உலக முஸ்லிம்கள் நோக்கும் ஒரே இடம்!

“ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு
திசையுண்டு; அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக
உள்ளனர். நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்;
நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும்
ஒன்று சேர்ப்பான் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப்
பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்”
(2:148)

“ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்
(தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின்
பக்கமே திருப்பிக் கொள்வீராக! நிச்சயமாக இதுதான் உம்
இறைவனிடமிருந்து வந்த உண்மை – அல்லாஹ் நீங்கள்
செய்பவை பற்றிப் பாராமுகமாக இல்லை” (2:149)

“ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும்
(தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின்
பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில்
அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன்
வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு,
நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே
உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே
அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும்,
என்னுடைய நிஃமத்களை (அருட் கொடைகளை) உங்கள் மீது
முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப்
பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்.)
(2:150)

This entry was posted in படத்தொகுப்புகள். Bookmark the permalink.