Tag Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
ஹஜ் உம்ராவுக்கு இஹ்ராம் அணிதல்.
738. ‘உபைது இப்னு ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘அப்துர்ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை காண்கிறேன்’ என்றார். ‘இப்னு ஜுரைஜே! அவை யாவை?’ என இப்னு உமர் (ரலி) கேட்டதற்கு, ‘(தவாஃபின்போது) கஃபதுல்லாஹ்வின் நான்கு மூலைகளில் யமன் தேசத்தை நோக்கியுள்ள (ஹஜருல் அஸ்வத், … Continue reading
மதீனவாசிகள் துல்ஹூலைஃபாவில் இஹ்ராம் அணிதல்.
737. நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவின் பள்ளியைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் அணிந்ததில்லை. புஹாரி: 1541 இப்னு உமர் (ரலி).
தல்பியா கூறுதல்.
736. ”இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.” இதுவே நபி (ஸல்) அவர்களின் தல்பியாவாகும். புஹாரி: 1549 இப்னு உமர் (ரலி).
இஹ்ராம் அணியும் எல்லைகள்.
734. நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல் ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாத்தையும் யமன் வாசிகளுக்க யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் … Continue reading
ஹஜ் உம்ராவில் தடை செய்யப் பட்டவைகள்.
731. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்தவர் எதையெதை அணியலாம்?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, தொப்பி, காலுறை ஆகியவற்றை அணியக்கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம் குங்குமப்பூச் சாயம் … Continue reading
ரமலான் இறுதிப் பத்தில் அதிக வணக்க வழிபாடுகளில் இருத்தல்.
730. (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்!’ புஹாரி : 2024 ஆயிஷா (ரலி).
இஃதிகாஃப் இருக்க நாடுபவர்….
729. நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா (ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் … Continue reading
ரமலான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப்.
727. ”நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!” புஹாரி :2025 இப்னுஉமர் (ரலி). 728. ”நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!” புஹாரி :2026 ஆயிஷா (ரலி)
லைத்துல் கத்ர் சிறப்பு.
723. நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர் (இரவு) காட்டப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் ‘உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!” என்று கூறினார்கள். … Continue reading
ஷஃபான் மாத இறுதியில் நோன்பு நோற்க தடை.
722. இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள் ‘இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘இல்லை! இறைத்தூதர் அவர்களே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘நீர் நோன்பை விட்டுவிட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள். ”நபி (ஸல்) அவர்கள் … Continue reading