கேள்வி எண்: 31. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலத்தையும், மற்றும் ஹனபி மத்ஹபின் சட்டவிளக்க நூல்களான துர்ருல் முக்தார், ஃபதாவா ஆலம்கீரி, கன்ஜுத் தகாயிக், ஹிதாயா போன்றவைகள் எழுதப்பட்ட காலத்தையும், அந்த நூல்களுடைய ஆசிரியர்களின் பெயர்களையும் கூறுக.
பதில்: இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் வாழ்க்கை குறிப்பு:
பிறந்த வருடம் |
ஹிஜ்ரி 80 |
பிறந்த இடம் |
கூபா, இராக் |
இறந்த வருடம் |
ஹிஜ்ரி 150 |
இறந்த இடம் |
பாக்தாத், இராக் |
குறிப்பு | இவர் ஒரு தாபிஈ மற்றும் பிக்ஹ் கலையில் சிறந்த அறிஞர். |
ஹனபி மத்ஹப்களின் சட்டவிளக்க நூல்களைப் பற்றிய குறிப்புகள்:
1. நூல் |
துர்ருல் முக்தார் |
ஆசிரியர் பெயர் | முஹம்மது அலாவுதீன் ஹஸ்காபி |
பிறந்த வருடம் | ஹிஜ்ரி 1025 |
இறந்த வருடம் | ஹிஜ்ரி 1088 |
இமாம் அபூஹனீபாவிற்கும், இந்நூலின் ஆசிரியருக்கும்இடைப்பட்ட காலம் 900 ஆண்டுகள்.
2. நூல் |
பதாவா ஆலம்கீரி |
ஆசிரியரின் பெயர் | முகலாய மன்னர் அவ்ரங்கசீப் காலத்து உலமாக்கள். |
எழுதப்பட்ட காலம் | ஹிஜ்ரி 1118 |
இமாம் அபூஹனீபாவிற்கும், இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 975 ஆண்டுகள்.
3. நூல் |
கன்ஜுத் தகாயிக் |
ஆசிரியரின் பெயர் | அபுல் பரக்கத் அன்னாசாபி |
இறந்த வருடம் | ஹிஜ்ரி 710 |
இமாம் அபூஹனீபாவிற்கும், இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 560 ஆண்டுகள்
4. நூல் |
ஹிதாயா |
ஆசிரியரின் பெயர் | அலி பின் அபீபக்கர் |
பிறந்த வருடம் | ஹிஜ்ரி 511 |
இறந்த வருடம் | ஹிஜ்ரி 593 |
இமாம் அபூஹனீபாவிற்கும், இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்.
சிறு விளக்கம்: அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய பெயரால் “ஹனஃபி மத்ஹப் நூல்கள்” என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி, இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். ஹனபி மத்ஹபின் சட்டவிளக்க ஞானக் கடல்கள் என மத்ரஸாக்களில் வைத்து மாணவர்களுக்குப் போதிக்கப்படும் இவைகளில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறையவே இருக்கின்றன. அல்லாஹ்வின் தெளிவான வசனங்களையும், நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் விட்டுவிட்டு மனிதர்கள் தம் கரங்களால் எழுதியவைகளை மார்க்கத் தீர்ப்புகள் என நம்பி செயல்படுபவர்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் பற்றி சிந்திக்க கடைமைப் பட்டுள்ளார்கள்.
(குறிப்பு: இதுபற்றிய மேலதிக விளக்கம் பெற விரும்புபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரிகளில் இருக்கும் மத்ஹப்
பற்றிய ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், அவைகள் எவ்வாறு குர்ஆன் மற்றும் ஹதீஸ்களோடு நேரடியாகவே மோதுகின்றது என்பதையும் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இணைய தளங்கள்:- (Web Sites)
www.irf.net (Dr Zakir Naik’s Islamic Research Foundation)