Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
லுஹாத் தொழுகையின் சிறப்பு!
416– நபி (ஸல்) அவர்கள் சில அமல்களைச் செய்ய விரும்புவார்கள். (ஆனால்) சில சமயம் அவற்றைச் செய்ய மாட்டார்கள். மக்களும் அதைச் செய்து அவர்களின் மீது அது பாரமாகி விடுமே என்ற அச்சமே இதற்கு காரணம். நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் லுஹாத் தொழுததில்லை. நான் லுஹாத் தொழுது வருகிறேன். புஹாரி : 1128 ஆயிஷா … Continue reading
பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தால்….
415– நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டு) இருந்தேன். அப்போது என்னுடைய ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து. ‘ஜாபிரா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?’ என்று கேட்டார்கள். ‘என் ஒட்டகம் களைத்து … Continue reading
மஸ்ஜிதில் நுழைந்ததும்….
414– உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.! புகாரி-444: அபூகதாதா (ரலி)
இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான…..
இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான தொழுகைகளை தொழக்கூடாது413– இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிதரைச் சூழ்ந்து கொண்டனர். ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? என்று அம்மனிதரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் … Continue reading
தொழுகையை முடித்ததும் இடப்புறமாக எழுதல்.
412– வலப்புறம் தான் திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொள்வதன் மூலம் தனது தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்திட வேண்டாம். நபி (ஸல்) அவர்கள் பல சமயங்களில் தம் இடப்புறம் திரும்பக் கூடியவர்களாக இருந்தனர். புஹாரி-852: இப்னு மஸ்வூது (ரலி)
தொழுகைகளைச் சேர்த்து தொழுதல்….
409– நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பிரயாணம் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். புஹாரி: இப்னு உமர் (ரலி). 410– நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணத்தை மேற்கொண்டால் லுஹரை அஸர் வரை தாமதப்படுத்தி ஜம்உச் செய்வார்கள். சூரியன் சாய்ந்த பிறகு புறப்பட்டால் லுஹர்த் தொழுதுவிட்டுப் புறப்படுவார்கள். … Continue reading
பிரயாணத்தில் வாகனத்தில் பிரயாணித்தவாறு…
406– நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தின் போது வாகனத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். கடமையான தொழுகை தவிர உபரியான இரவு தொழுகைகளை வாகனம் எத்திசையில் சென்றாலும் தொழுதுக்கொண்டு இருப்பார்கள். தம் வாகனத்தின் மீதமர்ந்தே வித்ரும் தொழுவார்கள். புஹாரி-1000: இப்னு உமர் (ரலி) 407– நபி (ஸல்) அவர்களை வாகனம் எத்திசையில் கொண்டு சென்றாலும் அவர்கள் வாகனத்தின் மீதமர்ந்து … Continue reading
மழை நேரத்தில் தொழுகையை வீட்டில் நிறைவேற்றுதல்.
404– குளிரும் காற்றும் நிறைந்த ஒரு இரவில் தொழுகைக்காக இப்னு உமர் (ரலி) பாங்கு சொன்னார்கள். பின்னர் உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்றார்கள். குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களிலே தொழுங்கள் என்று கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள் எனவும் கூறினார்கள். புஹாரி-666: நாஃபிவு 405– பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் … Continue reading
ஹஜ் நேரத்தில் தொழுகையை (மினாவில்) சுருக்குதல்.
402– நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோருடனும் உஸ்மான் (ரலி) உடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் உஸ்மான் (ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். பின்னர் உஸ்மான் (ரலி) நான்கு ரக்அத்களாகத் தொழலானார்கள். புகாரி-1082 :அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) 403– நபி (ஸல்) அவர்கள் மினாவில் … Continue reading
பிரயாணிகள் தொழுகை..
398– அல்லாஹ் தொழுகையினை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும், பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாக கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது. புகாரி-350: ஆயிஷா (ரலி) 399– நான் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில் உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம் … Continue reading