Tag Archives: அனுமதி
ரமலானின் சிறப்புக்கள்!
நோன்பு என்பது தொழுகை என்ற கடமையை விட வேறுபட்டதாக இருக்கின்றது, தொழுகை என்பது ஒரு குறிப்பிட்ட செய்முறைகளைக் கொண்டதாகவும், இரவும் பகலும் அதற்கென குறிப்பிடப்பட்டதொரு நேரங்களைக் கொண்டதாகவும் இருக்கின்றது. ஒருவர் நோன்பாளியாக இருக்கும் பொழுது, அந்த நோன்பாளியினுடைய அன்றாடத் தேவைகளான உணவு மற்றும் குடிப்பு ஆகியவற்றை இறைவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே அவற்றிலிருந்து அவரை விலக்கி வைத்து, … Continue reading
[பாகம்-15] முஸ்லிமின் வழிமுறை.
மனைவி மீது கணவனுக்குரிய கடமைகள் கணவன் விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களையும் மேற்கொள்வது மனைவியின் மீது கடமையாகும். 1. பாவமல்லாத காரியங்களில் அவனுக்கு அவள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். “அவர்கள் (மனைவியர்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் பிறகு அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். (4:34) ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்து அவள் செல்லவில்லையென்றால் அவன் … Continue reading
[பாகம்-14] முஸ்லிமின் வழிமுறை.
கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள். மனைவி விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களை மேற்கொள்வது கடமையாகும். 1. அவளுடன் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தவேண்டும். “அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 4:19) அவன் உண்ணும்போது அவளுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அவன் ஆடை அணியும்போது அவளுக்கும் அணியக் கொடுக்க வேண்டும். தனக்கு அவள் மாறு … Continue reading
90. தந்திரங்கள்
பாகம் 7, அத்தியாயம் 90, எண் 6953 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களே! எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். தாம் … Continue reading
67. திருமணம்
பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5063 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே … Continue reading
[பாகம்-10] முஸ்லிமின் வழிமுறை.
பெற்றோருக்குரிய கடமைகள் ஒரு முஸ்லிம் தன் மீதுள்ள பெற்றோருக்குரிய உரிமைகளையும் அவர்களுக்கு நன்மை செய்வது, கட்டுப்படுவது மற்றும் உபகாரம் செய்வதன் கடமையையும் நம்ப வேண்டும். இது அவன் இவ்வுலகில் தோன்றுவதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள் என்பதற்காகவோ அல்லது அவனுக்கு அவர்கள் செய்த நன்மைக்காக அவன் கைமாறு செய்யக் கடமைப்பட்டிருக்கிறான் என்பதற்காகவோ அல்ல. மாறாக அவர்களுக்கு கட்டுப்படுவதை … Continue reading
பொறாமை கொள்ளாதே.
1658. ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :6065 அனஸ் இப்னு மாலிக் (ரலி). 1659. ஒருவர் தம் சகோதரரிடம் … Continue reading
உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்
1554. நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒருவர் வந்து (வாயில் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்காகத் திறவுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் அவருக்காக (வாயிற் கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) … Continue reading
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவசியம்.
1519. மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக … Continue reading
அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடிய அண்ணலார்.
1518. நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களை விட … Continue reading