734. நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல் ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாத்தையும் யமன் வாசிகளுக்க யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.
புஹாரி : 1526 இப்னு அப்பாஸ் (ரலி).
735. ”மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலிருந்தும் ஷாம்வாசிகள் ஜுஹ்ஃபாவிலிருந்தும் நஜ்த்வாசிகள் கர்னிலிருந்தும் இஹ்ராம் அணிவார்கள்.”யமன்வாசிகள் யலம்லம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிவார்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
புஹாரி :1525 இப்னு உமர் (ரலி).