Monthly Archives: December 2008

நிராகரிப்போர் முகத்தால் நடத்தல்.

1789. ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! இறை மறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?’ என்று (பதிலுக்குக்) கேட்டார்கள். (இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on நிராகரிப்போர் முகத்தால் நடத்தல்.

நரகவாசி வேதனையிலிருந்து விடுபட.

1788. (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ‘ஆம்”என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், ‘நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நரகவாசி வேதனையிலிருந்து விடுபட.

மறுமை நாள் (அத்தியாயம்-5)

மரணமும், அதனைத் தொடரும் (B)பர்ஜக் வாழ்வும் மரணம் யாராலும் தவிர்ந்து கொள்ள முடியாததொரு நிகழ்வு. மனிதனின் இயலாமையைத் தெளிவாகக் காட்டும் உண்மை. அவனால் என்றுமே அம்மரணத்தை வெற்றிக் கொள்ள முடியாது. அது ஓர் பயங்கர அனுபவம். எனவே, எல்லா மனிதர்களையும் அந்த மரண பயம் பீடித்தவாறே உள்ளது. அனைவரும் இதனை இயன்றளவு பிற்போட முயற்சிக்கின்றனர். இத்தகைய … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | 2 Comments

அல்லாஹ்வை விட பொறுமையாளன் இல்லை.

1787. மன வேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு ‘யாருமில்லை’ அல்லது ‘ஏதுமில்லை’ மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6099 அபூ … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on அல்லாஹ்வை விட பொறுமையாளன் இல்லை.

சந்திரன் பிளத்தல்.

1784. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். புஹாரி : 3636 இப்னு மஸ்ஊத் (ரலி). 1785. மக்காவாசிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on சந்திரன் பிளத்தல்.

புகை.

1783. (குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படட்டும்’ எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவிற்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , , | Comments Off on புகை.

நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்கும் போது வேதனை இறங்காது.

1782. (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!” என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்கும் போது வேதனை இறங்காது.

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.

1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்’ என்றார். அவர்களின் இன்னொருவர் ‘அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , , | Comments Off on யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.

சுவன வாசிகள் பெறும் மகிழ்ச்சி.

1778. நபி (ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்” என்று கூறினார்கள். … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on சுவன வாசிகள் பெறும் மகிழ்ச்சி.

கியாம நாளில் மரித்தோரை உயிர்ப்பித்தல்.

1777. (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல் (ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் ‘அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , , | Comments Off on கியாம நாளில் மரித்தோரை உயிர்ப்பித்தல்.