22.தொழுகையில் ஏற்படும் மறதி

பாகம் 2, அத்தியாயம் 22, எண் 1224

அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 22, எண் 1225

அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். லுஹ்ர் தொழுகை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். அதன்பின்னர் ஸலாம் கொடுத்தார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on 22.தொழுகையில் ஏற்படும் மறதி

21.தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

பாகம் 2, அத்தியாயம் 21, எண் 1198

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் என் சிறிய தாயார் மைமூனா(ரலி)யின் வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலப்பகுதியில் படுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவி (மைமூனா)வும் அந்தத் தலையணையின் நீளப்பகுதியில் படுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். தம் கையால் தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தை விலக்கிவிட்டு ‘ஆல இம்ரான்’ அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். பிறகு தொங்க விடப்பட்ட தோல் பாத்திரத்தை நோக்கிச் சென்று அதிலிருந்து அழகிய முறையில் உளூச் செய்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போன்றே செய்து, அவர்களின் (இடது) விலாப் புறத்தில் நின்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலது கரத்தை என் தலைமீது வைத்து என்னுடைய வலது காதைப் பிடித்து (வலது புறத்திற்கு) திருப்பினார்கள். இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள் மேலும் இரண்டு ரக்அத்கள் இன்னும் இரண்டு ரக்அத்கள், பிறகு இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வித்ரு தொழுதுவிட்டுப்படுத்தார்கள். முஅத்தின் வந்ததும் எழுந்து சிறிய அளவில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (பள்ளிக்குப்) புறப்பட்டு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 21, எண் 1199

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஆரம்ப காலத்தில்) நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஸினியாவின் மன்னர்) நஜ்ஜாஷியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். எங்களுக்கு ஸலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) ‘நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன” என்று கூறினார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 21.தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

20.மக்கா மதினாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதின் சிறப்பு

பாகம் 1, அத்தியாயம் 20, எண் 1188

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளை கேட்டேன். (1197வது ஹதீஸில் இது விவரமாகக் கூறப்படுவதைக் காண்க)

பாகம் 1, அத்தியாயம் 20, எண் 1189

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , | Comments Off on 20.மக்கா மதினாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதின் சிறப்பு

19.தஹஜ்ஜுத்

பாகம் 1, அத்தியாயம் 19, எண் 1120

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் ‘இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பம்ரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நமை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை’ என்று கூறிவார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 19.தஹஜ்ஜுத்

18.கஸ்ருத் தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 18, எண் 1080

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்வோம். (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம்.

பாகம் 1, அத்தியாயம் 18, எண் 1081

யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அறிவித்தார். ‘நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பும் வரை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்’ என்று அனஸ்(ரலி) கூறியபோது நீங்கள் மக்காவில் எவ்வளவு நாள்கள் தங்கினீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘பத்து நாள்கள் தங்கினோம்’ என்று விடையளித்தார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 18.கஸ்ருத் தொழுகை

17.குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1067

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் காபிராகக் கொல்லப் பட்டதை பார்த்தேன்.

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1068

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் என்ற ஸஜ்தா அத்தியாயத்தையும் ஹல்அத்தா அலல் இன்ஸான் என்ற அத்தியாயத்தையும் ஓதினார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , | Comments Off on 17.குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்

16.கிரகணங்கள்

பாகம் 1, அத்தியாயம் 16, எண் 1040

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தோம். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 16, எண் 1041

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்.”என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 16.கிரகணங்கள்

15.மழை வேண்டுதல்

பாகம் 1,அத்தியாயம் 15, எண் 1005

அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.

பாகம் 1,அத்தியாயம் 15, எண் 1006

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கடைசி ரக்அத்தின் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் ‘இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று; இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்று. இறைவா! நம்பிக்கையாளர்களில் பலவீனர்களைக் காப்பாற்று. இறைவா! முழர் கூட்டத்தினர் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! இவர்களுக்கு யூஸுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போல் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுபவர்களாக இருந்தனர். மேலும் ‘கிஃபார் கூட்டத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! அஸ்லம் கூட்டத்தை அல்லாஹ் காப்பாற்றுவானாக! என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். இது ஸுப்ஹுத் தொழுகையில் நடந்ததாகும் என அபூ ஸீனாத் கூறுகிறார். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 15.மழை வேண்டுதல்

14.வித்ரு தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 14, எண் 990

இப்னு உமர்(ரலி) அறிவித்தார் :ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 14, எண் 991

நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளையிடுவார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 14.வித்ரு தொழுகை

13.இரு பெருநாட்கள்

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 948

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும் தூதுக்குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்கள்.

இதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இது (மறுமைப்)பேறு அற்றவர்களின் ஆடையாகும்’ எனக் கூறினார்கள். சிறிது காலம் கடந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை எடுத்துக் கொண்டு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இது (மறுமைப்) பேறு பெறாதவர்களின் ஆடை எனக் கூறிவிட்டு இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதை நீர் விற்றுக் கொள்ளும்! அல்லது இதன் மூலம் உம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும்!” என்று கூறினார்கள்.

பாகம் 1, அத்தியாயம் 13, எண் 949

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘புஆஸ்’ (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து ‘நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?’ என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி ‘அவ்விருவரையும் விட்டு விடுங்கள்” என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும வெளியேறிவிட்டனர். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 13.இரு பெருநாட்கள்