349– நபி (ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள்? என்று நான் கேட்டேன். இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப் படுவது போல் என் தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக! என்று நான் கூறுவேன் என்றார்கள்.
புஹாரி-744: அபூஹுரைரா (ரலி)