நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளது- என்று இறைவன் கூறும் வசனம் எது?

கேள்வி எண்: 100. நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக விட்டு வைக்கப்படடுள்ளது- என்று இறைவன் கூறும் வசனம் எது?

பதில்:
54:15 (சூரா அல் கமர்-சந்திரன்)

وَلَقَد تَّرَكْنَاهَا آيَةً فَهَلْ مِن مُّدَّكِرٍ

நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (54:15)

அதை தற்போதைய ஆராய்ச்சியாளாகள், ரஷ்ய எல்லை (ஆர்மினீயா) அராரத் மலைத்தொடரான வடமேற்குப் பகுதியில், 14,000 அடி உயரத்தில் ஜுதி என்னும் பனிமலையில் சிக்கியுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்கள். திருக் குர்ஆனும் 11:44 என்ற வசனத்தில் ஜுதி மலைமீது அக்கப்பல் தங்கியதாக கூறுகிறது. எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.

وَقِيلَ يَا أَرْضُ ابْلَعِي مَاءكِ وَيَا سَمَاء أَقْلِعِي وَغِيضَ الْمَاء وَقُضِيَ الأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ وَقِيلَ بُعْداً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

பின்னர்; “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது – அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. (11:44)

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.

1 Response to நூஹ் நபியின் கப்பல் அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளது- என்று இறைவன் கூறும் வசனம் எது?

Comments are closed.