3.கல்வியின் சிறப்பு

பாகம் 1, அத்தியாயம் 3, எண் 57

‘நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்”ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 3, எண் 58

(முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்’ என்றார்.

பின்னர் தொடர்ந்து, ‘(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்’ என்றார். மேலும், ‘நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று ‘இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்’ என்றேன். அப்போது அவர்கள், ‘முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்’ என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதி மொழி கொடுத்தேன். இந்தப் பள்ளி வாசலுக்கு உரியவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன்’ என்றார்.

பின்னர் பாவமன்னிப்புத் தேடியவர்களாக (மேடையைவிட்டு) இறங்கினார்கள்” ஜியாத் இப்னு இலாகா அறிவித்தார். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 3.கல்வியின் சிறப்பு

சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே!

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே! ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். 49:11

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும், உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேச வேண்டாம். 49:12

நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். 13:22

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 23:3

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள் தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள். மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால், ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். 25:63

அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து: ‘எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை’ என்று கூறுவார்கள். 28:55

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தி உடையவர்களுக்கே மேலான முடிவு உண்டு. 28:83

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: ‘நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?’ 41:33

நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்குமிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். 41:34

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே!

2.ஈமான் எனும் இறைநம்பிக்கை

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 8

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 9

‘ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 1, அத்தியாயம் 2, எண் 10

‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 2.ஈமான் எனும் இறைநம்பிக்கை

1. இறைச்செய்தியின் ஆரம்பம்

பாகம் 1, அத்தியாயம் 1, எண் 1

‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 1. இறைச்செய்தியின் ஆரம்பம்

ஸஹீஹுல் புகாரி நபிமொழித் தொகுப்பு – நூல் அறிமுகம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

ஸஹீஹுல் புகாரி என்றழைக்கப்படும் இந்த நபிமொழித் தொகுப்பில், சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள, சொல், செயல் ஆகியவற்றின் தொகுப்பையே ‘ஹதீஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்தவரான இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் பெரும் முயற்சியின் காரணமாகத் தொகுக்கப்பட்டதே, இந்த நபி மொழித் தொகுப்பாகும். ஒவ்வொரு நபிமொழியும் மிகக் கவனத்துடன் குர்ஆனுடன் ஒப்பிடப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்பே தொகுக்கப்பட்டுள்ளது. ஸஹீஹுல் புகாரீ என்ற இந்த நபி மொழித் தொகுப்பானது, நபிமொழித் தொகுப்பு நூல்களிலேயே மிகவும் நம்பகத் தன்மை கொண்டதாகவும், மார்க்க அறிஞர் பெருமக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதும் இதன் தனிச்சிறப்பாகும். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , | Comments Off on ஸஹீஹுல் புகாரி நபிமொழித் தொகுப்பு – நூல் அறிமுகம்

எனக்கு பிடித்த கவிதைப் பற்றி…

பர்தாவைப் பற்றி பத்தாம்பசலி தனமாக பேசுகின்றவர்களுக்கு சகோதரி ஜெஸிலா அவர்களின் அனுபவம் கவிதை நடையில் சாட்டையடியாக சுழல்கிறது.கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய் கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?
கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?”
விபச்சார பார்வை பார்க்கும் ஆண்களுக்கு ஏதோ ஒன்றால் அடித்தது போலான வார்த்தை பிரயோகம்.

“வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும் உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும் குட்டை பாவடையும் கட்டி இறுக்கும் மேலாடையும் கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்” ஒரு இஸ்லாமியப் பெண்ணின் உறுதி இவ்வரிகளில் எதிரொலிப்பதால் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதையாகி போனது. Continue reading

Posted in இஸ்லாமியப் பெண் | Comments Off on எனக்கு பிடித்த கவிதைப் பற்றி…

தானம் செய்பவன், கஞ்சனின் உதாரணம்.

600.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செலவே செய்யாத) கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் (பின்வருமாறு) உதாரணம் கூறினார்கள்: அவர்களின் நிலையானது, இரும்பாலான நீளங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவர்களின் கைகள் அவர்களின் மார்புபகுதி கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்பவர், ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரின் நீளங்கி விரிந்து, விரல் நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரின் பாதச் சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ அவனுடைய நீளங்கி அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் மற்றதின் இடத்தைப் பிடித்துவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5797 அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தானம் செய்பவன், கஞ்சனின் உதாரணம்.

தானங்களில் சிறந்தது.

599.பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகிற ஒட்டகம் தான் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அதிகப் பால்தரும் ஆடும் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 2629 அபூஹுரைரா (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on தானங்களில் சிறந்தது.

உழைத்து தானம் செய்தல்.

598.தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப் (ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டு வந்தார். இதைக்கண்ட நயவஞ்சகர்கள், ‘(அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டு வந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக்கொண்டு வந்திருக்கிறார்” என்று (குறை) கூறினார்கள். அப்போதுதான் ‘(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காக) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கிறான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு” எனும் (திருக்குர்ஆன் 09:79 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

புஹாரி :4668 அபூமஸ்வூத் (ரலி)
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , | Comments Off on உழைத்து தானம் செய்தல்.

சக முஸ்லிம் வலைப்பதிவர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

பிஸ்மில்லாஹ்!
 

அன்பின் மார்க்க சகோதரர்களுக்கு…

இறைவனை, அவனுடைய தூதரை, மறுமையை, இன்னும் பல மறைவானவற்றை நம்ப மறுக்கும் நம்பிக்கையற்றவர்கள் (காஃபிர்கள்) செய்கின்ற இவ்வுலக காரியங்கள் யாவும் இவ்வுலக பயனை மட்டுமே கருத்தில் கொண்டதாகும். அதனால் இரு சமுதாயங்களுக்கிடையே துவேசத்தை தூண்டி அதில் குளிர்காயும் கேடுகெட்ட மனிதர்கள் இணையம் என்னும் இந்த அதியற்புத மீடியாவையும் விட்டுவைக்கவில்லை. நிச்சயமாக முஸ்லிமாகிய நமக்கு இதுவும் ஒரு சோதனையே! உணர்ச்சி பிழம்பான இந்த விஷயத்தில் ஒரு இஸ்லாமியன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பது மிக முக்கியமான விஷயமாகும். இவ்வுலக பயனை கருத்தில் கொண்ட இறைவனைப் பற்றிய நம்பிக்கையற்ற எதிர்தரப்பார் எடுத்து வைக்கும் வாதங்களை ஒரு முஸ்லிம் தான் இஸ்லாம் எனும் வட்டவரைக்குள் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை முதலில் நினைவில் கொண்டு பிறகு அவர்களுக்கு பதிலுரைப்பதே அழகானதாகும். ஆனால் நம்பிக்கையற்றவர்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாக இஸ்லாம் என்ற வட்டவரையை விட்டு வெளியேறி பதிலளிப்பது முஸ்லிமாகிய நமக்குத் தகுமானதோ என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அழகிய விவாத களங்களும், விவாதிப்பதில் மிக அழகிய நேர்மையை கடைப்பிடிக்கும் வலைப்பதிவர்கள் அனேகரை கொண்டுள்ளது தமிழ் இணையம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியே! ஆனால் சக முஸ்லிம் வலைப்பதிவர் தவறிழைத்தாலும், தவறு எங்கு நடந்தாலும் சுட்டிக் காட்டப்பட வேண்டும் என்பதிலும் ஏனோதானோவென்ற நிலை எம்மிடையே காணக் கிடைக்கிறது. இது முஸ்லிமாகிய நம் வழிமுறையல்லவே.  Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on சக முஸ்லிம் வலைப்பதிவர்களுக்கு!