338– நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஒதிக் காட்டும் போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைரும் ஸஜ்தாச் செய்வோம்.
339– இப்னு மஸ்வூத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஒதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தமது நெற்றிக்குக்கொண்டு சென்று இவ்வாறு செய்வது எனக்குப் போதும் என்று கூறினார். பின்னர் அவர் காபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.
340– ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியத்தை ஒதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.
341– அபூஹூரைரா (ரலி)வுடன் நான் இஷாத்தொழுதபோது ‘இதஸ்ஸமாவும் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஒதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்டபோது நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கிறேன். (மறுமையில்) அவர்களை சந்திக்கும்வரை (அதாவது மரணிக்கும்வரை) நான் அதை ஒதி ஸஜ்தாச் செய்து கொண்டுதான் இருப்பேன். என்று கூறினார்கள்.