Tag Archives: அனுமதி

கருஞ் சீரக விதை நோய் நிவாரணி.

1430. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘கருஞ்சீரக விதையில் ‘சாவைத்’ தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று கூறினார்கள். புஹாரி : 5688 அபூஹூரைரா (ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on கருஞ் சீரக விதை நோய் நிவாரணி.

கண் திருஷ்டிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.

1418. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி ‘கட்டளையிட்டார்கள். புஹாரி : 5738 ஆயிஷா(ரலி). 1419. நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது” என்று கூறினார்கள். … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on கண் திருஷ்டிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.

விஷக்கடிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.

1416. ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறினார்கள். புஹாரி : 5741 அல் அஸ்வத் (ரலி). 1417. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்கும்போது ‘பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா வரீகத்து பஅளினா யுஷ்ஃபா … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on விஷக்கடிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.

ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி….

1407. என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த ‘அலி’, (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், ‘அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி….

ஒருவரின் வீட்டுக்குள் நுழையும் முன்பு அனுமதி கோருதல்.

1391. நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூ மூஸா (ரலி) அவர்கள் வந்து, ‘நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on ஒருவரின் வீட்டுக்குள் நுழையும் முன்பு அனுமதி கோருதல்.

போதை தரும் பானங்கள் பற்றி…

குடி பானங்கள் 1292. பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on போதை தரும் பானங்கள் பற்றி…

கால்நடை உரிமையாளர் அனுமதியின்றி பால்கறக்காதே.

1125. ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரின் சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரின் உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரின் உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? இவ்வாறே, அவர்களின் (கால்நடை உரிமையாளர்களின்) கால் நடைகளுடைய மடிகள் அவர்களின் உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. எனவே, எவரும் … Continue reading →

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on கால்நடை உரிமையாளர் அனுமதியின்றி பால்கறக்காதே.

55.மரண சாசனங்கள்

பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2738 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து அம்ர் … Continue reading →

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 55.மரண சாசனங்கள்

47.கூட்டுச் சேருதல்

பாகம் 3, அத்தியாயம் 47, எண் 2483 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அந்தப் படையினருக்கு அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களைத் தளபதியாக ஆக்கினார்கள். அவர்கள் (படையினர்) முந்நூறு பேர் இருந்தனர். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். நாங்கள் புறப்பட்டோம். பாதி வழியிலேயே எங்கள் கையிருப்பில் … Continue reading →

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 47.கூட்டுச் சேருதல்

45.கண்டெடுக்கப்பட்ட பொருள்

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2426 உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். … Continue reading →

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 45.கண்டெடுக்கப்பட்ட பொருள்