கேள்வி எண்: 15. இறைவன் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதோடு அல்லாமல் இவை இரண்டிற்கும் இடைப்பட்டதையும் (பல வாயுக்களை உள்ளடக்கிய காற்று மண்டலத்தையும்) படைத்திருப்பதாகக் கூறும் வசனங்கள் இரண்டைக் கூறுக.?
பதில்: “அவன் பெரும் பாக்கியம் உடையவன்: வானங்கள், பூமி இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆட்சி அவனுக்குடையதே. அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கின்றது. மேலும் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” (அல்குர்ஆன்: 43:85)
“நீங்கள் உறுதியுடையவர்களாக இருப்பின் வானங்கள், பூமி இவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்)” (அல்குர்ஆன்: 46:3)
இதைப்போல இன்னும் பல வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். பார்க்கவும்: 78:7, 26:24, 37:5, 38:10, 38:27, 38:66.