எனக்கு பிடித்த கவிதைப் பற்றி…

பர்தாவைப் பற்றி பத்தாம்பசலி தனமாக பேசுகின்றவர்களுக்கு சகோதரி ஜெஸிலா அவர்களின் அனுபவம் கவிதை நடையில் சாட்டையடியாக சுழல்கிறது.கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய் கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?
கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?”
விபச்சார பார்வை பார்க்கும் ஆண்களுக்கு ஏதோ ஒன்றால் அடித்தது போலான வார்த்தை பிரயோகம்.

“வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும் உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும் குட்டை பாவடையும் கட்டி இறுக்கும் மேலாடையும் கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்” ஒரு இஸ்லாமியப் பெண்ணின் உறுதி இவ்வரிகளில் எதிரொலிப்பதால் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதையாகி போனது.  

சுதந்திரப் பறவை

என்ன பார்க்கிறாய்
என்னை பார்க்கும் போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திர பறவையா?
கட்டுக்கோப்புகுள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணடியாக என் மேனி தெரியாததாலோ?
கறுப்பு முடிகள் மறைந்திருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனகென்று சொந்த குரல்
எனகென்று சுயசிந்தனை இல்லை என்கின்றாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைப்பது – கூண்டு கிளியா?
முடியை மறைப்பது – அநாகரீகமா?
காட்ட மறுப்பது – திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளாக
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
‘சுதந்திரத்தின்’ பொருள் அறியாமலேயே

கவலை, துயரம்
கோபமும், வேதனனயும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

எனக்கு தந்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

பின்னால் பார்க்க அண்டாங்காக்கா
அடையாளம் கண்டால்
நான் அறிவின் ஊற்று

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும் போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டை பாவடையும் கட்டி இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே ‘ஹிஜாப்’
அபயத்தை அளிக்கும் கவசமே ‘அபாயா’
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

-மார்க்க சகோதரி ஜெஸிலா

http://jazeela.blogspot.com/2006/04/blog-post_08.html

This entry was posted in இஸ்லாமியப் பெண். Bookmark the permalink.

0 Responses to எனக்கு பிடித்த கவிதைப் பற்றி…

  1. Muhibb says:

    முஸ்லிம் சகோதரிகள் அனைவரும் பெண்ணடிமைத்தனத்தில் மாட்டிக்கொண்டு, ஆடை அணியக்கூட சுதந்திரமின்றி இஸ்லாமிய மதத்தில் ஆடவர்களின் கொத்தடிமையாய் வா௯ழ்ந்துக்கொண்டிருக்கும் கோடான கோடி பெண்களைக் கண்டு மனம் நோகிறேன் என்று நீலிக்கண்ணீர் வடிப்பவர்களுக்கு சரியான சாட்டையடி,ஜெஸிலாவின் கடைசி இருவரிகள்.

  2. சகோதரி ஜெஸிலாவின் கடைசி 4 வரிகள் அற்புதம். வாழ்த்துக்கள்.
    குலசை சுல்தான்