எவனொருவன் மேலே கூறப்பட்ட மூன்று வகையான ஷிர்க்குகளை விட்டு நீங்கி, அல்லாஹ்வை, வணக்கத்திலும் துஆவிலும், அவனுடைய ஸிபத்துகளிலும் ஒருமை (தனிமை)ப்படுத்துகிறானோ, அவன்தான் ஏகத்துவவாதிக்குரிய எல்லாவித சிறப்புகளையும் அடைந்தவனாவான். ஷிர்க்கான அவற்றில் ஒன்றையேனும் அவனும் நம்புவானென்றால் அவன் ஏகத்துவவாதியாக மாட்டான். பின்வரும் அல்குர்ஆன் வசனம் அதுபற்றிக் கூறுகின்றது.
“அவர்கள் இணைவைத்தாலோ, அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் யாவும் அவர்களை விட்டு அழிந்து விடும்” (6:88)
ஷிர்க்கு வைத்தவன் தௌபாச்செய்து அல்லாஹ்வுடன் இணையாக்கப்பட்டதை விட்டு முற்றாக விலகி விடுவானென்றால் அவன் ஏகத்துவவாதியாகி விடுகிறான். அல்லாஹ்வே! எங்களை ஏகத்துவவாதிகளாக ஆக்கிவிடுவாயாக! ஷிர்க்கு வைப்பவர்களாக ஆக்கிவிடாதே!
இன்ஷா அல்லாஹ் தொடரும்.