Tag Archives: அறியாமை
93. நீதியும் நிர்வாகமும்
பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7137 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 7, அத்தியாயம் … Continue reading
92. குழப்பங்கள் (சோதனைகள்)
பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7048 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தின் அருகே இருந்தவாறு என்னிடம் வருகிறவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அப்போது என்னை நெருங்கிவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். அப்போது நான் ‘(இவர்கள்) என் சமுதாயத்தார்’ என்பேன். அதற்கு ‘உங்களுக்குத் தெரியாது. (நீங்கள் உலகை விட்டுப் பிரிந்த … Continue reading
88. இஸ்லாத்திலிருந்து வெளியேறியோர்
பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6918 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் ‘எங்களில் … Continue reading
74. குடிபானங்கள்
பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5575 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்து விடுவான் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5576 அபூ ஹுரைரா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் … Continue reading
மனமிருந்தால் மாற்றம் வரும்!
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. அரேபிய தீபகற்பத்தில் அறியாமை எனும் இருள் சூழ்திருந்த ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கள் தம் மனம்போன போக்கில் வாழ்ந்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையுமே தம்முடைய வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டு எதற்கெடுத்தாலும் நல்ல நேரம், சகுனம் பார்த்து தம் அன்றாட வாழ்க்கையை நடத்தியவர்களாகயிருந்தனர். அதே நேரத்தில் உலகம் முழுவதிலும் … Continue reading
[பாகம்-5] முஸ்லிமின் வழிமுறை.
அதிகாரம் வகிப்பவர்கள். ஒரு முஸ்லிம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை கடமை என்று கருத வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்) (அல்குர்ஆன்: 4:56) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அதிகாரம் உடையவர்களுக்கு) நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள். உலர்ந்த திராட்சையைப் போன்ற … Continue reading
இணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்!
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், “ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே” என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால், ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்களோ எந்த சிலைகளையும் வணங்கவில்லை. இறைநேச செல்வர்களின் … Continue reading
குழப்பங்கள் கிழக்கிலிருந்து தோன்றுதல். குழப்பங்களின் நிலைகளில் சில.
1840. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிழக்கை நோக்கியபடி, அறிந்து கொள்ளுங்கள்! குழப்பம், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இந்த இடத்திலிருந்து தோன்றும்” என்று சொல்ல கேட்டேன். புஹாரி : 7093 இப்னு உமர் (ரலி). 1841. தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் ‘துல்கலஸா’ கடவுள் சிலையைச் சுற்றி அசையாதவரை மறுமை நாள் வராது. ‘துல்கலஸா’ என்பது அறியாமைக் காலத்தில் … Continue reading
யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.
1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்’ என்றார். அவர்களின் இன்னொருவர் ‘அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் … Continue reading
மறுமை நாளின் அடையாளங்கள்.
1709. ‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” . புஹாரி : 80 அனஸ் (ரலி). 1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி … Continue reading