தலைவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வழிபட்டு, நஷ்டவாளிகளான மக்கள்.

அல்குர்ஆன் அல்கஹ்ஃப் 102-ல், நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

103,(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

104, யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.

105, அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள் அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும் மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.

106, அதுவே அவர்களுடைய கூலியாகும் – (அது தான்) நரகம் – ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள் என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.

மற்றும் அல்-அஹ்ஜாப் 21, அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

36-ல், மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

66-ல், நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ”ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே, இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.

67-ல், ”எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

68-ல், ”எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக, அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்).

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.

1 Response to தலைவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வழிபட்டு, நஷ்டவாளிகளான மக்கள்.

  1. Jafar Ali says:

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அன்பின் மார்க்க சகோதரர்களுக்கு…
    பிரசுரிக்கப்படும் பதிவுகளுக்கு அழகிய முறையான விவாதத்தை விடுத்து, நெறி தவறிய வார்த்தை பிரயோகங்களும், இன்னும் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத திசை திருப்பும் பின்னூட்டங்களும் நிராகரிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பின்னூட்டம் இடும் சகோதரர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு சொல்லாகட்டும், செயலாகட்டும் அழகிய வழிமுறையைக் கற்றுக் கொடுத்த முஸ்லிம்கள் என்பதை நினைவிற்க் கொள்ளவும்.

    என்றும் அன்புடன்
    Jafar Ali

Comments are closed.