கேள்வி எண்: 46. யாகூப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தம் குமாரர்களுக்கு செய்த வஸிய்யத் (உபதேசம்) என்ன?
பதில்: “இன்னும் அவரிடம் அவருடைய இறைவன் ‘(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்’ என்று சொன்னபோது அவர், ‘அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்’ என்று கூறினார். இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார். யஃகூபும் (இவ்வாறே செய்தார்) அவர் கூறினார்: ‘என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்கு சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.’ யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் ‘எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?’ எனக் கேட்டதற்கு ‘உங்கள் நாயனை – உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை – ஒரே நாயனையே வணங்குவோம். அவனுக்கே முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்’ எனக் கூறினர்” (அல்குர்ஆன்: 2: 131-133)