Tag Archives: ஆதாரம்
தூய இஸ்லாத்தின் இரண்டாவது அடிப்படை
அல்லாஹ் தன் திருத்தூதர் வாயிலாக நமக்கு விதித்தவற்றைக் கொண்டு நாம் அவனை வணங்க வேண்டும். அப்படியானால் வாஜிப் (கடமை), முஸ்தஹப் (ஸுன்னத்) போன்ற விதிகளுக்குட்பட்ட வழிபாடுகளை நாம் புரிய வேண்டும். இந்த அடிப்படையில் நாம் பார்ப்போமானால் சிருஷ்டிகளையும், மய்யித்துகளையும், மறைந்தவர்களையும் அழைத்து பிரார்த்தித்து அவற்றிடம் உதவி தேடினால் (அதை அல்லாஹ், ரஸூல் யாருமே கடமை என்றோ, … Continue reading
இது விஷயத்தில் அப்துல் மலிக் பின் ஹாரூன் ரிவாயத்
ஆனால் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் இப்னு அப்பாஸைப் பற்றி ஒரு ஹதீஸை ரிவாயத் செய்கிறார். அதில் இப்னு அப்பாஸ் ‘கைபரில் உள்ள யூதர்கள் கத்பான் கோத்திரத்தாருடன் போராடி யுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இந்த யூதர்கள் கத்பான்களுடன் மோதும் போதெல்லாம் தோல்வி அடைந்து விடுவது வழக்கம். எனவே கீழ்வரும் துஆவைக் கொண்டு யூதர்கள் … Continue reading
ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.
ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.
ஒரே ஸஹாபியின் கூற்று சான்றாகுமா?
ஒரு ஸஹாபியின் குறிப்பிட்ட தனிமையான ஒரு அபிப்பிராயத்தை மார்க்க விதிகளுக்குச் சான்றாக எடுக்கப்படுமா இல்லையா என்பதில் அறிஞர் சிலர் அபிப்பிராய பேதங்களைக் கூறியுள்ளனர். ஸஹாபாக்களில் ஒருவரின் கருத்து குர்ஆன், ஹதீஸ் நேருரைகளுக்கு (நஸ்ஸுக்கு) மாறாக இல்லையென்றால் அது ஆதாரமாகக் கொள்ளப்படும். ஒருவரின் அபிப்பிராயத்தை அனைத்து ஸஹாபாக்களும் புறக்கணிக்காமல் இருக்கின்ற போதும் அது சான்றுடையதாக மதிக்கப்படும். இதற்கு … Continue reading
பார்வையிழந்த ஸஹாபியைப் பற்றிய ஹதீஸ்
இந்த ஹதீஸை இமாம் திர்மிதியும், நஸாயீயும் அறிவிக்கிறார்கள். ‘நபிகளின் துஆவை வைத்து பிரார்த்தித்தல்’ என்ற இனத்தைச் சார்ந்த ஹதீஸாக இந்த ஹதீஸ் அமைந்திருக்கிறது. கண்பார்வை இழந்த ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து தமக்காகப் பிரார்த்தித்து தமது பார்வையை மீட்டுத்தர அல்லாஹ்வை வேண்டும்படி கேட்டுக்கொண்டார். இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரை நோக்கி ‘நீர் விரும்பினால் … Continue reading
ஆதம் நபியவர்கள் பெருமானாரின் பொருட்டால் வஸீலாத் தேடினார்கள் என்று கூறப்படும் ஹதீஸைப் பற்றி…
ஆதம் (அலை) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள் என்று சொல்லப்படும் இந்த ஹதீஸ் நபிகளைப் பற்றி உமர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. சுவர்க்கத்தில் பிசகிய ஆதம் (அலை) அவர்கள் ‘இறைவா! முஹம்மதின் பொருட்டால் அவரின் உரிமையைக் கொண்டு ஆணையிட்டுக் கேட்கிறேன். நீ என் குற்றங்களை மன்னித்தருள்’ என்றார்களாம். இதற்கு இறைவன் … Continue reading
வஸீலா ஷபாஅத் என்னும் வார்த்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்கள்
வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் … Continue reading