946. ஃபாத்திமா பின்த் கைஸிற்கு என்ன நேர்ந்தது? ‘(மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ‘இத்தா’வின் போது) உறைவிடமோ ஜீவனாம்சமோ (கணவன் அளிக்கவேண்டியது) இல்லை” என்று கூறுகிறாரே! அவர் அல்லாஹ்வை அஞ்சக் கூடாதா? என ஆயிஷா (ரலி) கேட்டார்கள்.
947. நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘அப்துர் ரஹ்மான் இப்னு அல்ஹகமுடைய புதல்வியான இன்னவளைப் பார்த்தீர்களா? அவரை அவரின் கணவர் ஒட்டுமொத்தத் தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் ‘இத்தா’ இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே!” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) ‘அவர் செய்தது தவறு” என்றார்கள். நான் ஃபாத்திமா பின்த் கைஸ், (தான் மற்றோர் இடத்தில் ‘இத்தா’ இருந்தது பற்றிக்) கூறிவருவதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘இச்செய்தியைக் கூறி வருவதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை என்பதைப் புரிந்துகொள்!” என்று கூறினார்கள்.