கூத்தாநல்லூரில் கந்தூரி விழா!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

pp-kanthoori

‘தமிழகத்தில் என்பதுகளுக்கு முன்னிருந்த நிலைமாறி ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது’ என்று நமக்கு நாமே கூறிக்கொள்கிறோம்! ஆனால்,’நீங்கள் எது வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள், நாங்கள் எங்களின் குல தெய்வமான குல அவுலியாவைப் போற்றிப் புகழ்ந்து அவர்களுக்கு பாமாலைகள் பாடி அவர்களை கவுரவித்து அவர்களுக்கு படையல் (சீரணி) படைத்து அவர்களிடம் எங்களின் தேவைகளைக் கேட்டு பெற்று வாழ்வில் சுபிட்சம் பெறுவோம்’ – இப்படி இறைவனுக்கு தொடர்ந்து இணைவைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு கூட்டம்.

ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாது விழா என்ற பெயரில் நடைபெற்ற அநாச்சாரத்திற்குப் பிறகு அதற்கு அடுத்து வந்த மாதத்தில் முஹையத்தீன் மாநாடு என்ற பெயரில் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயர்களில் கட்டுக்கதைகளை அள்ளிவிட்டனர். தற்போது சென்ற மாதத்தில் விடுபட்ட கட்டுக்கதைகளை அரங்கேற்றுவதற்காக இரண்டு மதராஸாக்களின் முதல்வர்களின் தலைமையில் மற்றுமொரு கந்தூரி விழா!

இந்த கந்தூரி விழா என்ற பெயரிலே இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டுவைக்கும் நம்பிக்கைகளையுடைய கட்டுக்கதைகளை ஏழு வருடங்கள் மதரஸாக்களில் கல்வி பயிலும் வருங்கால உலமாக்களுக்கு மார்க்க கல்வியைப் போதிக்கும் மௌலானா மௌலவிகளே, ஷைகுல் பலக்குகளே கட்டவிழ்த்து விடுவது தான் வேதனையாக இருக்கின்றது. அவர்களுக்கு சத்தியம் இதுதான் என்று தெரியும். இருந்தும் உண்மையைச் சொன்னால் எங்கே தம் பிழைப்புக்கு பொல்லாப்பு ஆகிவிடுமே என்ற அச்சத்தினால் மார்க்கத்தின் பெயராலேயே பொய் கூற துணிந்து விட்டனர்.

அப்துல் காதிர் ஜீலானியின் (ரஹ்) வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நிகழ்ச்சிகளின் இறுதியில் இவர்களால் பயபக்தியுடன் ஓதப்படும் முஹையதீன் மவ்லூது மற்றும் யாகுத்பா போன்ற பாடல்களில் அப்துல் காதிர் ஜீலானியை (ரஹ்) இறைவனுக்கு நிகராக சித்தரித்து இணை வைக்கும் மாபாதக செயல்களைச் செய்கின்றனர்.இவர்களால் பயபக்தியுடன் ஓதப்படும் யாகுத்பா என்ற பாடலை ஒருவர் நம்பிக்கையுடன் பாடினால் அவரை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும் அளவிற்கு ஷிர்க் நிறைந்தது தான் இந்த யாகுத்பா என்ற நச்சுக்கவிதை! இந்த மௌலானா மௌலவிகள் பயபக்தியுடன் பாடும் இந்த யாகுத்பா பாடலின் சில வரிகளைப் பார்ப்போம்!

வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களுக்கு முஹ்யித்தீன் தான் குத்பு!!!!

வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே!

எதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவர் முஹ்யித்தீன்!

(அப்துல் காதிர் ஜீலானி அவர்களே!) நீங்கள் விரும்பிய அத்தனை ஆற்றலையும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கிவிட்டான். எனவே தாங்கள் அவனது படைப்புகளில் எதனையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவராயும் அவர்களின் கீழ்படிதலுக்கு உரியவராயுமிருக்கிறீர்கள்.

முஹ்யித்தீனைக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு அருள்???

கவ்ஸுல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அருள் புரிவானாக!

முஹ்யித்தீன் மகத்தான இரட்சகராம்!!!

எல்லா காலங்களிலும் நேரங்களிலும் (எங்களைக்) காப்பாற்றும் மகத்தான இரட்சகரே!

(அல்லாஹ்வுக்கும், உங்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை) நீங்கள் செவியுற்றுக் கொண்டு இருக்கும்போதே காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றியவராகிவிடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கிறீர்! என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது; முஹ்யித்தின் அவர்களே! (இறைவனாலேயே மகத்தான இரட்சகரே என்று அழைக்கப்பட்டதன் மூலம் நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைத்தான் சூட்டப்பட்டு விட்டீர்கள்!

ஆயிரம் தடவை அழைத்தால் ஓடோடி வரும் முஹ்யித்தீன்!!!

எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும் தனது உறக்கத்தைக் களைந்தவராகவும் உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்! எனவே ஓ!அப்துல்காதிர் முஹ்யித்தீனே! என்று அவர் (என்னை) அழைக்கட்டும் (என்று தாங்கள் கூறினீர்கள்)

வழிகாட்டும் முஹ்யித்தீன்!!!

யாருக்கு ஷைகு கிடையாதோ அவருக்கு நான் ஷைகாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறேன்! எந்த அளவுக்கு என்றால் அவன் தனிமையில் இருக்கும் போது நான் உற்ற நண்பனாக இருக்கிறேன்! எனக்கும் அவனுக்குமிடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கூறினீர்கள் எனக்கும் அவ்வாறே நீங்கள் ஆகிவிடுங்கள் முஹ்யித்தீனே!

மார்க்கத்தை நிலை நிறுத்தக் கூடியவர் முஹ்யித்தீன்!!!

நன்மையான எல்லாசெற்களுக்கும் நீங்களே எனக்கு கலீபாவாக இருந்து கொள்ளுங்கள்! என் சமுதாயத்துக்கு நீங்கள் உதவியாளராக ஆகிவிடுங்கள்! அறிவுடையேர் உங்களைப் பொருந்திக் கொண்டனர் முஹ்யித்தீனே! நீங்கள் தான் என் மார்க்கத்தை நிலை நிறுத்தக் கூடியவர் என்று எனது பாட்டனார் நபி(ஸல்) அவர்கள் சொல்பவர்களாக இருந்தனர்.

இரட்சகர்! உதவி செய்பவர்!

என் தலைவரே! என் ஊன்று கோலே! என் இரட்சகரே! எனக்கு உதவுபவரே! என் எதிரிகளுக்கு பாதகமாக எனக்கு உதவுபவராக நீங்கள் ஆகிவிடுங்கள்! என் கௌரவத்தைக் காப்பவராகவும் ஆகிவிடுங்கள்! காலாகாலம் என்கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குப் பகரமாக எங்களிடம் இருக்கும்! முஹ்யித்தீனே!

தலைவர்களிலெல்லாம் தலைசிறந்த முஹ்யித்தீனே!

உங்களின் தெளிவான பாட்டையை நாடும் (முரீதுகளில்) ஒருவனாக என்னையும் கருதிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு என்றென்றும் கட்டுப்பட்டு நடக்கும் உங்கள் அடியார்களில் ஒருவனாகவும் என்னைக் கருதிக் கொள்ளுங்கள்! உங்களின் போர்ப்படையில் முன்னனி வகிப்பவனாகவும் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! தலைவர்களிலெல்லாம் தலைசிறந்த முஹ்யித்தீனே!

நேர்வழி காட்டும் முஹ்யித்தீன்!

நீங்கள் நடந்து சென்ற நேரான வழியை என் உள்ளத்துக்கு காட்டிவிடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான். நீங்கள் அந்த துறைக்கு சொந்தக்காரராக உள்ளீர்கள்! கொளுந்து விடடெறியுயம் நெருப்பிலிருந்து காத்து விடுங்கள்! அனைத்து வலிமார்களுக்கும் மன்னரே! முஹ்யித்தீனே!

என்றென்றும் நிலைத்திருக்கும் முஹ்யித்தீனின் கை!

எனது இந்தக் கை என்றென்றும் நிலைத்திருக்கும். என் தரீக்காவை நாடுபவர்களுக்கு என் கை துணை நிற்கும். நேர்வழியை நாடும் மக்கள் என் கையால் வெற்றி பெற்று விட்டனர். ‘தீனை உயிர்ப்பித்தவர்’ என்று உண்மையில் அழைக்கப்படுவதற்கு நானே அதிக உரிமை படைத்தவன் என்று தாங்கள் கூறினீர்கள்.

முஹ்யித்தீன் என்ற பெயருக்கான காரணம்!

நேரான வழிகாட்டும் இஸ்லாமிய மார்க்கத்தை மெலிந்த மனிதனின் வடிவில் தாங்கள் கண்டீர்கள்! தங்கள் கைகளால் அவனைத் தாங்கள் தொட்டவுடன் அம்மனிதரிடம் இருந்த நோய் விலகி, அவன் எழுந்து அன்புடன் ‘தீனை உயிர்பித்தவரே!’ என்று தங்களை அழைக்கலானான்.

மக்கத்து முஷ்ரிக்குகளின் நம்பிக்கைகளை விட மிக மோசமான நம்பிக்கைகளையுடைய மற்றும் கராமத்துக்கள் என்ற பெயரில் கட்டுக்கதைகளையுடைய இந்த நச்சுக் கவிதைகளைத் தான் மவ்லூது சரீப் என்ற பெயரிலும் யாகுத்பா என்ற பெயரிலும் இவர்கள் இறையில்லமான பள்ளிவாசலில் வைத்து பாடுகின்றனர். அல்லாஹ்வின் இல்லங்களில் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாரையும் அழைக்க வேண்டாம் என அல்லாஹ் கட்டளையிட்டிருக்க நாங்கள் அல்லாஹ்வுடன் முஹ்யித்தீனையும் அழைப்போம் என்று இவர்கள் செயல்படுகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: –

“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 72:18)

அல்லாஹ் அல்லாதவர்களை  ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்பவர்களைப் பார்த்து இவர்கள் கூறுவது  ‘நீங்கள் வழிகெட்டவர்கள்’ என்று! ஆனால் அல்லாஹ்வோ, அவனது வேதத்தில், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை அழைத்து உதவி தேடும் இவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? எனக் கேட்கிறான்.

“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!….. (அல்குர்அன் 7:194)

“மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)

துன்ப நேரங்களில் ஆபத்து காலங்களில் உதவி செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை!

(துன்பத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டழைத்தால், அவர்களுக்கு பதில் கூறி, அவர்களுடைய துன்பங்களை நீக்கியவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதியாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா?… (அல்குர்அன் 27:62)

யா முஹ்யித்தீன் என்றோ அல்லது யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே! என்றோ அல்லது வேறு எந்த அவுலியாவின் பெயரை அழைத்தவாறே ஒருவர் மரணித்தாரானால் அவரின் இருப்பிடம் நரகமே!

“யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில் மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்” (ஸஹீஹுல் புகாரி)

துன்பங்களை நீக்குபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை!

அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது…. (அல்குர்அன் 10:107)

அல்லாஹ் இணைவைப்பை மன்னிக்கவே மாட்டான்!

(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்அன் 17:23)

“நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்…… (அல்குர்அன் 4:48)

சத்தியமார்க்கமான இஸ்லாம் தெளிவானது. இதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை! அல்லாஹ் அவனது திருமறையில் இணை வைப்பின் பயங்கர விளைவுகளையும் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை அழைத்து உதவி தேடுபவர்கள் எல்லாம் மிகுந்த வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கும்போது அற்ப உலகாதாயத்திற்காக இந்த உண்மையை மூடிமறைத்து அல்லாஹ்வின் பள்ளியிலேயே முஹ்யித்தீனை அழைத்து உதவி தேடுவதற்கு உறுதுணையாக இருக்கும் ஆலிம்களே! அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை மறைப்பவர்களை இறைவன் எச்சரிக்கும் வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும் மறுமையையும் உறுதியாக நம்புபவர்களாக இருந்தால் அல்குர்ஆனின் போதனைகளை மார்க்கமறிய பாமரர்களிடம் மறைத்தற்காக அல்லாஹ்விடம் பதில் கூறவேண்டும் என்பதை நினைவில் இருத்திக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: –

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்” (அல்-குர்ஆன் 2:159)

“சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?” (அல்-குர்ஆன் 3:71)

ஆக்கம்: புர்ஹான்

சவூதி அரேபியா

This entry was posted in ஈமான் (நம்பிக்கை) and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

18 Responses to கூத்தாநல்லூரில் கந்தூரி விழா!

  1. Anvar says:

    Assalamu Alaikkum
    what is happening in Koothanallur is something very serious and those who claim we r in Tawheed are all responsible in front of Allah for this un forgivable act by the so called Ulemas. Shirk Festival is celebrated in Koothanallur, but we are boasting of Tawheed revolution in Tamil Nadu. Surely, if we failed to stop this, we are more sinner than those who organise this functions. According to Islam, we have to stop this even by using force. Now a days koothanallur has become hub for shirk and increasing day by day and there is no sign of decrease. As long as we don’t stop this heinous act, then there is no meaning for tawheed revolution. I hope, Mr. Burhan’s areticle may be an eye opener for atleast few people. But every one of us is collectively responsible to stop this immediately. May Allah show straight path to all of us.
    Wassalam.

  2. sulaiman says:

    இவங்க எப்பதான் திருந்துவாங்கன்னு தெரியல. தேவையில்லாம பணத்தையும், நேரத்தையும் எதுவும் பயனில்லாத விஷயத்தை சுயலாபத்திற்காக மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் அறங்கேற்றிக் கொண்டிருக்கிறாரகள். இவர்களுக்கு பின்னாலும் பல உதவாக்கரைகள் இருப்பதுவும் வேடிக்கையானது. நாம் இறைவனிடம் மட்டும் கேட்போம் இவர்களிடம் மாற்றத்தை தா இறைவா என்று

    சுலை

    • Jafar Ali says:

      இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ்விடமும் கேட்போம். இன்னும் எம்மால் முடியுமானால் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு கையாலும் தடுக்க முயற்சி எடுப்போம். அல்லாஹ்வுக்கு எம் சமூகத்தினராலேயே எம் கண்ணெதிரே இணைவைக்கப்படும் காரியங்கள் அரங்கேற்றப்படும் பொழுது நாம் வாளாவிருந்தால் அல்லாஹ்வின் கட்டளை எனும் வேதனை வரும்பொழுது, வாய்மூடி இருந்த காரணத்தினால் நாமும் அல்லாஹ்வின் தண்டனையில் கூட்டாக்கப்பட்டு அழிக்கப்படுவோமே. அல்லாஹ் காப்பாற்றட்டும்! மனிதர்களில் எவர் ஒருவருக்கும் பயம் கொள்ளாமல், உலகின் ஒரே நாயனாகிய அல்லாஹ்வுக்கு மட்டும் பயம் கொண்டவர்களாக, உண்மையை எத்தகைய மறைத்தல் திரித்தல் இன்றி சமூகத்துக்கு அல்லாஹ் நாடியவரை எடுத்தோதிக் கொண்டே இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக!

  3. hajabadrrudeen says:

    “assalamu alaikum furkhan i saw the one article from knr web site im sunnathul jamaadh but we r not doing sirqh we know about allah and avliyakal we r go to pray for masjidh not durga .u know adham (sal)avl how did ask dua allahumma inna nathvassalu ilaikka fi nabiyina muhammadin sallalagualivassalm”
    meaning ya allah en pavangalai nabi(SAL)avl poruttal manithuvidu endargal this is for (vasila) some one if ask dua directly to avliyakal thats sirqh sunnadh val jammadh it wl b clear for this point

  4. Burhan says:

    அன்பு சகோதரர் ஹாஜா பதுருதீன் அவர்களுக்கு,

    வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.

    தங்களின் சிறந்த கருத்துக்களுக்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாகாவும். முன்னோர்களின் வழிமுறை என்ற பெயரில் மடமையையும் மூடத்தனத்தையும் பின்பற்றி வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற மக்களுக்கிடையில் தங்களைப் போன்ற சிந்திக்கின்ற சகோதரர்கள் இருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாகவும்.

    அடுத்து தங்களின் கருத்துக்களுக்கு சிறிய விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

    //some one if ask dua directly to avliyakal thats sirqh sunnadh val jammadh it wl b clear for this point//

    இறைவனல்லாத வேறு யாரிடமும் நேரடியாகக் கேட்டுப் பெறுவதை ஷிர்க் என்பதை தாங்கள் உணர்ந்திருப்பதாக எழுதியிருந்தீர்கள். அல்ஹம்துலில்லாஹ். நிச்சயமாக இது இறைவனால் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகும்.

    நாம் நமது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் முஹ்யித்தீன் (ரஹ்) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் மவ்லிது மற்றும் புர்தா பாடல்களைப் படிக்கும் போது முஹ்யித்தீன் அவர்களிடம் நேரடியாகக் பிரார்த்திக்கின்ற வகையில் பொருளடங்கிய பாடல்களைப் படிப்பது ஷிர்க் என்று வர்ணித்தோம். தாங்கள் அதை உணர்ந்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    //u know adham (sal)avl how did ask dua allahumma inna nathvassalu ilaikka fi nabiyina muhammadin sallalagualivassalm”

    meaning ya allah en pavangalai nabi(SAL)avl poruttal manithuvidu endargal this is for (vasila)//

    ஆதம் (அலை) அவர்கள் முதலில் தவறு செய்த போது, சுவனத்தின் வாசலில் ஆதம் (அலை) அவர்கள் பார்த்ததாக சொல்லப்படும் ‘லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸுலுல்லாஹு என்ற கலிமாவில் உள்ள முஹம்மது (ஸல்) அவர்களின் பொருடடால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு என்று கூறியதால் தான் அல்லாஹ் அவரை மன்னித்ததாக சிலர் எணணிக் கொணடிருக்கின்றனர். ஆனால் இக்கருத்து தவறானதாகும். இக்கருத்தை தலாயிலுன்னுபுவ்வத் என்ற நூலில் இமாம் பைஹகி அவர்களும், முஸ்தக்ரக் என்ற நூலில் இமாம் ஹாகிம் அவர்களும், முஸ்ஸ முக்ஸகீர் என்ற நூலில் இமாம் தப்ரானி அவர்களும் இதை பதிவு செய்துள்ளனர். இந்த இமாம்கள் இந்த செய்தியை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் மக்களிடைய பரப்பப்பட்ட இந்த செய்தி நம்பகமானது இல்லை என்றும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

    இதனை தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் பைஹகி அவர்கள், இந்த ஹதீஸ் அப்துரரஹ்மான் இப்னு ஜைது இப்னு அஸ்லம் என்பவர் முலமாக மட்டுமே அறிவிக்கப்படுகிறது. “அவர் பலவீனமானவர், ஏற்கத்தக்கவர் அல்லர்” என்று கூறி அந்த ஹதீஸின் தரத்தையும் நமக்குச் சொல்லி விடுகிறார்.

    இச்சம்பவத்தை பதிவு செய்துள்ள இன்னொரு நூலாசிரியர் இமாம் ஹாகிம் அவர்கள் தனது ‘மஹ்ரிபத்துஸ் ஸஹீஹ் மினஸ்ஸகீம்’ என்ற நூலில் இந்த அப்துர் ரஹ்மான் தன் தந்தை கூறியதாக ஏராளமாக இடடுக் கடடியவர் என்று இவரை அடையாளம் காட்டி இருக்கிறார்கள்.

    “இந்த அப்துர் ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்லர். இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது” என்று ஹதீஸ் கலையின் மாமேதைகள் இமாம் அல்லாமா அல்ஹாபிழ் தஹபி அவர்கள், தங்களின் மீஸானுல் இஃதி தால் என்ற நூலிலும், அல்லாமா அல்ஹாபிழ் இப்னு ஹஜருல் அஸ்கலானி அவர்கள் தங்களின் அல்லிஸான் என்ற நூலிலும் மேற்கூறப்படட ஹதீஸை பரிசீலனை செய்து அதன் தராதரத்தை கூறியிருக்கிறார்கள்.

    இதைத்தவிர இப்னு ஜவ்ஸி, அலி இப்னுல் மதனீ இப்னு ஸஃது தஹாபி, இமாம் இப்னு ஹிப்பான், ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா போன்ற அறிஞர்களும் முறையே அப்துரரஹ்மான் மிக மிக பலவீனமானவர், இவர் செய்திகளைத் தலைகீழாக மாற்றக் கூடியவர் என்று கூறிவிடடு, இவர் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ்களை நிராகரித்துள்ளனர். எனவே மேற்கூறப்படட ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்பது தெளிவாகிறது.

    சரி! அப்படியென்றால் எந்த வாசங்களைக் கூறியதால் அல்லாஹ் ஆதம் அலை அவர்களை மன்னித்தான்? இதற்கான விடையை அல்லாஹ்வே தன் திருமறையில் கூறுகிறான்.

    “அப்போது ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அறிந்து) கொண்டார். (அந்தச் சொற்கள் முலம் மன்னிப்பு கேடடார்) அவரை அவன் மன்னித்தான்” (அல்குர்ஆன் 2:37)

    இந்தத் திருக் குர்ஆன் வசனத்தில் கூறப்படும் சில வார்த்தைகள் என்ன என்பதை திருக்குர்ஆனில் ஆராயும் போது, ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் தங்களை மன்னிக்க வேணடி இறைவனிடம் கேடட துஆவை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறான்.

    “அவ்விருவரும் எங்கள் இறைவா நாங்கள் எங்களுக்கே தீங்கிழைத்துக் கொணடோம்! நீ எங்களை மன்னித்து அருளவில்லையாயின் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாவோம் என்று கூறினார்கள்”
    (அல்குர்ஆன் 7:23).

    அதாவது, இறைவனிடமிருந்து அவர்கள் கற்றுக் கொண்ட சொற்கள் 7:23 வசனம் தான். இதைத் தான் அவ்விருவரும் கூறி மன்னிப்பு கேடடிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும் திருக்குர்ஆனின் மிகச் சிறந்த விரிவுரையாளர் என்று கூறப்படும் இமாம் இப்னு கதீர் போன்ற பெரும்பான்மையான திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் இதனையே கூறுகின்றனர். (பார்க்கவும் தப்ஸீர் இப்னு கதீர் விரிவுரை : http://www.tafsir.com/default.asp?sid=7&tid=17618 )

    அடுத்து வஸீலா என்றால் என்ன? என்று பார்ப்போம். இது மிக நீண்ட தலைப்பிலுள்ள பாடம் ஆகையால் சுருக்கமாக வஸீலா என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

    “மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்தது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர் பாராதவிதமாக) பெரும்பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், ‘நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று தூய்மையான முறையில் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை (வசீலாவாக – துணைச் சாதனமாக)க் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இந்தப் பாறையை நம்மைவிட்டு அகற்றி விடக் கூடும்” என்று பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருவர் இவ்விதம் இறைவனிடம் மன்றாடலானார்;

    இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்காக நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து என் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் தாய் தந்தையர்க்கு அதைப் புகட்டுவேன். ஒரு நாள் நான் தாமதமாகத் திரும்பி வந்தேன். (நான் வீட்டை அடைந்தபோது) நெடு நேரம் கழிந்து இரவாகி விட்டிருந்தது. (என் தாய் தந்தை) இருவரும் உறங்கி விட்டிருக்கக் கண்டேன். வழக்கமாக நான் கறந்து வந்ததைப் போன்றே அன்றைக்கும் (ஆட்டுப்) பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிட மனமில்லாமல் அவர்களின் தலைமாட்டில் நின்று கொண்டேன். என் (தாய் தந்தையர்க்கு முதலில் புகட்டாமல் என்) குழந்தைகளுக்கு முதலில் புகட்டிட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தைகளோ (என்) காலுக்கு அடியில் பாலுக்காக அழுது பரிதவித்துக் கொண்டிருந்தனர்.

    இதே நிலையில் வைகறை நேரம் உதயமாம்விட்டது. நான் இச்செயலை உன் திருப்தியை நாடியே செய்திருக்கிறேன் என்று நீ கருதினால் எங்களுக்கு இந்தப் பாறையை சற்றே நகர்த்திக் கொடுப்பாயாக! அதன் வழியாக நாங்கள் வானத்தைப் பார்த்துக் கொள்வோம்.

    அவ்வாறே அல்லாஹ் (அவர்களுக்கு) சிறிதளவு நகர்த்தித் தந்தான். அதன் வழியாக அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.

    மற்றொருவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:

    இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி – முறைப்பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன்.

    நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரண்டு கால்களுக்கும் இடையே அமர்ந்தபோது அவள், ‘அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மண பந்த) உரிமையின்றி திறக்காதே” என்று கூறினாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த) இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களைவிட்டு (இன்னும்) சற்று நீக்கி விடுவாயாக!

    உடனே, பாறை இன்னும் சற்று விலகியது.

    மூன்றாமவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:

    இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்துக் கூலியாள் ஒருவரை வேலை செய்ய அழைத்துச் சென்றேன். அவர் தம் வேலை முடிந்தவுடன், ‘என்னுடைய உரிமையை (கூலியைக்) கொடு” என்று கேட்டார். நான் (நிர்ணயம் செய்திருந்த) அவரின் கூலியை அவர் முன் வைத்தேன். அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். (அவர் சென்றபின்) அதை நான் தொடர்ந்து நிலத்தில் விதைத்து விவசாயம் செய்து வந்தேன். எதுவரையென்றால் அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும் இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். சில காலங்களுக்குப் பிறகு அந்த மனிதர் (கூலியாள்) என்னிடம் வந்து, ‘அல்லாஹ்வுக்கு அஞ்சு” என்று கூறினார். நான் அவரிடம், ‘அந்த மாடுகளிடமும் இடையர்களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்” என்றேன். அதற்கு அம்மனிதர், ‘அல்லாஹ்வுக்கு அஞ்சு என்னைப் பரிகாசம் செய்யாதே” என்று கூறினார். நான், ‘உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. நீ இவற்றை எடுத்துக் கொள்ளு என்று பதிலளித்தேன். அவர் அவற்றை எடுத்துச் சென்றார். நான் இந்த நற்செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்திருந்ததாக நீ கருதினால் மீதமுள்ள அடைப்பையும் நீக்குவாயாக!

    (இந்தப் பிரார்த்தனையைச் செவியற்றவுடன்) அல்லாஹ் (அப்பாறையை முழுவதுமாக அகற்றி) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

    எனவே வஸீலா என்பதற்கு நற்செயல்களைக் கொண்டு துஆ கேட்கவேண்டுமே தவிர ஒரு இறை நேசரையே அல்லது நபிமார்களின் பெயரையோ குறிப்பிட்டு அவர் பொருட்டால் என்று கேட்பதற்கு இஸ்லாத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை! மேலும் இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

    அல்லாஹ் கூறுகிறான் : –

    “அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது! இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
    (அல்-குர்ஆன் 39:3).

    தயவு செய்து இங்கு சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை http://islamkural.com/downloads/Ibnu_thaimiya.pdf கிளிக் செய்து ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் ‘வஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்’ என்ற நூலை பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள்! வஸீலா என்பதற்கு இமாம் அவர்கள் மிக விரிவான விளக்கம் அளித்திருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் அதன் மூலம் நாம் அதில் தெளிவு பெறலாம்.

    மேலும் இந்த இணைப்பைக் http://www.suvanathendral.com/avpage/qa/waseela.html கிளிக் செய்து வஸீலா என்றால் என்ன? என்பதன் ஆடியோ விளக்கத்தைக் கேட்டுத் தெளிவு பெறுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    அடுத்து தங்களின் கருத்துக்களான,

    //but we r not doing sirqh we know about allah and avliyakal //

    //we r go to pray for masjidh not durga//

    //im sunnathul jamaadh//

    அல்ஹம்துலில்லாஹ்! இணை வைக்கும் இடங்களான தர்ஹாக்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம் கையேந்தி நமது ஈமானை பாழாக்காமல் பள்ளிவாசலுக்கு மட்டும் சென்று, அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனது தூதர் (ஸல்)
    அவர்களின் சுன்னத்துக்களைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களாகிய நாம் அங்கு அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற செயல்கள் நடைபெறுமானால் அவற்றைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காமல் நம்மால் இயன்றவைகளைச் செய்து அந்த மாபெரும் ஷிர்க்கை தடுக்க முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும். ஆமீன்.

    எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.

  5. hajabadrrudeen says:

    rasool(sal)avl pugal vadu like farlu bcz one hadded there one jummah nabi (sal)he was doing bayan thhat time zibrayeel he came and gave 3 oblication one is whoever if hear ur name but he can give replay salavath whoever if not give replay avargal nasamagattum endru sonnar gal allah also say salavath

  6. Burhan says:

    //rasool(sal)avl pugal vadu like farlu bcz one hadded there one jummah nabi (sal)he was doing bayan thhat time zibrayeel he came and gave 3 oblication one is whoever if hear ur name but he can give replay salavath whoever if not give replay avargal nasamagattum endru sonnar gal allah also say salavath//

    அன்பு சகோதரர் ஹாஜா பதுருதீன் அவர்களுக்கு,

    நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும் என்பது இறைவனின் கட்டளை! எனவே தாங்கள் கூறிய ஹதீஸூம் உண்மையானது தான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    அல்லாஹ் கூறுகிறான் : –

    ‘இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்’ (அல்குர்ஆன் 33:56)

    மேலும் நபி (ஸல்) அவர்கள் ஸலவாத்து கூற வேண்டியதன் அவசியத்தைப் பின்வருமாறு கூறுகிறார்கள்: –

    ஃபழாலா இப்னு உபைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ”ஒருவர் தன் பிரார்த்தனையின் போது அல்லாஹ்வைப் புகழாமல், நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து அவரிடமோ, அல்லது மற்றவரிடமோ, ”உங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தால் முதலில் தன் இறைவனைப் புகழ ஆரம்பிக்கட்டும். பின்பு என் மீது ஸலவாத் கூறட்டும்! பின்னர் தான் விரும்பியதை கேட்கட்டும்” என்று கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ).

    அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் ஸலவாத்துக் கூற வேண்டும் என்பதை கட்டாயமாக ஆக்கியிருக்கிறார்களே! அப்படியென்றால் எந்த ஸலவாத்தை, எப்படிக் கூறவேண்டும் என்று நமக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லையா?

    நபி (ஸல்) அவர்களை தங்களின் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பின்பற்றிய சத்திய சீலர்களான ஸஹாபாக்கள் எந்த ஸலவாத்தை ஓதினார்கள்?

    இவற்றையெல்லாம் நாம் ஆராய்ந்தோமேயானால் ஸலவாத்து கூறுமாறு பணித்த நபி (ஸல்) அவர்களே எந்த ஸலவாத்தை ஓதவேண்டும் என்பதையும் நமக்குக் கற்றுத் தந்திருப்பதை நாம் அறியலாம்.

    நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து: –

    ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் மீது ‘ஸலாம்’ உரைப்பதை அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ‘ஸலவாத்’ சொல்வது எவ்வாறு என்று கேட்டோம். இதனை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் ‘அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்’ எனக் கூறும்படி கூறினார்கள் புகாரி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத் – கஃப் இப்னு உஜ்ரா (ரலி).

    ஸலவாத்தின் பொருள்: “இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்பத்தார் மீது நீ அருள் புரிந்தது போல், நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா! இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக! நீயே புகழுக்குரியவன், தகுதிக்குரியவன் ஆவாய்”

    பித்அத்தான ஸலவாத்துகள்: –

    நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்து கூறுவது என்பது இறைவனின் கட்டளையாகும். எனவே அதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எவ்வாறு கற்றுத் தந்தார்களோ அதன்படி தான் நாம் ஸலவாத்து கூறவேண்டும்.

    இன்று நமது சமுதாயத்தவர்களால் பரவலாக ஓதி வரப்படும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஸலவாத்துக்கள் அனைத்தும் பித்அத்தான ஸலவாத்து ஆகும். இவற்றை நாம் தவிர்த்து நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கூறிய ஸவாத்தையே கூறவேண்டும்.

    ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

    ‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.

    இதைத் தவிர நபி (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் அல்லது ஸலவாத்து ஓதுகிறோம் என்ற பெயரில் நபி (ஸல்) அவர்களை அளவுக்கு மீறி புகழ்வதை நபி (ஸல்) அவர்களே தடை செய்துள்ளார்கள்.

    கிறிஸ்தவர்கள் மர்யமின் ஈஸா (அலை) அவர்களைப் புகழ்ந்ததைப் போல நீங்கள் என்னைப் புகழாதீர்கள்! நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதருமாவேன்’. என்று நபி (ஸல்) அவர்கள் நம்மை எச்சரித்திருக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்).

    முஹம்மது (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது அல்லது அவர்களைப் புகழ்வது என்பது நாம் வேறு யாருடைய கருத்துக்களையும் கொள்கைகளையும் பின்பற்றாமல் நபி (ஸல்) அவர்களுடைய சுன்னாவை மட்டுமே முழுமையாகப் பின்பற்றி வாழ்வதாகும்.

    அல்லாஹ் நமக்கு அத்தகைய ஆற்றல்களைத் தந்து நேர்வழி காட்டப் போதுமானவன். ஆமீன்.

  7. Ravoof - BDM says:

    Hi Haja,
    As far as my concern, i have no problem in replying salawat to nabi. What u quoted is verily true. But here the discussion goes is about praying awliah making them intermediate. Masa allah, you are clear in some points and confused in some others. I pray allah to give you to increase your faith and knowledge of islam.

  8. bava bahurdeen t.a. says:

    அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)…..இஸ்லாம் குரல் ஆசிரியர் அவர்களுக்கு ..
    எனக்கு ஒரு சந்தேகம் ……….நமது ஊர்களில் அவ்லியாவின் கராமத்துகளை பற்றி பேசி புகழ் பாடுகிறார்கள் ………..எனக்கு கராமதுக்களை பற்றி விளக்கம் தாருங்கள் …கராமதுக்கள் என்றல் என்ன ?..ஏன் இப்படி மூட நம்பிக்கையுள் இருகின்றனர் …..உண்மையுள் அதற்கு சக்தி உண்டா…விட்டலாச்சாரியார் படம் கதை போல இருகிறதே …நமது அவ்லியாக்கள் வரலாறு ………

    • Jafar Ali says:

      வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)

      அன்பின் பாவா பகுருதீன் காரமத் குறித்தான உங்களுடைய சந்தேகத்திற்குப் பதிலாக ஏற்கனவே இஸ்லாம் குரலில் பதிவு இடம்பெற்றிருக்கிறது. இங்கே சுட்டி அதை காணுங்கள்.

      இந்த கப்ருகளில் நடைபெறும் கராமத் (அற்புதங்கள்) எவ்வாறு இஸ்லாத்தில் யாரால் நுழைக்கப்பட்டது என்பதை சகோதரர் ஏ.சீ முஹம்மது ஜலீல் (மதனீ) அழகாக விளக்கம் கொடுத்திருப்பதையும் இங்கே பாருங்கள்.

      அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

  9. bava bahurdeen says:

    அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..சகோதரர் ஜாபர் அலி அவர்களே …நீங்கள் கொடுத்த அந்த தளம் புரியும் வகையில் இருந்தது ..அல்ஹம்துலில்லாஹ் ….”கராமத்” என்பது அல்லாஹ் தான் நேசிக்கும் அடியார்களுக்கு கொடுக்கும் அற்புதம் என்று தெரிகிறது ….
    உண்மையான அடியான் அதை வெளிப்படுத்தி பெருமை சேர்க்க மாட்டான் …
    சிலர் அவ்லியாக்கள் என்ற போர்வையுள் மக்களை ஏமாற்றி ஆதாயம் தேடி சென்றிருக்கிறார்கள்.

  10. Jafar Ali says:

    வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)

    தங்களுடைய புரிதலுக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி! அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக! ஆமீன்!!!

  11. bava bahurdeen says:

    அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)…
    தவ்ஹீது என்றால் ஒரு இயக்கம் என்று தான் பல நம் இஸ்லாமிய மக்கள் நினைகின்றனர். அதன் அர்த்தம் தெரிந்த நண்பர்களும் இதே போன்று பேசுகின்றனர் நான் ஒரு தவ்ஹீது வாதி என்றால், இவன் அந்த (தவ்ஹீது) இயக்கத்தில் உள்ளவன் என்று பேசுகின்றனர். தவ்ஹீது என்பது நம் இஸ்லாமிய அடிப்படை கொள்கை அல்லவா! அதை கூட புரிந்துகொள்ளாமல் நாங்கள் இந்த ஜமாஅத்தை சார்ந்தவர்கள் அந்த ஜமாஅத்தை சார்ந்தவர்கள் என்று கூறிவிட்டு நீங்கள் தான் பிரிவினைவாதிகள் என்று கூறுகின்றனர். இவர்களை நாம் என்ன செய்வது? சுன்னத்துல் ஜாமஅத்தை தோற்றுவித்தது யார்? தவ்ஹீது வாதிகள் அனைவரும் நமது நாயகம் முஹம்மத் நபி (ஸல் ) அவர்களின் சுன்னத்தை கடைபிடிப்பது இல்லையா? ஏன் இந்த மக்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இந்த விசயத்தில் வேற்று மதத்தை நுழைப்பது போல நடந்து கொள்கிறார்கள் இவர்களை திருத்த என்னதான் வழி ?

  12. Burhan says:

    அன்பு சகோதரர் பாவா பகுருதீன் அவர்களுக்கு,

    நம்மில் பலர் தாங்கள் இணைந்திருக்கும் இயக்கத்தின் பெயரையோ அல்லது சார்ந்திருக்கும் கொள்கைகளின் பெயரையோ கூறிக் கொள்வதிலேயே பெருமிதம் கொள்கின்றனர். இந்த வகையில் தங்களை

    சிலர் தவ்ஹீதுவாதி என்றும்
    சிலர் சுன்னத் வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என்றும்
    சிலர் ஷாபி, ஹனபி மத்ஹப்களைச் சேர்ந்தவர் என்றும்
    சிலர் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என்றும்
    சிலர் பல தரீக்காக்களின் பெயரைச் சொல்லி அவற்றைச் சேர்ந்தவர் என்றும்
    இது போல் இன்னும் பல பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்வதிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

    ஆனால் இவைகள் எல்லாம் நமக்கு நாமே சுட்டிக் கொண்ட பெயர்களேயன்றி வேறில்லை. ஆனால் நம்மைப் படைத்துப் பரிபாலித்துவரும் நம் இறைவன் நமக்கு இட்ட பெயர் ‘முஸ்லிம்கள்’ என்பதாகும்.

    அல்லாஹ் கூறுகிறான் :

    “ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்” (அல்-குர்ஆன் 22:77-78)

    அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையில் நம்புகின்ற ஒருவர் இவ்வித பிரிவுகளில் பெருமை கொள்வதை விட்டு விட்டு இறைவன் நமக்கு சூட்டிய பெயராகிய “முஸ்லிம்கள்” என்று கூறிக்கொள்வதையே விரும்ப வேண்டும். அந்த அடிப்படையில் மட்டுமே பிரிந்து சின்னாபின்னமாகியிருக்கும் முஸ்லிம்களை ஒன்று சேர்க்க முடியும்.

    அல்லாஹ் கூறுகிறான்: –

    “இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்’ (என்றும் கூறினோம்). ஆனால், அச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்” (அல்-குர்ஆன் 23:52-53)

  13. bava bahurdeen says:

    அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்),,,,,,,,
    சகோதரர் Burhan அவர்களே..தாங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. நாம் அனைவரும் “முஸ்லிம்கள் ” என்ற சகோதரத்துடன் இருந்தால் நமது சமுதாயத்தில் எந்த ஒரு கருத்து வேறுபாட்டிற்கு இடமின்றி, வேற்றுமையை கலைந்து ஒற்றுமையுடன் வாழ முடியும். இன்ஷா அல்லாஹ் அது போன்ற ஒரு நிலை உருவாக நாம் அனைவரும் சகல வல்லமையும் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்தாலாவிடம் பிராத்தனை செய்வோம். ஆமின்!!!

  14. bava bahurdeen says:

    அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)…அன்பு சகோதரர் burhan அவர்களே …”முரீது” என்றால் என்ன ? அதை பற்றி எனக்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ……எனக்கு தெரிந்த சில பெரியவர்கள் தான் “முரீது”..வாங்கியவர் என்று கூறுகின்றனர் ……….அது எதற்கு கொடுக்கும் பட்டம் ……..? இல்லை அது ஒரு சக்தியா……?

  15. Burhan says:

    அன்பு சகோதரர் பாவா பகுருதீன் அவர்களுக்கு,

    வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.

    முரீது என்பது சூபியிஸம் மற்றும் தப்லீக் ஜமாஅத் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும்.

    இஸ்லாத்தில் தஸவ்வுஃப் என்னும் ஆன்மிக நெறிமுறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது.

    இந்த வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே இஸ்லாத்தில் புதிய கொள்கைளைப் புகுத்தினர். அதாவது ஒருவர் மோட்சம் அடைய வேண்டுமென்றால் அவர் ஷரீஅத்தைப் பின்பற்றுவதோடல்லாமல் இன்னும் மூன்று படித்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவைகளாவன: 1) தரீகத் 2) ஹகீகத் 3) மஃரிபத் ஆகியனவாகும்.

    இவற்றை அடைய வேண்டுமானால் ஒருவர் தனது ஆசா பாசங்கள் அனைத்தையும் துறந்து சன்னியாசம் பூண்டு இறை தியானத்தில் ஈடுபட வேண்டும். உலக ஆசையை துறப்பதற்கு சாதாரண மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்துக் கொண்ட இவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று படித்தரங்களையும் கடந்து சென்ற ஸூஃபிகளிடம் பைஅத், முரீது வாங்கிக் கொண்டால் போதுமானது! அவர்களை அந்த ஷெய்குகள் கரையேற்றி ஈடேற்றம் அளித்துவிடுவார்கள் என்று பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையில் உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்தனர் இந்த போலி ஸூஃபிகள்.

    முரீது வாங்கிய ஒருவர் தன்னுடைய ஷெய்குவிடம் குளிப்பாட்டுபவனின் கையில் கிடக்கும் மைய்யித்தைப் போல இருக்க வேண்டுமாம். அதாவது தன்னுடைய ஷெய்கு எதைச் செய்தாலும் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதாம். மேலும் முரீது கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்த போலி ஷெய்குகள் தங்களின் பக்தர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத சில திக்ருகளைக் கற்றுத் தருகின்றனர். முரீது வாங்கியவர்கள் இந்த திக்ருகளை ஓதிவந்தால் போதுமாம்! அவர்கள் மோட்சம் அடைந்து விடுவார்களாம். இன்னும் சிலர் தொழுகைக்கு கூடச் செல்வதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் செய்கு எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுவார் என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

    இன்னும் வழிகெட்ட சிலர் ஆபத்துக் காலங்களில் தங்களுக்கு முரீது வழங்கிய ஷெய்குகளை, பீர்களை அவர்கள் தங்களின் கண்காணாத தூரத்தில் இருந்தாலும் யா செய்கு அல்லது யா பீர் அவுலியா என்று அவர்களை அழைத்து உதவி தேடுகின்றனர். இவைகள் எல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தையே அசைக்கின்ற ஷிர்க்கான செயல்களாகும்.

    இந்தக் கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் என்பது திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழிமுறைகளைப் பின்பற்றுவதுமேயாகும். ஸூஃபியிஸம் பற்றி விரிவாக அறிவதற்கு ஏ.சி. முஹம்மது ஜலீல் மதனி அவர்கள் எழுதிய சூபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும் என்ற நூலை பதிவிறக்கம் செய்து படித்துப்பாருங்கள். ( http://islamkural.com/downloads/soofi.pdf )

    அல்லாஹ் நம்மனைவருக்கும் அவனுடைய நேர்வழியைக் காட்டி, பித்அத் போன்றவற்றை தவிர்ந்தவர்களாக வாழ்வதற்கு அருள்புரிவானாகவும். ஆமீன்.

  16. bava bahurdeen says:

    அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

    சகோதரர் BURHAN அவர்களே நீங்கள் தொகுத்து கொடுத்த அந்த விளக்கம் போதுமானதாக இருந்தது. இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தை பற்றி விளக்கி கூற உங்களை போல பல சீர்திர்ருத்த வாதிகள் இருந்தும் நம் மக்கள் இன்னும் தெளிவு பெறாமல் மூட நம்பிக்கைகளில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தனது அறியாமையின் காரணமாக சின்ன பின்னமாகிக் கொண்டிருக்கின்றனர்.

    இப்பொழுது நான் சொல்ல இருப்பது நானாக திரித்த கட்டுக்கதை அல்ல. என்னை படைத்த அல்லாஹுவின் மீது ஆணையாக நமது சமுதாயத்தில் நடக்கின்ற சம்பவம்.
    எனது நண்பன் ஒரு “தரீக்கா” வாசி அவன் கூறுவதாவது:

    எங்களின் உஸ்தாது நாங்கள் எங்கிருந்தாலும் எங்களை கண்காணித்து நேர்வழி படுத்திக்கொண்டு இருக்கிறார். நாளை மறுமையில் எங்களை சுவர்கத்திற்கு அழைத்து செல்வார் என்று அடித்து கூறுகிறான். அவன் ஒரு படித்த பட்டதாரி. இப்படி பட்டவர்களை நாம் என்ன செய்வது ………….?

    இன்னும் பல நபர்கள் அவர்களின் பேச்சை கேட்டு நல்வழி கிடைக்கும் ,குடும்பத்தில் நல்ல பரக்கத் ஏற்படும், வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற தவறான எண்ணத்தில் அவர்களை சென்று மாதம் தோறும் பார்த்து வருகின்றனர். அந்த உஸ்தாது இருக்கும் இடமோ நமது அண்டை மாநிலம். நீங்களும் அந்த விஷயத்தை பற்றி அறிந்திருப்பீர்கள் என நான் நினைக்கிறேன்.

    இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவரது வயதை யாரும் அறிய முடியாதம். அவர் சிலநேரங்களில் வாலிபர்போல தோற்றம் அளிக்கிறார் என்றும் சில சமயம் வயது முதிர்ந்தவர் போல இருக்கிறார் எனவும் கூறுகின்றனர். அவர் ரசூல் (ஸல் ) வழியை சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர். அவர் கூறியதற்காக எங்கள் ஊரில் தனி பள்ளிவாசல் ஒன்றை கட்டியுள்ளனர்.

    மேலும் அந்த நண்பன் கூறியது: நானும் உன்னை போலதான் இருந்தேன் அவரை பற்றி கேள்விபட்டதும் அவரை சென்று நேரில் பார்த்தும் எனக்கு எல்லாம் எண்ணமும் மாறிவிட்டது. அந்த உஸ்தாது நாங்கள் அமர்ந்திருந்த கூட்டத்தை பார்த்து கூறினார். இங்கு வந்திருக்கும் ஒருவன் என் மேல் நம்பிக்கை இல்லாமல் வந்திருக்கிறான் என்று. அதை கேட்டதும் என் மனநிலை மாறிவிட்டது என்று கூறுகிறான். இன்னும் பல செய்திகளையும் அவன் என்னிடம் கூறினான். நான் அவனிடம் கூறினேன் சாதரண குறிகாரன்கூட தான் இதுபோல வித்தைகள் செய்வான் அதற்கு நாம் அவனை பின்பற்றி விடமுடியுமா? என்றேன். நீயும் வந்து அவரை சந்தித்தால் இதுபோல பேச மாட்டாய் என்கிறான்

    இவர்களுக்கு நாம் எந்த ஒன்றை எடுத்து கூறினாலும். வீண் தர்க்கம் செய்கிறீகள். இது சைதானுடைய வேலை. உங்கள் வழியை நீங்கள் பாருங்கள். எங்கள் வழியை நாங்கள் பார்த்துகொள்கிறோம். பிடிக்கவிட்டால் ஒதுங்கிவிடுங்கள் என்கின்றனர். அல்லாஹ்தான் இவர்களை நேர்வழி படுத்த வேண்டும்.

    நமது சமுதாயத்தில் நடக்கும் சில அநாச்சாரமான விஷங்களை கண்டால் மனம் அவற்றை ஏற்றுகொள்ள மறுக்கிறது. நாம் சத்தியத்தை கூறிடவும் ,உண்மையை எடுத்துரைக்கவும் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நாம் அஞ்ச வேண்டியது நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்தாஆலா ஒருவனுக்கே!

    நமது கருத்தை எடுத்து கூறிடவும், இஸ்லாத்தில் உள்ள கோட்பாடுகளை, சத்தியத்தை மக்கள் தெளிவாக, தகுந்த ஆதாரத்துடன் பொருள்பட விளங்கிடவும் இந்த இஸ்லாம் குரல் இணைய தளம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. அதற்கு நாம் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிற்கு நன்றி சொல்ல கடமைபட்டிருகிறோம்.

    எங்களது கேள்விகள் மற்றும் இஸ்லாம் சம்மந்தமான கருத்துக்களை தெரிவிக்கவும் இந்த இணைய தளத்தின் மூலம் எங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் இந்த இஸ்லாம் குரல் ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த பணி மேன்மேலும் தொடர அல்லாஹுதாஆலாவிடம் துவா செய்கிறேன். ஆமின்!

Comments are closed.