31.தராவீஹ் தொழுகை

பாகம் 2, அத்தியாயம் 31, எண் 2008-2009

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள். “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையைய் எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

“(ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது!” என்று இமாம் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , | Comments Off on 31.தராவீஹ் தொழுகை

30.நோன்பு

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1891

தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!” என்று பதிலளித்தார்கள். அவர் ‘அல்லாஹ் என் மீது கடமையாக்கிய ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், ‘சத்தியத்தின் வாயிலாக உங்களை கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நான் உபரியாக எதையும் செய்ய மாட்டேன்; அல்லாஹ் என் மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும் மாட்டேன்!” என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். ‘இவர் கூறுவது உண்மையானால் வெற்றி பெற்றுவிட்டார்!” என்றோ ‘இவர் கூறுவது உண்மையானால் இவர் சொர்க்கத்தில் நுழைவார்!” என்றோ கூறினார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 30.நோன்பு

29.மதீனாவின் சிறப்புகள்

பாகம் 2, அத்தியாயம் 29, எண் 1867

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வின்.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 29, எண் 1868

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்” ‘பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) எனக்கு விலைக்குத் தாருங்கள்!” என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் ‘இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!” என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணை வைப்பவர்களின் கப்ருகளைத் தோண்டுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர் செய்யப்பட்டன் பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன் பள்ளிவாசலின் கிப்லா திசையில் (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித்தோழர்கள்) நட்டனர். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on 29.மதீனாவின் சிறப்புகள்

அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாத பொருளாதாரத்தின் இறுதி நிலைபற்றி குர்ஆனின் வசனம் எது?

கேள்வி எண்: 35. “யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (ஜகாத் கொடுக்காது) நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்” என்ற திருமறையின் வசனங்கள் எது?

பதில்: அத்தியாயம்-9 வசனம்-34 மற்றும் 35

Posted in கேள்வி பதில் | Comments Off on அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாத பொருளாதாரத்தின் இறுதி நிலைபற்றி குர்ஆனின் வசனம் எது?

28.(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்

பாகம் 2, அத்தியாயம் 28, எண் 1821

அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி(ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர்.

“அப்போது நான் என் முன்னே ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு, அதைத் தாக்கி ஈட்டியால் குத்திப் பிடித்தேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் மாமிசத்தை நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோமோ என்று அஞ்சினோம். நபி(ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூ கிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, ‘நபி(ஸல்) அவர்களை எங்கேவிட்டு வந்தீர்?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘அவர்கள் ‘சுக்யா’ எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணிருந்த வேளையில், ‘தஃஹின்’ எனும் இடத்தில் அவர்களைவிட்டு வந்தேன்!” என்றார். (நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து), ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களின் மீது ஸலாம் (இறை சாந்தி) மற்றும் இறைகருணை பொழிந்திடப் பிரார்த்திக்கிறார்கள்! உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்! எனவே (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்! இறைத்தூதர் அவர்களே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன். அதில் சிறிதளவு என்னிடம் மீதம் உள்ளது!” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் ‘உண்ணுங்கள்!” என்றார்கள். (அப்போது) மக்கள் அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 28.(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்

27.(ஹஜ் செய்வதிலிருந்து) தடுக்கப்படுதல்

பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1806

நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக மக்கவிற்குப் புறப்பட்டார்கள். ‘நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட போது) செய்தது போல் செய்வேன்!” என்று கூறிவிட்டு உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததே இதற்குக் காரணமாகும்.  Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on 27.(ஹஜ் செய்வதிலிருந்து) தடுக்கப்படுதல்

26.உம்ரா

பாகம் 2, அத்தியாயம் 26, எண் 1773

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 26, எண் 1774

இப்னு ஜுரைஜ் அறிவித்தார். இக்ரிமா இப்னு காலித் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டதற்குவர் ‘குற்றமில்லை’ என்றார்.

மேலும், ‘நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன் உம்ராச் செய்தார்கள்’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என்றும் இக்ரிமா கூறுகிறார். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , | Comments Off on 26.உம்ரா

25.ஹஜ்

பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1529

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்கவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1527

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “மதீனா வாசிகள் துல்ஹுலை ஃபாவிலிருந்தும் ஷாம் வாசிகள் மஹ்யஆ எனும் ஜுஹ்ஃபாவிலிருந்தும் நஜ்த் வாசிகள் கர்னிலிருந்தும் இஹ்ராம் அணிவார்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

“யமன் வாசிகள் யலம்லம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிவார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர்கள் கூறுகிறார்கள்: ஆனால், நான் (நேரடியாக) நபி(ஸல்) கூறக் கேட்கவில்லை என இப்னு உமர்(ரலி) கூறினார்.

பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1526

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும்யும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாஸிலையும் யமன் வாசிகளுக்க யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 25.ஹஜ்

24.ஸகாத்தின் சட்டங்கள்

பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1395

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1396

அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. ‘என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்’ எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) ‘இவருக்கென்ன (ஆயிற்று)? என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!” (என்று கூறிவிட்டு அவரிடம்.) ‘நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்: அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது: தொழுகையை நிலை நாட்ட வேண்டும்: ஸகாத் வழங்க வேண்டும்: உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்” என்று கூறினார்கள். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 24.ஸகாத்தின் சட்டங்கள்

23.ஜனாஸாவின் சட்டங்கள்

பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1237

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “என்னுடைய இரட்கனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு செய்தியை ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது என்னுடைய சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கிறவர் சொர்க்கத்தில நுழைவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் ‘அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?’ எனக் கேட்டேன். ‘அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான் என அவர்கள் கூறினார்கள்” என அபூதர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1238

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்து விட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்” என நான் கூறுகிறேன். Continue reading

Posted in புகாரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on 23.ஜனாஸாவின் சட்டங்கள்