யாசகம் தவிர்.

615. ‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என முஆவியா (ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

புஹாரி : 71 முஆவியா (ரலி).


616. ‘ஓரிரு கவளம் உணவுக்காக அலைபவன் ஏழையல்லன். மாறாக தன் வாழ்க்கைக்குப் பிறரிடம் கேட்க வெட்கப்படுகிறவனும், அல்லது (அப்படிக் கேட்டாலும்) கெஞ்சிக் குழைந்து கேட்காதவனுமே ஏழையாவான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” .

புஹாரி : 1476 அபூஹுரைரா (ரலி)


617.”(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1474 இப்னு உமர் (ரலி)


618.”பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2075 அபூஹுரைரா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.