
[பாகம்-4] முஸ்லிமின் வழிமுறை.
காரிகள், ஃபிக்ஹ், ஹதீஸ் கலை வல்லுனர்கள். ஒரு முஸ்லிம் அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்காக அருளை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் சிறப்பை ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி நல்லதையே கூற வேண்டும். அவர்களைப் பற்றி குறை கூறவோ தப்பபிப்ராயம் கொள்ளவோ கூடாது. திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வுக்காகவே தூய உள்ளத்தோடு (குர்ஆன், ஹதீஸை) ஆய்வு … Continue reading
கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் அல்-குர்ஆனின் வசனங்களால் கவரப்பட்டும் அதை அடிபிறழாது பின்பற்றியொழுகிய சத்திய சீலர்களின் நற்பண்புகளைக் கண்டும் எண்ணற்றோர் இஸ்லாத்தைத் … Continue reading
ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.
ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.
ஆதம் நபியவர்கள் பெருமானாரின் பொருட்டால் வஸீலாத் தேடினார்கள் என்று கூறப்படும் ஹதீஸைப் பற்றி…
ஆதம் (அலை) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள் என்று சொல்லப்படும் இந்த ஹதீஸ் நபிகளைப் பற்றி உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. சுவர்க்கத்தில் பிசகிய ஆதம் (அலை) அவர்கள் ‘இறைவா! முஹம்மதின் பொருட்டால் அவரின் உரிமையைக் கொண்டு ஆணையிட்டுக் கேட்கிறேன். நீ என் குற்றங்களை மன்னித்தருள்’ என்றார்களாம். இதற்கு இறைவன் … Continue reading