Monthly Archives: February 2008

போரின்றி கிடைக்கும் வெற்றிப் பொருட்கள்.

1146. பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) குதிரைகளையோ, ஒட்டகங்களையோ செலுத்திப் போரிட்டிருக்கவில்லை. எனவே, அவை அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் தங்களின் ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on போரின்றி கிடைக்கும் வெற்றிப் பொருட்கள்.

இறைத்தூதர்கள்!

அல்லாஹ் மனிதரை நல்வழிப்படுத்த பல வேதங்களை அருளினான் என முன்னர் பார்த்தோம். அத்துடன் அவன், “நீங்கள் எப்படியும் இந்த வேதங்களை புரிந்து, எப்படி வேண்டுமானாலும் பின்பற்றுங்கள்” என்று மனிதரை நட்டாற்றில் விடவில்லை. மாறாக, இவ்வேதங்களைத் தெளிவாக புரிந்து, அவற்றுக்கேற்ப வாழ்ந்து, ஈருலக நற்பயன்களைப் பெறுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்து, முன்மாதிரியாக வாழும் மனிதபுனிதர்களை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on இறைத்தூதர்கள்!

போரில் கொல்லப்பட்டவனின் உடமை கொன்றவனைச் சாரும்.

1144. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க்களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவியது. (அவர்கள் தோல்வியுற்றனர்.) நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து அவரைக் கொல்ல முயன்றான். நான் சென்று அவனைச் வாளால் அவனுடைய (கழுத்துக்குக் … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on போரில் கொல்லப்பட்டவனின் உடமை கொன்றவனைச் சாரும்.

போர் வெற்றிப் பொருட்கள் ஆகுமானது.

1141. இறைத்தூதர்களில் ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், ‘ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on போர் வெற்றிப் பொருட்கள் ஆகுமானது.

நரகத்திற்கு எத்தனை வாசல்கள் அவற்றின் பெயர்கள் என்ன?

கேள்வி எண்: 68. நரகத்திற்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்? அவைகளின் பெயர்களைக் கூறுக.

Posted in கேள்வி பதில் | Comments Off on நரகத்திற்கு எத்தனை வாசல்கள் அவற்றின் பெயர்கள் என்ன?

நிராகரிப்போரின் உடமைகளை தீயிட்டுக் கொளுத்துதல்.

1140. (கொடுஞ்செயலாளர்களுமான) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) புவைரா தோட்டத்தை எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள். எனவேதான் ‘நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படிவிட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)” … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on நிராகரிப்போரின் உடமைகளை தீயிட்டுக் கொளுத்துதல்.

இம்ரானின் சந்ததிகள்!

3:33. ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான். 3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் – மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இம்ரானின் சந்ததிகள்!

போரில் பெண்கள் குழந்தைகளை கொல்லத் தடை.

1138. நபி (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள். புஹாரி : 3014 இப்னு உமர் (ரலி). 1139. ‘அப்வா’ என்னுமிடத்தில் அல்லது ‘வத்தான்’ என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , | Comments Off on போரில் பெண்கள் குழந்தைகளை கொல்லத் தடை.

வேதங்கள்!

அல்லாஹ், உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன: 

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on வேதங்கள்!

போர்க்களத்தில் பொறுமை.

1136. எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3026 அபூஹுரைரா (ரலி). 1137. நான் உமர் இப்னு உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ … Continue reading

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged , , , , , | Comments Off on போர்க்களத்தில் பொறுமை.